மைதா துக்கடா

தேதி: October 1, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

மைதா- 1 1/2 கப்
பொடித்த சீனி- அரை கப்
சோடா உப்பு- 2 சிட்டிகை
தயிர்- 1 கரண்டி
உப்பு- கால் ஸ்பூன்


 

சீனி, உப்பு, சோடா உப்பு, தயிர் அனைத்தையும் ஒன்று சேர்த்துக் கலந்து பின் மைதாவில் சேர்த்து நன்கு பூரி மாவு போலப் பிசையவும்.
வேண்டுமானால் சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசையலாம்.
மாவை மூன்று மணி நேரம் மூடி வைக்கவும்.
மாவை மெல்லியதாக சப்பாத்தி போல பரத்தி விருப்பமான சைஸில் துண்டுகள் செய்து
மிதமான சூட்டில்,சூடான எண்ணெயில் சிறிது சிறிதாகப் போட்டு பொன்னிறமானதும் எடுத்து வைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

உங்க குறிப்புக்கள் அனைத்தும் பார்த்தேன்.நிறைய வித்தியாசமான RECIPES .நன்றி

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

தங்களின் பாராட்டுதல்கள் மகிழ்வையும் உற்சாகத்தையும் கொடுத்தது. மிக்க நன்றி!!