கேரமல் ஸ்பாஞ்ச் கேக்

தேதி: September 18, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெண்ணெய் - 100 கிராம்
மைதா - 100 கிராம்
சர்க்கரை - 100 கிராம்
முட்டை - 2
பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்
பன்னீர் எசன்ஸ் - சில துளிகள்
பால் - ஒரு டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன்(கேரமல் செய்வதற்கு)


 

மைதா மாவை பேக்கிங் பவுடர் சேர்த்து மூன்று முறை சலித்து எடுத்துக் கொள்ளவும். சர்க்கரையை மிக்ஸியில் போட்டு பொடி செய்து எடுத்து சலித்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
பொடித்து சலித்து வைத்திருக்கும் சர்க்கரையுடன் வெண்ணெயை போட்டு ப்ளண்டர் அல்லது கரண்டியால் நன்கு பஞ்சு போல் மிருதுவாகவும் தூக்கினால் லேசாகவும் ஆகும்வரை கலக்கவும். எவ்வளவு அதிகமாக கலக்குகிறோமோ அந்த அளவிற்கு கேக் மிருதுவாக வரும். கடிகார சுழற்சியில் ஒரே பக்கமாக கலக்க வேண்டும்.
மிக்ஸியில் முட்டையை உடைத்து ஊற்றி நுரை பொங்க அடித்து அதை இந்த வெண்ணெய் கலவையில் ஊற்றி நன்கு கலந்துக் கொள்ளவும். அதனுடன் மைதாமாவை சிறிது சிறிதாக தூவி விட்டு கலக்கவும்.
அதிக கெட்டியாக இருந்தால் அதில் பால் மற்றும் எசன்ஸ் சேர்த்து ப்ளண்டரைக் கொண்டு கலந்துக் கொள்ளவும்.
ஒரு சிறிய பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு வறுக்கவும். அது டார்க் ப்ரெளன் நிறம் வந்ததும் சிறிது நீர் சேர்த்து கலக்கவும். கேரமல் தயார்.
இந்த கேரமல் கலவையை கேக் கலவையில் ஊற்றவும்.
கேக் கலவையுடன் கேரமல் சேரும்படி மீண்டும் ஒன்றாக நன்கு கலந்துக் கொள்ளவும்.
ஓடிஜியை 100டிகிரி F முன்பே சூடுப்படுத்தி வைக்கவும். பட்டர் பேப்பரை கேக் ட்ரேயில் விரித்து கேக் கலவையை ஊற்றி ட்ரேயின் பாதி அளவுக்கு நிரப்பவும். ட்ரெயின் ஒரு இன்ச் உயரத்திற்கு காலியாக விட வேண்டும். பின்னர் 25 - 30 நிமிடம் வரை பேக் செய்து கேக் வெந்ததும் எடுக்கவும். வெந்ததா என்பதை அறிவதற்கு மெல்லிய குச்சி அல்லது ஊசியால் குத்தி பார்த்தால் ஒட்டாமல் வர வேண்டும் இதுவே கேக்கின் பதம்.
கேக்கை சிறிது நேரம் ஆற விட்டு பின்னர் பட்டர் பேப்பரை நீக்கி விட்டு எடுத்து பரிமாறவும்.
அறுசுவை கூட்டாஞ்சோறு பகுதியில் குறிப்புகள் கொடுத்துவரும் <b>திருமதி. ஸாதிகா</b> அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள கேரமல் ஸ்பான்ஞ் கேக். நீங்களும் இதனை செய்து பார்த்து தங்கள் கருத்தினை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எப்படி இருக்கீங்க.வீட்டில் அனைவரும் நலமா.நோன்பு நேரமாக இருப்பதால் அறுசுவைக்கு வரும் நேரம் குறையு அதனால் என்னால் யாருடனும் சரியா பேச முடியவில்லை.இந்த ஸ்பாஞ் கேக் செய்யனும் போல இருக்கு.நோன்பு முடிந்து செய்து பார்க்கிறேன்.இது ஆமிர் என்று நினைக்கிறேன் அழகாக இருக்கிறார்.

அன்புடன் கதீஜா.

கதீஜா பின்னூட்டத்திற்கு நன்றி .நான் நலம்.நீங்கள் நலமா?இன்ஷாஃப் எப்படி இருக்கின்றார்.வாய்ப்புண் குணமாகி விட்டதா?காய்ச்சல் வந்தாலே சிலருக்கு உஷ்ணம் தாளாமல் வாய்ப்புண் வந்து விடும்.அது ஆமிரே தான்.நோன்பு கழிந்து கேக் செய்து பாருங்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

Keerthi

Vanakkam Shadiqah mdm..ungaludaiya keramel Kek receipe enakku migavum piditirukkirathu..anaal enga country Malaysiavil "Maita mavu illai" naangal ingu gohtumai mavu (wheat flour or kek flour)mavu taan payanpaduthuvum.tayavu seithu Maita mavu eppadi erukkum or atil ennenna mavu vagaigal kalantirukkum ena koora mudiyuma?

tangalin pahtilukaga kattirukkiren..

Thanks&Keerthisvary

Keerthi

கீர்தீஷ்வரி...(உச்சரிப்பது சரியான முறைதானா?)மைதா மாவு எல்லா இடங்களிலும் கிடைக்கும்.அங்கிருக்கும் இந்தியன் ஸ்டோரில் கேட்டுப்பாருங்கள்.பேகிங் பதார்த்தங்களுக்கு மைதா கண்டிப்பாக அவசியம்.கோதுமை மாவில் சரியாக வராது.ஒரு முறை அட்மின் அறுசுவையில் மைதாவைப் பற்றி விளக்கம் அளித்து இருந்தார்.எந்த திரட் என ஞாபகம் இல்லை.
ஸாதிகா

arusuvai is a wonderful website

Mikka nandri shadiqah.
Naan ippagutiyil putiyaval.ippulututan mutal muraiyil taip pannugiren..tamilin ennal taip panna teriya villai.mannikavum.

Naan vasikkum idattil (Malaysia) ellam shop , hypermarket anaittum kadaigalilum kehddu parthu vidden anaal kidaitta padillai.enakku "maita mavil" ennenna mavu vagaigal kalantirukkum ena terintal naan kandu pidittu viduven.

Naan ungalathu samaiyal madrum Jaleela avargalin orusila samaiyal vagaigal seitullem.en kudumpatinar anaivarum virumbi suvaitullanar.

Todarnthu ungal samaiyal kalaigal valara enathu vaaltukkal.

Keerthisvary

Keerthi

it's callled "all purpose flour".hope that helps.

ஹாய் கீர்த்தீஷ்வரி,மைதா மாவு மலேசியாவிலும் கிடைக்கும்.இந்த பெயரில் கேட்டு பாருங்கள்.ஹரிராயா சமயம் என்பதால் நிச்சயம் கிடைக்கும்.
tepung terigu untuk kue dan biskuit அல்லது
tepung serbaguna

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

thanks a lot..now i can able to find out.

Keerthi

கீர்த்தீஷ்வரி,உங்கள் வாழ்த்துக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி.உங்கள் குடும்பத்தினர் அனைவரும் விரும்பி சாப்பிட்டனர் என்ற வரிகள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது.
ஸாதிகா

arusuvai is a wonderful website

வணக்கம் ஸாதிகா நீங்கள் நலமா? கேரமல் ஸ்பாஞ்ச் கேக்கில் நீங்கள் வெண்ணைய் என்று குறிப்பிட்டது பட்டரைத்தானே? மாஜனீனும் பாவிக்களாமா? நாளை இந்தகேக் செய்யலாம் என்று இருக்கிறேன்.உங்கள் பதிலை அறிய ஆவலாக உள்ளேன். நன்றி

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

ஸாதிகா அக்கா சுகமா இருக்கிறீங்களா? எனக்கு ஒரே குழப்பம் இதுதான். என்னவெனில் 100 டிகிரி F என்பது C யில் எவ்வளவு?

வணக்கம் வத்சலா,நான் நலம்.நீங்கள் நலமா?உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி வத்சலா.வெண்ணெய் என்பது பட்டர் தான்.சால்ட் பட்டர் வாங்கி விடாதீர்கள்.
குக்கிங் பட்டர் என் கேட்டு வாங்குங்கள்.சிலர் வெண்ணைக்கு பதில் மார்ஜரின் உபயோகிப்பார்கள்.நான் இது வரை உபயோகித்தது இல்லை.எப்படி இருக்கும் என்று சொல்லத்தெரிய வில்லை.
நாளை இந்த கேக் செய்யலாம் என்றுள்ளேன் எனக் குறிப்பிட்டு இருந்தீர்கள்.எனக்கு உடனே பதில் தர இயலாமல் போய் விட்டது.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ரிகா,குழம்பிக்கொள்ளாதீர்கள்.விளக்குகின்றேன்.100டிகிரி ஃபாரன்ஹீட் என்பது 37 டிகிரி ஸெல்ஸியஸ் .இதை சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.அது உங்கள் கையிலேயே உள்ளது.(நெய்யை கையில் வைத்துக் கொண்டு வெண்ணெய்க்கு அலைந்த கதைதான்.இல்லையா?)
முதலில் உங்கள் மொபைலை எடுங்கள்.என்ன எடுத்து விட்டீர்களா?மெனு செல்லுங்கள்.ஆர்கனைஷர்(organiser) அல்லது அப்ளிகேஷன்(applications) அழுத்துங்கள்.ஒன்றில் இல்லாவிட்டால் மற்றொன்றில் கன் வெர்ட்டர்(converter) என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும்.அதை அழுத்தினால் டெம்பரேச்சர்(temperature) என்ற மற்றொரு ஆப்ஷன் வரும்.ஃபாரன் ஹீட்(fahrenheit) இல் அமவுன்ட் என்ற இடத்தில் 100 என்று டைப் செய்தால் 37 ஸெல்ஸியஸ் என் காட்டும்.என்ன காட்டுகின்றதா?ஃபாரன் ஹீட் இல் இப்பொழுது 120 என டைப் செய்யுங்கள்.இப்பொழுது 48 டிகிரி ஸெல்ஸியஸ்(celsius) காட்டுகின்றதா?இப்படி கணக்கு பார்த்துக்கொள்ளுங்கள்.அனேகமாக எல்லா மொபைலிலும் இருக்கும்.உங்கள் மொபைலில் அந்த வசதி இல்லை என்றால் உருட்டுக்கட்டையை தூக்கிக் கொண்டு வந்து விடாதீர்கள்.உங்கல் ஹஸ்ஸின் மொபைலில் டிரை பண்ணுங்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

வணக்கம் ஸாதிகா நான் நலம். நீங்கள் நலமா? உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி. உங்கள் பதிலைப் பார்த்தவுடன், வெண்ணெய் இருந்தது உடனே இந்தக் கேக் செய்து விட்டேன்.மிகவும் சுவையாக உள்ளது.மகனுக்கும் நன்றாக இந்தக் கேக் பிடித்துள்ளது.உங்கள் இந்தக் குறிப்புக்கு மிக்க நன்றி.நான் செய்யும் கேக்கிற்கு மாஜனீன் தான் போடுவேன். அதனால் தான் நேற்று உங்களிடம் கேட்டிருந்தேன்.இது தான் முதல்தடவை பட்டர் போட்டு செய்வது.இதுவும் நன்றாகத்தான் உள்ளது.இங்கு பேக்கிங் மாஜரீன் உள்ளது.அதைத்தான் வாங்கிப்பாவிப்பேன்.மீண்டும் ஒரு முறை உங்கள் குறிப்புக்கு மிக்க நன்றி.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

வணக்கம் வத்சலா.நான் நலம்.நீங்கள் நலமா?உங்கள் பையன் நலமா?கேக் செய்து பார்த்து உடனே பின்னூட்டம் அனுப்பியதற்கு நன்றி.உங்கள் மகனுக்கும் மிகவும் பிடித்தது குறித்து மகிழ்ச்சி.
ஸாதிகா

arusuvai is a wonderful website