'குணசிறி புல்டோ' (bulto toffee from Sri Lanka)

யாரிடமாவது 'புல்டோ' (bulto toffee) செய்முறை கிடைக்குமா? கொடுத்து உதவ முடியுமா?

நீங்க இலங்கையா? இந்த toffeeயை யாழ்ப்பாணத்தில்சாப்பிட்டு இருக்கின்ரேன் சின்ன வயதில். .உங்களுடைய பதிவை பார்த்ததும் ஞாபகம் வந்துவிட்டது ஆனால் எப்படி செய்வது என்ரு எனக்கு தெரியாது

நானூம் சின்ன வயதில் சாப்பிட்டது. செய்யும் முறை கொஞ்சம் ஞாபகம் உள்ளது. வெல்லத்தை கம்பி பதம் வரும் வரை தண்ணீர் விட்டு கிளறி, அரிசி மா சேர்த்து கிளறவும், தட்டில் நெய் பூசி, கலவையை கொட்டி ஆறியதும் சாப்பிடலாம். அளவுகள் ஞாபகம் இல்லை.

நான் இலங்கைதான் காயத்ரி. சிறு வயதில் சாப்பிட்ட குணசிறி புல்டோவின் சுவை இன்னமும் ஞாபகத்திலிருக்கிறது. அதன் வாசனையும் எனக்குப் பிடிக்கும்.
வாணி, புல்டோவுக்குத் தேங்காய்ப்பால் சேர்ப்பதில்லையா? இன்னும் செய்முறை தேடிக்கொண்டுதான் இருக்கிறேன். கிடைத்தால் உங்களோடு பகிர்ந்து கொள்ளுகிறேன்.
அன்புடன்
இமா

‍- இமா க்றிஸ்

ஆமாimma எனக்கு புல்டோ தெரியும் குணசிறி புல்டோ தெரியாது. குணசிறி யாரு புல்டோவின் அப்பாவா.? கோவிக்காதீங்கோ தமாஷ்.immaஇத பாத்துட்டு இலங்கைக்கு callபோட்டேன் but தொடர்பு கொள்ள முடியவில்லை. தொடர்பு கொண்டதும் கேட்டுச்சொல்றேன்.[இது தமாஷ் அல்ல] நன்கு அரைபடாத அதாவது சொர சொர தன்மை அரிசிமா .மன்னிக்கவும் வேரெதுவும் ஞபகம் இல்லை

ுல்டோவுக்கு தேங்காய்பால் சேர்பதாக ஞாபகம் இல்லை. எனது அண்ணாதான் செய்வார். இப்போது கேட்டால் அடிக்க வருவார்!!அவர் சமயல் அறை பக்கமே இப்போது போவதில்லை.
வாணி

நீங்க கனடாவில் எங்கு இருக்கின்றீங்கள்.நான் ஒட்டாவாவில் இருக்கின்ரேன். இல்ங்கை பதிவில் உங்களை பற்றி அறிந்து கொண்டேன்
இம்மா நீங்கள் நியூசிலாந்தில் இருப்பதாக அறிந்தேன், எனது உறவினர்களும் அங்கு இருக்கின்றார்கள் உங்கள் அனைவருடனும் கதைப்பதில் மிக்க மகிழ்ச்சி.
அன்புடன்
காயத்திரி

எனக்கும் சின்ன வயது நினைவு வருது. ஒருநாள் அப்பாவுடன் நாங்க எல்லாரும் சேந்து புல்டோ செய்தோம்(அம்மாக்கு தெரியாமல்தான்). வாசம், சுவை இரண்டும் சரியா இருந்தது. ஆனால் புல்டோதான் இறுகியதும் கல்லுப்போல வந்தது:) வாயினுள் காலமை போட்டால் பின்னேரம் வரை நிற்கும். இப்பிடி மில்க் டொபிக்கும் ஒரு முறை நடந்தது. ஆன்னாலும் நாங்கள் விடேல்லை. முழுக்க சாப்பிட்டுட்டோம்.
இதற்கு அப்பா சர்க்கரை பாகில் மா போட்ட ஞாபகம். எதற்கும் இண்டைக்கு அவரிடம் கேட்டு பாக்கிறேன். இறுகேல்லை எண்டு கொஞ்சம் ரவையும் போட்டவர். அவருக்கு நினைவிருந்தால் கேட்டு சொல்கிறேன்.
-நர்மதா:)

ஹாய்,
நான் அறுசுவைக்கு புதுசுங்க...இந்த Thread இல் வந்து அறிமுகமாவதர்க்கு Sorry. Surekka நீங்கள் Srilanka வா? எனக்கு ஒரு friend இருந்தாங்க Surekka என்று in High school. உஙக பேரைப் பார்த்ததும் அவங்க ஞாபகம் வந்திட்டுது.

நன்றி,
விசா

சகோதரி காயத்3 and விசா நலமா இருக்கீங்களா? நான் -toronto[scarborough]வில் இருக்கறேன்.europeஇலிருந்து திருமணமாகி வந்திருக்கேன்.அடுத்த பதிவில் விபரமா எழுதறேன் பசி எடுக்கிறது.

சுரேகா, குணசிறி என்பது தயாரிப்பாளர் பெயர். புளூட்டோ?? கிரகமல்லவா?? :-) எனக்கு யாராவது செய்முறை கண்டுபிடித்துத் தந்தால், தந்தவரது பெயரையே அதற்குச் சூட்டிவிடுவேன்.
வாணி, அண்ணா சமையலறைப் பக்கம் போக வேண்டாம். முடிந்தால் குறிப்பு மட்டும் கேட்டுச் சொல்லுங்கள். அளவுகள் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் நான் சமாளித்துக் கொள்ளுவேன். நன்றி.
நன்றி நர்மதா. வாசம், சுவை நிறைந்த அந்தக் கல்லுக்குத்தான் குறிப்புத் தேடுகிறேன். முடிந்தால் உதவுங்கள்.
எனக்கும் மகிழ்ச்சிதான் காயத்திரி. மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்
இமா

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்