மைதா சிப்ஸ்

தேதி: September 28, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா - 2 கப்
தேங்காய்ப்பால் - 1/2 கப்
உப்பு - சுவைக்கு
சமையல்சோடா - 1 பின்ச்
சீரகம் - 1 டீஸ்பூன்
எள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்கத்தேவையான அளவு
சில்லி ஃபிளேக்ஸ் - 2 டீஸ்பூன்


 

தேங்காய்ப்பாலில் உப்பு, சீரகம், எள், சமையல் சோடா சேர்த்து கலந்து கொள்ளவும்.
மைதாவையும் சேர்த்து சப்பாத்திக்கு போல் பிசைந்து கொள்ளவும்.
2 - 3 மணிநேரம் ஊறிய பின் சாத்துக்குடி அளவு உருண்டைகள் செய்து கொள்ளவும்.
லேசாக எண்ணெய் தடவி மெல்லிய, பெரிய சப்பாத்திகளாக தேய்க்கவும்.
தேய்த்த சப்பாத்தியை சிறிய கத்தியால் சிறு சதுரங்களாகவோ, டைமண்ட் வடிவத்திலோ கட் செய்து சூடான எண்ணெயில் கரகரப்பாக பொரித்து எடுக்கவும்.
அனைத்தையும் பொரித்து எடுத்த பின் சில்லி பிளேக்ஸை சேர்த்து கலந்து வைக்கவும்


சில்லி பிளேக்ஸுக்கு பதில் விருப்பத்திற்கேற்ப சாட் மசாலா, சமையலுக்கு பயன்படுத்தும் மிளகாய்த் தூள் கலந்து வைக்கலாம். எங்கள் ஊரில் இதனை காரக் கலகலா எனவும் அழைப்பர்.

மேலும் சில குறிப்புகள்