கேக் நல்ல வருவதற்கு என்ன செய்ய வேண்டும்

நேற்று கேக் செய்தேன். கேக் மேல்பாகம் நல்ல பொங்கி வந்தது. ஆனால் அடியில் உள்ள பாகம் அப்படியே அமுங்கி விட்டது.என்ன காரணம் என்று தெரியவில்லை.(சுவை நன்றாகத்தான் இருந்தது) முட்டை அடிக்கும் ப்ளெண்டரில்தான் கேக் கல்வையை அடித்தேன். கேக்பவுலில் ஊற்றிதான் அவனில் வைத்தேன். ஒருவேளை கேக்ட்ரேதான் யூஸ் பண்ணனுமாஎன்னிடம் கன்வெக்ஷன் மைக்ரோவேவ் உள்ளது அதில் செய்யவில்லை. குக்கிங் ரேன்ஜில் உள்ள அவனில் செய்தேன் (இதை எனக்கு சரியாக உபயோகிக்கவும் தெரியாது) தெரிந்தவர்கள் கூறவும் எப்படி செய்ய வேண்டும்?

மேலும் ஒரு சந்தேகம் என்னுடைய அவனில் (குக்கிங் ரேன்ஜ்) ஹீட் அட்ஜஸ் பண்ணும் பட்டனில் மேல்பக்கம் மட்டும், கீழ்பக்கம் மட்டும், இரண்டும், இப்படி நிறைய ஆப்ஷன் இருக்கு. கேக் வைக்கும் எது எந்த பட்டனை செலக்ட் பண்ண வேண்டும். நான் ஊரில் இருந்த போது ஒருமுறை குக்கரில் செய்தேன் நல்ல வந்தது. அப்ப எங்கிட்ட எலக்ட்ரிக் ப்ளெண்டர் கூட கிடையாது. நானும் மன்றத்தில் இதுபற்றி ஏதெனும் பதிவு இருக்கா என்று தேடி பார்த்து விட்டேன். இதுவரை இல்லை. தயவுசெய்து கேக் செய்யும் சகோதரிகள், தோழிகள் என்னுடைய சந்தேகத்தை தீர்க்கவும்

தோழிகளே சந்தேகத்தை தீர்க்கவும் தெளிவான பிறகு மீண்டும் செய்யலாம் என்று இருக்கிறேன்.தெளிவு படுத்துங்கள்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

செவ்வாய் அன்று பேக்கிங் கிளாஸ் போகிறேன்.தெரிந்தால் பின் சொல்கிறேன்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

பேக்கிங் கிளாஸ் எங்கு இருக்கிறது சொன்னால் நானும் வந்து கற்று கொள்கிறேன்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

contact mrs.annie,ph no 5522309

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

யாருக்குமே பதில் தெரியாதா. நான் எதிர்பார்த்துட்டு இருக்கேன். ஆசியா நீங்க எப்போ போரீங்க. குழந்தைய தூக்கிட்டு போகலாமா. ME 10 இருக்காங்கனு சொன்னீங்களே. அவங்களா?

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

cooking rangeல் உள்ள oven மூலம் கேக் செய்வதுதான் மிகவும் சுவையாக இருக்கும். முதலில் பொடித்த சீனியையும் வெண்ணெயையும் ப்ளெண்டரில் நன்கு அடித்த பின் மாவு வகைகள், முட்டைகள் இவற்றை சிறிது சிறிதாக சேர்த்து ஒவ்வொரு முறையும் ஒரு ஸ்பாட்டுலா மூலம் மெதுவாக கலப்பதுதான் நல்லது. அதிகம் பேக்கிங் பவுடர் சேர்த்தாலும் அடிக்கடி திறந்து பார்த்தாலும் கேக் அமுங்கிப் போகும். உங்களின் cake recipeல் என்னென்ன பொருட்கள் எந்தெந்த விகிதத்தில் இருந்தன என்று தெரிந்தால்தான் காரணங்களை மிக சரியாக கூற முடியும். கேக் ட்ரேயில் மாவுக்கலவையை ஊற்றும்போது அந்த ட்ரேயில் மாவு பாதியளவில்தான் இருக்க வேண்டும். அப்போதுதான் மாவு பொங்குவதற்கு சரியாக-வசதியாக இருக்கும். உங்கள் குறிப்பிலோ-பொதுவாக எந்தக் குறிப்பிலுமே எந்த அளவு உஷ்ணத்தில் கேக்கை பேக் செய்ய வேண்டுமென்று போட்டிருந்தாலும் பொதுவாக 160 டிகிரியில் வேக வைப்பதுதான் சரியான முறை. இந்த உஷ்ண அளவில் இரு புறமும் பொன்னிறமாக வெந்திருக்கும். இன்னொரு விஷயம். பொதுவாக உங்கள் குறிப்பில் எவ்வளவு நேரம் போட்டிருந்தாலும் ஒரு சாதாரண கேக் அல்லது ஆரஞ்சு அல்லது காஃபி கேக் வேக 20 நிமிடம் முதல் 30 நிமிடங்கள் போதும். வேறு சந்தேகங்கள் இருந்தாலும் கேளுங்கள். பதில் எழுதுகிறேன்.

மேடம் உங்க கருத்திற்கு ரொம்ப நன்றி. நான் பட்டர் கேக் செய்தேன். ஒரு கப் மைதாவுடன் 1 ஸ்பூன் பேக்கிங் பவுடர், 3/4 கப் சீனி, 100 பட்டர், வெனிலா எஸன்ஸ் & அல்மண்ட் எசன்ஸ் 1 ஸ்பூன் சேர்த்தேன். முதலில் பட்டர், சீனி அடித்து அதன்பின் முட்டையின் மஞ்சள்கரு அடித்து அதனுடன் மாவு சேர்த்து நன்கு அடித்தேன். கடைசியாக வெள்ளைக்ரு அடித்து சேர்த்தேன்

கலவை நல்ல பொங்கி வந்தது மேடம். என்னுடைய ட்ரே பவுல் டைப் அதில் கால் வாசிதான் ஊற்றினேன். அவன் வெப்பநிலை 180 வைத்தேன் முதலில், பிறகு 150 வைத்தேன். ஹீட் வருவது கீழ்பக்கம் மட்டும் என்றுள்ள பட்டனை கிளிக் செய்தேன். நீங்கள் சொல்வது போல் 2 முறை அவனை திறந்து பார்த்தேன். என்ன தவறு என்றே இன்னும் புரியவில்லை. அவனை சரியாக பாவிக்கவில்லையோ என்றும் தெரியவில்லை. அவன் மேனுவலில் சரியான விளக்கம் இல்லை.

மேடம் முறையாக எப்படி கேக் செய்ய வெண்டும். அவனில் எப்படி செட்பண்ணனும். எனக்காக தயவு கூர்ந்து விளக்குங்கள் மேடம்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மனோமேடம் கேக் செய்த முறையை கூறியுள்ளேன். என்ன தவறு என்று கூறுங்கள்.

ஆசியா அக்க கேக் க்ளாஸில் என்ன சொல்லித்தந்தாங்க சொல்லுங்க

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

அன்புள்ள தனிஷா!

கேக் செய்ய பொதுவாக அளவு முறைகள் கிராம் கணக்கில் இருப்பது நல்லது. உஷ்ன நிலையை அடிக்கடி மாற்றுவதும் தவறு.

உங்களுக்காக ஒரு கேக்கின் செய்முறையை என் குறிப்புகள் பக்கத்தில் எழுதியுள்ளேன். அதுபோலவே செய்து பார்க்கவும். மிகவும் நன்றாகவும் மிருதுவாகவும் வரும். வேறு எந்த சந்தேகமாக இருந்தாலும் கேட்கவும். பதில் எழுதுகிறேன்.

பொதுவாக கேக்கை வெற்றிகரமாக பேக் செய்யத்தேவையான சில விதிமுறைகளை இங்கே எழுதுகிறேன்.

1. கேக் செய்யும்போது அதில் குறிப்பிட்டுள்ள அளவுகளின் படியே மிகச் சரியாக பொருட்களை அளந்தெடுத்துக்கொள்ள வேண்டும். குத்துமதிப்பாக எதையும் செய்யக்கூடாது.
2. ஸ்பூன் அளவு, மேசைக்கரண்டி என்றால் அதற்கான measuring spoons எடுத்து கோபுரமாக இல்லாமல் விளிம்பு வரை விரலால சரி செய்து அந்த அளவே பொருள்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
3. சற்று அதிகமான மாவு எடுத்துக்கொண்டாலோ, அல்லது முட்டைகள் போதுமானதாக இல்லாவிட்டாலோ கேக் மிகவும் வரண்டு, உதிர் உதிராக ஆகும்.
4. பேக்கிங் பவுடர் அல்லது சோடா உப்பு அளவின் படி இல்லாமல் சற்று அதிகமாக இருந்து விட்டால் கேக் சீக்கிரமாக மேலெழுந்து பின் அமுங்கி விடும்.
5. கேக் பேக் செய்வதற்கு 15 நிமிடங்களுக்கு முன் ovenஐ நாம் எந்த சூட்டில் பேக் செய்கிறோமோ அந்த சூட்டில் சூடு செய்ய ஆரம்பித்து விடவேண்டும்.
6. அடிக்கடி திறந்து பார்த்தால் கேக் அமுங்கி விடும். முதல் 15 நிமிடங்களுக்கு திறந்து பார்க்கத் தேவையில்லை.
7. மாவுக்கலவை மிகவும் தளர இருந்தாலும் கேக் பேக் செய்யும்போது அமுங்கி விடும்.
8. நீண்ட நேரம் பேக் செய்ய வேண்டிய கேக்குகளுக்கும், ஃப்ரூட் கேக்குகள், மிருதுவான கேக்குகள்-இவைகளுக்கும் கேக் டின்னை ‘lining’ செய்ய வேண்டியது அவசியம். இது கேக் அடியில் அதிகம் brown ஆவதையும் கருகுவதையும் தடுக்கும். கேக் ட்ரேயின் பக்கவாட்டிலும் அடி பாகத்திலும் அளவு பார்த்து பட்டர் பேப்பரை கத்தரித்துக் கொண்டு அவைகளை சிறிது எண்ணெய் அல்லது வெண்ணெயின் உதவியால் இலேசாக தடவி அதன் மேல் சிறிது மைதாவை தூவி கீழே தட்டி விடவும். பிரகு கேக் ட்ரேயின் பக்க வாட்டிலும் அடி பாகத்திலும் எண்ணெய் தடவிய பட்டர் பேப்பர்களை வைத்து அதன் மேல் மாவு கலவையை ஊற்றி பேக் செய்தால் கேக் நன்றாக வரும்.
9. கேக் கலவையை கேக் ட்ரேயில் பரப்பும்போது நடுவில் சிறிது பள்லமாக பரப்ப வேண்டும். அப்போதுதான் வெந்த பின் கேக் மேல் புறம் சீராக இருக்கும்.
10.

ரொம்ப நன்றி. இப்போதான் புரியுது நான் என்ன தப்பு செய்தேன் என்று. உங்க குறிப்பை பார்த்து கேக் செய்து விட்டு மீண்டும் சொல்கிறேன் கேக் எப்படி வந்தது என்று மிக்க நன்றி மேடம்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மேலும் சில பதிவுகள்