அன்பு சகோதரிகளே....

அன்பு சகோதரிகளே.... எனது நெருங்கிய உறவினர் ஒருவருக்கு கருப்பையின் வெளியே குழந்தை உருவாகியுள்ளது இப்போ 2 மாதமாம் எத்தனையோ ஸ்கேனிங் செய்து இப்போதுதான் கண்டுபிடித்துள்ளார்கள். ஏற்கெனவே அவருக்கு 13, 8, 6 வயதுள்ள 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இப்போ ஆப்ரேசன் பண்ணப் போறாங்களாம். அவர் மறுபடியும் குழந்தை பெற்றுக்கொள்ளலாமா? அல்லது தாமதிக்க வேண்டுமா?இன்னும் இது சம்பந்தமான தெரிந்த கத்துக்களைச் சொல்லுங்களேன் ப்ளீஸ்.

அன்புடன் ரிகா.

எக்டாபிக் ப்ரெக்னன்சி பலருக்கும் ஏற்படுவது தான்...சிலருக்கு கருவை அகற்றினாலும் கருப்பைக்கோ குழாஇக்கோ சேதம் வராது சிலருக்கு அதுவே வெடித்து விடும்..சிலருக்கு அகற்ற வேண்டி வரும்..
ஒரு முறை எக்டாபிக் இருதால் அடுத்த முறையும் இதே போல் ஏற்பட வாஇப்பு உண்டு என்று முன்பு எங்கோ படித்திருக்கிறேன்..தற்பொழுது 3 குழந்தைகள் இருப்பதால் இத்துடன் நிறுத்தலாமே.
அல்லது மருத்துவரிடம் கேட்டு உடல் நிலை பூரணமக பழைய நிலைக்கு வந்தபின் முயற்சிக்கலாம்

உங்களுடைய பதிலுக்கு நன்றி தாளிகா. மருத்துவரிடமும் இதுபற்றி விளக்கமாகக் கேட்கச்சொல்கிறேன். இவ்வாறு ஏற்படுவது பிரச்சினையா?
அன்புடன் ரிகா.

hi Rikha!
தாலிகா சொன்னது சரியே. Ectopic pregnancy ஆனவர்களுக்கு மறுபடியும் ஏற்படும் வாய்ப்பு அதிகம். டாக்டரிடம் அட்வைஸ் கேளுங்கள். எனக்கு fallopian tubeல் குழந்தை உருவானது. Tube வெடித்து விட்டதால் சேர்யரி செய்து tube அகற்றினார்கள். உங்கள் உறவினருக்கு எங்கு குழந்தை உருவாகியிருக்கு என்று தெரியல. 95% fallopian tubeல் தான் ஏற்படுகிறது. விரைவில் கண்டு பிடித்தது நல்லது.

ரிஹா!! கடவுளுக்கு நன்றி!! உங்க உறவினருக்கு ஒன்றுமாகாமல் சீக்கிரம் கண்டு பிடித்துவிட்டு ஆப்பரேஷன் செய்ய போவதற்க்கு. ஒரு முறை எக்டாப்பிக் என்றால் அடுத்து வரும் ப்ரெக்னென்சிக்கு மிகவும் கவனமாக இருக்கணும். எனக்கு ஒரு முறை ஆனது. லேப்ரோஸ்கோப்பிக் முறையில் டியூபில் வளர்ந்து இருந்த 7 வார கருவை அகற்றினார்கள்.
When I was in the hospital the doctors told me I was lucky cos some people loose thier Fallopian tube and some meet the different ending.

If your relative really badly needs another child then shd should take the help of a high risk pregnancy doctor and be monitored from Day 1 of her comfirmation. From 30th day you will be medically monitored and up until the first trimester is over.

3 குழந்தைகள் இருக்கும் போது அடுத்த முறை கருத்தரித்தால் என்ன விளைவுகள் என்றும் யோசிக்கணும்... நல்ல முறையில் இருந்திருந்தால் சந்தோஷமா இருக்கும். இப்படி ஆனதில் உடல் நலனை கவனித்து பிள்ளைகளையும் கவனிக்க சொல்லுங்க.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

பதிலுக்கு நன்றி இலா, jeevi இறைவன் கிருபையால் அவருக்கு ஆப்ரேசன் இன்று நடந்துவிட்டதாம். நானும் அவருடன் கதைத்தேன். இது சம்பந்தமாகவும் சொன்னேன். ஓரளவு நன்றாக இருக்கிறார்.

அன்புடன் ரிகா.

அன்பின் தோழிகளே.... கருப்பையின் வெளியே குழந்தை உருவாகி ஆப்ரேசன் பண்ணிய என் அதே உறவினருக்கு தொடர்ந்து மாதவிடாய் வந்துகொண்டேயிருக்குது. ஸ்பெசலிஸ்ட் டாக்டரிடம் போய் நிறைய்ய தடவை செக்பண்ணி மருந்தெடுத்தார்கள். இன்னும் குணமாகவில்லை. அவர்கள் இந்தியா சென்று மருந்தெடுக்க முடிவு செய்துள்ளார்கள். எனவே இது தொடர்பான நல்ல இந்திய டாக்டரின் (போன் நம்பர், எட்ரஸ்) டீடைல்ஸ் தந்துதவுங்கள் தோழிகளே.

அன்புடன் ரிகா.

தோழிகளே மீண்டும் கேட்கிறேன் முடிந்தால் அவசரமாகப் பதில் தாருங்களேன்.எக்டாபிக் பிரெக்னென்சி உள்ள என் உறவினர் இந்தியா சென்றால் எந்த டொக்டரிடம் போகலாம் முகவரி தந்துதவுங்களேன். எதுவுமே தெரியவில்லை. அருசுவைத் தோழிகளின் உதவியை எதிர்பார்க்கிறேன்.

அன்புடன் ரிகா.

அன்புள்ள ரிகா எந்த ஊர்க்கு செல்கிறார்கள் என்று தெரிவியுங்கள்..இந்தியாவில் எல்லா ஊரிலும் நல்ல நல்ல மருத்துவர்கள் உண்டு..நீங்கள் இடத்தை சொன்னால் கட்டாயம் யாராவது உதவுவார்கள்..சென்னைக்கா?

மன்னிக்கவும் தளிகா ஊர் எங்கேயென்றும் இன்னும் தெரியாது. டாக்டரின் டீடைல்ஸ் தெரிந்தால் அதே ஊருக்குப் போவார்கள். சென்னையும் பரவாயில்லை.

அன்புடன் ரிகா.

அவர்கள் இந்தியா போகிறார்களா? எனக்கு தெரிந்து திருநெல்வேலியில் டாக்டர் ஜி.ஜி, & ஆக்னஸ் இருவருமே சிறப்பான மருத்துவர்கள். நிச்சியமாக நல்ல ரிசல்ட் கிடைக்கும். ஆக்னஸிடம் பணம் கொஞ்சம் கூடுதல் செல்வு. உங்கள் தோழி கொஞ்சம் பணவசதி குறைந்தவர் என்றால் கண்டிப்பாக டாக்டர் மதுபாலாவை பார்க்கலாம். இவர்கள் மூவருமே சிறந்த கைனக் டாக்டர்ஸ். அவர்களுக்கு விருப்பம் எனில் அட்ரஸ் தருகிறேன். சென்னை என்றால் இசபெல்லா ஹாஸ்பிட்டல் நல்லாயிருக்கும் என்று சாதிகா அக்கா சொன்னார்கள். அவங்க தம்பி வொய்ப் கூட அங்குதான் பிள்ளை பெற்றதாக சொன்னார்கள்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மேலும் சில பதிவுகள்