சைனஸ்

சைனஸ் அல்லது சளிக்கு தமிழ் வைத்தியம் சொல்லுவீங்களா? எனது husbandக்கு ஒரே தலை வலியும் மூக்கடைப்பும். spray, puffer எல்லாம் use பண்ணி பாத்தார். நிரந்தரமாக குணமாகவில்லை. ஏதாவது வீட்டு வைத்தியம் இருந்தால் சொல்லுங்க.

எப்படி இருக்கீங்க இன்றுதான் உங்க கூட முதல் தடவையாக பேசுகிறேன்.உங்க ஹஸ்பெண்டுக்கு சைனஸ் இருந்தால் அதுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் எடுக்கனும்.எனக்கு தெரிந்தது தலைவலியால் நான் ரெம்பவும் அவதிப்பட்டேன். அது குளித்துவிட்டு அவசரத்தல் தலையை சரியாக துடைக்க மாட்டேன். அப்ப நம்ம தளிகா தான் விக்ஸ் போட்டு ஆவி பிடிக்க சொன்னார்கள் ஒரு நாள் தான் செய்தேன் தலை வலி காணாமல் போய்விட்டது இது தெரியாமல் நானும் ஒரு வாரம் கஷ்டப்பட்டேன். ஒரு நாளிலே தலைவலி போய்ட்டு நீங்க வேண்டா ட்ரை செய்து பாருங்களேன். முதலில் சைனஸுக்கு தலையில் நீர் சேரவிடாமல் பார்த்துக்கனும்.குளித்தால் கூட நல்ல ஈரமில்லாமல் தலையை துடைக்கனும்.குளிந்த சாமாங்கள் எதுவும் சாப்பிடாமல் இருந்தாலும் இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.மற்றவர்களும் பதில் தருவார்கள்.

அன்புடன் கதீஜா.

ஹை ஜீவீ
சயனெஸ்க்கு தண்ணீரில்கல் உப்பு போட்டு நன்கு கொதிக்கவிட்டுஆவி பிடித்தால் தலை பாரம்,சயனெஸ் எல்லாம் சரி ஆகும். செய்து பர்ர்க்கவும்

ஹை ஜீவீ
சயனெஸ்க்கு தண்ணீரில்கல் உப்பு போட்டு நன்கு கொதிக்கவிட்டுஆவி பிடித்தால் தலை பாரம்,சயனெஸ் எல்லாம் சரி ஆகும். செய்து பர்ர்க்கவும்

ஹய் கதீஜா!
நான் நல்லா இருக்கிறன். உங்க பதிலுக்கு நன்றி. முன்பு விக்ஸ் போட்டு ஆவி பிடித்தவர். பிறகு நிறுத்திற்றார். மீண்டும் செய்யச் சொல்றன்.

ஹய் விஜி!
உங்க பதிலுக்கு நன்றி. உப்பு போட்டு ஆவி ஒவ்வொரு நாளும் பிடிக்கலாமா? செய்து பார்க்கச் சொல்றன்.

ஹாY ஜீவி.
இப்போதான் உஙகள் பதிவை பார்தேன். முதலில் வாரம் இரண்டு நாள் செய்துபர்க்கவும்.சைன்ஸ் குரைவது தெரியும். பின் வாரம் ஓருமுரை செய்துவரவும். எப்போஎலாலம் தலை பாரம் உள்ள்தோ அப்பொது ஆவி பிடிக்கவும். அவ்விதம் செய்து எனக்கு சரி ஆச்சு

நன்றி விஜி
வாரம் இரு முறை செய்யச்சொல்றன்.

மேலும் சில பதிவுகள்