கர்ப்பிணி பெண்களுக்கான சர்க்கரை நோய் பிரச்சனைகள்

http://www.arusuvai.com/tamil/forum/no/8305

மேற்கூறிய திரெட்டில் எனக்கு அறிவுரைகள் மற்றும் கருத்துக்கள் கூறிய அனைவருக்கும் எனது மனதார்ந்த நன்றி.

இப்பொழுது நான் குழந்தை உண்டாகி இருக்கிறேன்.

Harmonal imbalance,pco,typeII diabetics,Irregular periods,ovalation problem போன்ற ஒன்றுக்கொன்று தொடர்புடைய பிரச்சனைகள் இருந்ததால் diet control, Metformin tablet(500mg-0-850mg) உடன்,1 hour daily walking ம் சென்றேன்.Sugar கட்டுப்பாட்டுக்குள் வந்தது, morning எழும்பியவுடன் பார்க்கும் level தவிர.

ஹார்மோன் ஊசி போட்டு,கரெக்ட்டாக ovalation time,blood test மூலம் doctor சொன்னார்கள்,நார்மல் முறையில் கருத்தரித்து விட்டேன்(not iui/not ivf)

கருத்தரித்த உடன் metformin நிறுத்த சொல்லியிருந்ததால் நிறுத்தி விட்டேன்(இப்போது எடுத்து பார்த்தால் sugar level நார்மலாக இல்லை).கூடி விடுமோ என்று பயந்து பயந்து சப்பாத்தியும்,ஏதாவது ஒரு காய்கறியுமே தினமும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்.நிறைய சாப்பிட பிடிக்கவில்லை.சத்தே இல்லாதது போல் weak ஆக உணர்கிறேன்.குழந்தையின் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படுமோ என பயமாக உள்ளது. இவ்வளவு வருடம் கழித்து கிடைத்ததை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமே என பயமாக உள்ளது.சாதம் சாப்பிட வேண்டும் போல் ஆசையாக உள்ளது.

1.நான் சாதம் சாப்பிடலாமா,தினமும் எவ்வளவு எடுத்துக் கொள்ளலாம்.
2.பழவகைகளில் எந்த பழங்கள் சாப்பிடலாம்.நாளொன்றுக்கு எத்தனை சாப்பிடலாம்.
3.எந்த பழங்கள் நான் சாப்பிடவே கூடாது.
4.இளநீர் குடிக்கலாமா.
நான் இங்குள்ள டாக்டரிடம் மேற்கூறியவற்றை கேட்டால் இந்த நாட்டு diabetic chart தருகிறார்.அது எனக்கு உபயோகப்படாது. நமது நாட்டு diabetic chart யாரிடமாவது இருந்தால் எனக்குமெயில் பண்ணுவீங்களா.
twinkle79_tony@yahoo.com
5.நான் 1 hour walking pregnent ஆவதற்கு முன்பு போனேன்.இப்பொழுது கர்ப்பிணி பெண்கள் திரெட்டை பார்த்த பொழுது முதல் மூன்று மாதம் ரெஸ்ட் எடுப்பது நல்லது என்று போட்டிருந்தது.இப்பொழுது நான் தினமும் language class போகவர மொத்தத்தில் 45 நிமிடங்கள் walking போக வேண்டிய சூழ்நிலை.Sugar இருப்பதால் நான் 45 mins walking போவது நல்லதா அல்லது ரெஸ்ட் தான் எடுக்க வேண்டுமா.மேலும்,தனிப்பட்ட முறையில் stress ரொம்ப இருந்ததால் தான் language class -ற்கு join செய்தேன்.- walking போகலாமா என்று தெரிந்தவர்கள் பதில் சொன்னால் மிகவும் உபயோகமாக இருக்கும்.

6.மல்லாந்து படுத்தால் மூச்சு முட்டுவது போல்,uneasy ஆக உள்ளது.எதிலோ படித்த ஞாபகம்,ஒருக்களித்துப் படுக்க வேண்டும் என்று.என்ன காரணத்திற்காக என்று எனக்கு தெரியவில்லை.எத்தனை மாதத்திலிருந்து ஒருக்களித்து படுக்க ஆரம்பிக்க வேண்டும்.

மனோகரி அக்கா,செந்தமிழ்செல்வி அக்கா,தளிகா,இலா, இஷானி,அதிரா அக்கா,மாலதி அக்கா,தேவா அக்கா,மேனகா,ஜெயந்தி மாமி, டிசென்,ஜலீலா அக்கா,அஞ்சலி,மர்ழியா,அபினவி,அஸ்மா அக்கா,மனோ அக்கா மற்றும் பெயர் விடுபட்டுப் போன அனைத்து சகோதரிகள் மற்றும் தோழிகளிடமிருந்து அறிவுரைகள் மற்றும் கருத்துக்களை விளக்கமாக எதிர்பார்க்கிறேன்.

எனக்கு இப்போதிருக்கும் ஒரே துணை மற்றும் ஆறுதல் அறுசுவை தான்.பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்,
Anupa twinkle

மனோகரி அக்கா,செந்தமிழ்செல்வி அக்கா,தளிகா,இலா, இஷானி,அதிரா அக்கா,மாலதி அக்கா,தேவா அக்கா,மேனகா,ஜெயந்தி மாமி, டிசென்,ஜலீலா அக்கா,அஞ்சலி,மர்ழியா,அபினவி,
அஸ்மா அக்கா,மனோ அக்கா மற்றும் பெயர் விடுபட்டுப் போன அனைத்து சகோதரிகள் மற்றும் தோழிகளிடமிருந்து அறிவுரைகள் மற்றும் கருத்துக்களை விளக்கமாக எதிர்பார்க்கிறேன்.

வாழ்த்துக்கள்... கவனம் சகோதரி!!! ரொம்ப கவனம்... எனக்கு தெரிந்தது.. 45 நிமிஷம் வாக்கிங் என்றால் என்ன பேஸ்ல நடப்பீங்க.. ரொம்ப வேடிக்கை பார்த்திட்டே நடக்குற வேகத்தில் நடந்தால் ஓக்கே ரொம்ப விறுவிறுப்பா நடக்க வேண்டாம்... பழத்திலும் சுகர் அதிகமாக உள்ள பழங்கள் உண்டு. எனக்கு தெரிந்து திராட்சை, வாழை. தினமும் குறைந்தது 3 பழம் . இது மலச்சிக்கலையும் கட்டுபடுத்தும் . நீங்க எந்த நாட்டில் வசிக்கிறீங்கன்னு தெரியலை. மாதுளை/கொய்யா/ஆப்பிள்/பேரிக்காய்/பிளம்ஸ்/கிவி/ஸ்ட்ராபெர்ரி/புளூபெர்ரி/ராஸ்பெர்ரி/பிளாக்பெர்ரி/ஆரஞ்சு/கிரேப்புரூட் எல்லாம் சாப்பிடலாம்.

உங்க டயட் நிச்சியமா நட்ஸ் சாப்பிடலாம். ஒரு நாளைக்கு 5 ஆல்மண்ட் சாப்பிடுங்க.
பச்சை பயறு ஊற வைத்து வேக வைத்து கேரட் வெள்ளரி கொத்தமல்லி இலை போட்டு சேலட் ஆக சாப்பிடுங்க.

மல்லந்து/குப்புற படுக்க வேணடாம்...

வேறு எதாவது நினைவுக்கு வந்தா சொல்கிறேன்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

Congrats on ur pregnancy!!!...

Regarding ur Qs... As far as the diet is concerned you can eat limited quantity of wheat based food, ragi & other whole grains. You can also take dhal & vegs. Rice, if u want to have, try unpolished rice or take a small cup of rice & 2 chapathis for lunch. Avoid rice at night. There is not much nutrients in polished rice. so there's nothing to worry if u r not taking rice.Avoid sugar as much possible. Eat healthy food. Quantity doesn't matter as long as it's not too low.Just follow your appetite.

Regarding waking, my doctor suggested not to walk much & to even cut back on long shopping until 3 monhs as I had slight spotting in the early months. Standing/walking for a long time would reduce the blood flow to the uterus. So it's not advisable to walk for more than 2 hours at a stretch in a healthy pregnancy(ie until 3 months). After 3 months I used to walk for 1 hr a day & also shop for 2-3 hrs atleast 2 times a week ;) I also went swimming as the spotting stopped after the 3rd month & my doc gave a green signal to even go for a jog. This is my experience. It's better you consult your doc on this coz only they know your health the best.

Regarding sleeping position, I used to lie on the side right from the beginning of pregnancy. Preferably the left side coz that position is best for blood flow to the uterus. Lying on the back after the 5th month can lead to back pain later.

That's all my knowledge on these topics... there are many ppl who are much more experienced than me here. Hope they'll be able to answer ur Qs better.:)

அனுபா முதலில் தாயாக போகும் உங்களுக்கு வாழ்த்துகள் ....முதலில் தெய்ரியம இருங்க .... இந்த நேரத்தில் சுகர் வருவது பற்றி பயம் வேண்டாம் .....
சாதம் சாப்பிடலாம் ....ஆனால் அளவை குறைத்து கொள்ளுங்கள் .....முன்று நேரம் சாப்புடுவதை ஆறு முறையாக கொஞ்சம் கொஞ்சம்மாக சாப்புடுங்க .... இளநீர் தரலாமா குடிக்கலாம் ....பழங்கள் பற்றி இலா சொல்ல்லிருகங்க ....மல்லாந்து படுத்தால் மூச்சு முட்டுவது போல் தான் இருக்கும் ஒருகளித்து படுங்க ....அதனால் குலந்தைக்கு மூச்சு விடுவது எளிதாக இருக்கும் .....(பெரியவங்க சொல்லுவாங்க நேராக படுத்தால் கோடி சுற்றி விடிம்னு) ஒருகளித்து படுப்பது நல்லது .....வாக்கிங் தரலாமா போகலாம் ....உங்களுக்கு நடக்க கஷ்டமா இருந்த வேண்டாம் ...உடம்பே நல்ல பாத்துகுங்க ....நல்ல ரெஸ்ட் எடுங்க

ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

இப்பதான் இது கண்னில் பட்டது முதலில் உங்களுக்கு வாழ்த்துகள்!இப்ப எத்தனாவது மாசம்?மாசம் அதிகரிக்க அதிகரிக்க மூச்சு தினரல் வருவது சகஜம் எனக்கு இப்ப ரொம்ப மூச்சு தினரல் வருகிறது..ஏற்கனவே இதில் அனுபவம் இருப்பதால் பயப்படாமல் இருக்கிரேன்...7 மாசத்தில் ஒருங்கனித்து படுக்கனும் ஆனா நான் சொல்லுவது 5 மாசத்தில் இருந்தே இப்படி படுக்க டிரை பண்ணிட்டு வந்தா 7 ஆவது மாசம் தானாக நமக்கு பக்குவப்பட்டுவிடும்...சடன்னா திரும்பாமல் எழுந்து திரும்பி அப்புறமாக அடுத்தபக்கம் படுக்கனும்...மாசம் ஆக ஆக தூக்கம் இல்லாமல் பிராப்லமும் இருக்கு அதுவும் பயம் இல்லை நீங்க இப்பதான் கண்ஸீவ் நா அடுத்தமுறை டாக்டர்ட்ட மூச்சு தினரல் பற்றி கண்டிப்பாக கேட்கனும்..மாசம் ஆச்சுன்னா பயம் இல்லை இது என் அனுபவம்..அடுத்து சுகர் என்பதால் இளநீர் சுத்தமா கூடாது..எனக்கு சுகர் முதல் குழந்தைக்கு இல்லை இந்த குழந்தைக்கு இருக்குன்னு சொல்லி இருக்காங்க அதும் இன்னொரு டெஸ்ட் எழுதி கொடுத்து இருக்காங்க நஆளைதான் ரிசல்ட் தெரியும் சோ சுகரில் எனக்கு இப்போதய்க்கு அனுபவம் இல்லை கதீஜாக்கு சுகர் பிராப்லம் இருந்தது அவளோ,இல்லை இது தெரிஞ்ச,அனுபவம்பட்ட மற்ற சகோதரிகள் சொல்லுவாங்க..நீங்க வாக் செய்வது எனக்கு சரியாக படல டாக்டரிடம் உங்க உடல்நிலையை கேட்ட பின்னே போகலாம் என்பேன்..நட்ஸ் நிறைய சாப்டுங்க..
ஒருங்கனித்து படுப்பதால் குழந்தைக்கு இரத்த ஓட்டம் சீராகும்..மேலும் சந்தேகம் இருப்பின் கேட்கவும்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

அனுபா...!! உங்களைப்பற்றி அடிக்கடி நினைத்துக்கொள்வேன். ரொம்ப கவலைப்பட்டீர்களே என்று.....இப்ப இந்த சந்தோஷச்செய்தியைக் கேட்பதற்கு ரொம்ப மகிஷ்ச்சியாக இருக்கிறது. டயாபடிக் பற்றி கவலைக்கொள்ளாதீர்கள். நான் நிறைய பேர்களுக்கு இந்தமாதிரி கேள்வி பட்டு இருக்கிறேன். .ஆனால் கவனமாக இருங்க. இப்ப வாக்கிங் எல்லாம் போகவேண்டாம். அந்த லாங்வேஜ் க்ளாஸ் எல்லாம் இப்ப வேண்டாம். நல்ல ரெஸ்ட் எடுங்க. 7 மாதத்திற்கு பிறகு வாக்கிங் எல்லாம் வைத்துக்கொள்ளலாம். டயாபடிக் சார்ட் பிறகு அனுப்புகிறேன். உங்க பதிவை பார்த்தவுடன் உடனே பதில் போட்டு உங்கள் வாக்கிங்கை நிறுத்த வேண்டும் என்பதற்காக அவசரமாக எழுகிறேன்.....

வாழ்த்துக்கள் அனுபா!!
இப்போ உங்களுக்கு எத்தனை மாதம்.எனக்கு 6 மாதம் முதல் சுகர் இருந்தது.கர்ப்பிணி பெண்களுக்கு சுகர் வருவது நார்மல்,கவலை வேண்டாம்.காலையில் செரியால் சாப்பிடுங்க.இப்போ நீங்க எந்த நாட்டில் இருக்கிங்க?நம் நாட்டு சாப்பாட்டு மெனுவை விட நீங்க இருக்கும் நாட்டின் உணவை சாப்பிடுவது நல்ல்துனு நினைக்கிரேன்.முதல் மூன்று மாதம் வாக்கிங் வேண்டாம்,நல்லா ரெஸ்ட் எடுங்க.ஹாஷினி சொன்ன மாதிரி மூன்று வேளை சாப்பிடுவதற்கு பதில் ஆறு வேளை சாப்பிடுங்க.
பழங்களில் மா,பலா,வாழை சாப்பிட வேண்டாம்.ஆப்பிள்,ஆரஞ்சு ஜுஸ்(பிழிந்து குடிக்கவும்,ரெடிமெட் ஜூஸ் வேண்டாம்)கிவி,அப்ரிகோ சாப்பிடலாம்.
நான் காலையில் பாலில் செரியால் கலந்துக் குடிப்பேன்
10 மனிக்கு பழம் (அ) ஆரஞ்சு ஜூஸ் .
12 மணிக்கு சாதம்(கொஞ்சம்) காய்கறி,கீரை,கறி (அ) மீன்(அ) முட்டை சாப்பிடுவேன்
மாலை 4 மணிக்கு பழம்,காபி(அ) பழத்தயிர்
7.30 மனிக்கு இரவு சப்பாத்தி .இதான் என் மெனு.
சாதத்திற்குப் பதில் கோதுமை சாதம் வடித்து சாப்பிடலாம்.இப்படி சாப்பிட்டால் சகர் கண்ட்ரோல் வரும்.80 டூ 120 வரை சுகர் அளவு இருக்கனும்.இப்போ குழந்தை பிறந்து விட்டது சுகர் இல்லை.பயப்பட வேண்டாம்.போலிக் சத்து நிறைந்தவைகளை சாப்பிடவும்.இப்போ என் பெண் அழுகிறாள் பிறகு பதிவு போடுகிறேன்.

முதலில் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.இன்னும் பத்து மாதத்தில் எங்களுக்கு மறுபடியும் நீங்க வந்து என்ன குழந்தை பிறந்துச்சுன்னும்,எப்படி இருக்கிறார்னும் வந்து பதிவு போடனும்,போடுவீங்க சரியா.அதற்கு அறுசுவை தோழிகளின் ப்ரார்த்தனை உங்களுக்கு எப்பவும் உண்டு.
அப்புறம் காய்கறிகள் நல்லா சாப்பிடுங்க.நிறைய தோழீஸ் என்ன சாப்பிடனும்னு சொல்லியிருக்காங்க.அப்புறம் நீங்க தனிமைய போக்கனும்னு language class போறீங்கன்னு சொன்னீங்க.அதை இந்த நேரத்தில் தவிர்க்கலாம் ஏன்னா இந்த நேரத்தில் stress,tension இருக்க கூடாது.தனிமைய போக்க நல்ல இனிமையான பாட்டு கேளுங்க.பளூவான பொருட்களை தூக்காதீங்க.தோழி சொன்னது போல ஒருகளிச்சு படுக்கனும் இல்லாட்டி தொப்புள் கொடி குழந்தையோட கழுத்தோ, உடம்பையோ சுத்திக்கும்னு சொல்வாங்க.நான் படுக்க போகு போது ஒருகளிச்சு படுப்பேன் நடுவில் முழிச்சு பார்த்தா மல்லாக்கா படுத்துட்டு இருப்பேன் அச்ச்சசோன்னு மறுபடியும் ஒருகளிச்சு படுப்பேன்.முக்கியமா ஒன்னு சொல்ல மறந்துட்டேன்.
தனிமைய போக்க உங்க குழந்தை(வயித்துல தடவி)க்கூட பேசுங்க.உங்க குரலை வயித்துல இருந்துக்கிட்டே கேக்கும்.என் சொந்த அனுபவம் என் குழந்தை வயிற்றில் இருந்த போது நான்(என் கணவரும்) ஒரு பாடலை அடிக்கடி பாடுவேன்.அவள் பிறந்த பின்பும் இன்று வரை அந்த பாட்டு என்றால் அவளுக்கு ரொம்ப பிடிக்கும்.நல்ல கதை சொல்லுங்க.கஷ்டமா எதுவும் நினைக்காதீங்க.எப்படி இருக்க?சாப்பிட்டியா,தூங்குறியான்னு எதாவது குழந்தைக்கிட்ட பேசிட்டே இருங்க.அதுக்குன்னு energy waste பண்ணாதீங்க.All the best.

ஹி ஹி திரட் மாற்றி போட்டுடேன்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேனகா தாயே நலமா?உங்களை அருசுவைக்கு வந்ததும் விசாரித்தேன் குட்டி மேனுவை பெற்று 15 நஆள் ஆச்சுன்னு தனிசா சொன்னாங்க நார்மல்தானே?பேபி எப்படி இருக்கு?என் முத்தத்தை கொடுத்துடுங்க!உங்க உடம்பு இப்ப எப்படி இருக்கு?

திவ்யா உங்க பேபி எப்படி இருக்கு முகம் பார்க்க ஆரம்பித்து இருக்குமே சொல்லுங்க!உடம்பு நார்மல் ஆகிட்டா?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்