முதலீடும் சேமிப்பும்!!!

முதலீடும் சேமிப்பும்

நம்மில் பலர் வருமானத்தில் ஒரு பகுதியை முதலீடுகளாகவும் சேமிப்பாகவும் வைத்திருக்கிறார்கள். என்ன முதலீடுகள் தற்கால பொருளாதார நிலமையில் மிகவும் பாதுகாப்பானது. வீடு/தங்கம் போன்ற முதலீடுகள் பண்டுதொட்டு இருந்து வருகின்றது. அதைதவிர வேறு என்ன முறையில் சேமிக்கலாம். எந்த வகையான சேமிப்பு பாதுகாப்பானது.

பின் குறிப்பு:
I do not have any intension to know in depth details about your financial situation

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அன்பு தோழி இலா, வீட்டை விட காலி மனையாக வாங்கி போட்டால் திரும்ப விற்கும் போது நல்ல லாபம் கிடைக்கும்.வாழ்க வளமுடன்

அன்பு தோழிகளே,

இலா,நான் முதலீட்டுக்கு முதலிடம் தருவது பிக்ஸட் டெபாசிட் தான்.சேமிப்பை ஷேர்மார்கெட்டிலும்,மியூச்சுவல் பண்ட்டிலும் போட்டுவிட்டு இப்பொழுது மெல்லவும் முடியாமல்,துப்பவும் முடியாமல் இருக்கின்றேன்.பாதுகாப்பானதும்,தேவைக்கு உதவுவதும் பிக்ஸட் டெப்பாஸிட் தான்.தைரியமாக இதில் முதலீடு செய்து விட்டு நிம்மதியாக இருக்கலாம்.இதில் இருந்து பெரிய தொகை சேமித்ததும் பொருளாதாரத்திற்கு தகுந்த வாறு காலிமனையாகவோ,வீட்டாகாவோ வாங்குவதே நல்லது என்பது என் கருத்து.
ஸாதிகா

arusuvai is a wonderful website

என்னை போல வேறு நாடுகளில் வசிப்பவர்கள் வீட்டு மனைகள் வாங்கி போட்டால் எவ்வளவு பாதுகாப்பானது என்று தெரியவில்லை. ஒரே ஒரு FD செய்து இருக்கிறேன். வேறு என்ன பேங்கிங் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் எல்லாம் எல்லா காலங்களிலும் பாதுகாப்பானது. தங்கம் வாங்கினால் வங்கியே மறுபடியும் வாங்கிக்கொள்ளுமா இல்லை நாம் நகைகடைகளில் தான் கொடுத்து பணம் திரும்ப பெற முடிய்மா??

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் இலா எனக்கு தெரிந்து ICICI இல் வாங்கும் தங்கம் மறுபடியம் வங்கியே வாங்கிக் கொள்ளும் ...(24 cr cold) இதனால் நமக்கும் லாபம் தான்

ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

இலா,நகைக்கடையில் ,தங்கம் நாம் வாங்கிய விலைக்கு விற்க முடியாது.குறைவாகத்தான் கேட்பார்கள்.24 கேரட் டாலர் க்கு கூட இதே கதிதான்.இப்பொழுது பேங்க்கில் விற்கின்றார்கள்.அது எப்படி என தெரியவில்லை.வெளிநாடுகளில் வாழ்பவர்கள் சொந்தக்காரர்களை விட்டு அடிக்கடி வாங்கிய இடத்தினை சென்று பார்வை இட சொல்லவேண்டும்.சுற்றிலும் வேலி அடைத்து பாதுகாக்க வேண்டும்.வெளிநாட்டில் வாழ்பவர்கள் எத்தனையோ பேர் நிலம் வாங்கி இதே முறையை பின்பற்றி வருகின்றார்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

மேலும் சில பதிவுகள்