இதற்கு என்ன தான் வழி

எனக்கு திருமணம் ஆகி 5 வருடங்கள் குழந்தைக்கு எதிர் பார்து இருக்ரேன் இன்னும் இல்லை
எனக்கு 25 நாட்கல்ளாக இரத்த போக்கு உள்ளது நிறய இல்லை லேசா படும்.இது எதற்கு என்று தெரியல தயவு செய்து தெரிந்தல் சொல்லுங்கள்.இது இருப்பது பயமா? நான் டொக்ரரிடம் கேட்டேன் அது நோர்மல் என்று சொல்ராங்க

வனு!!! இது நார்மல் இல்லை.. இப்படி 25 நாள் தொடர்ந்து ரத்தபோக்கு இருந்தால் எதாவது ஹார்மொன் கோளாறு/ஸ்ட்ரெஸ் கூட இருக்கலாம். ஆனால் இது உங்க அயர்ன் கவுன்ட்டையும் பாதித்து ரத்தசோகை உருவாக்கும். வேறு நல்ல மருத்துவரிடம் காண்பிக்கவும்... நேரம் களையவேண்டாம்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நன்றி இலா உடன் பதில் போட்டிங்கள் ரொம்ப நன்றி
எப்படி இருக்ரிங்கள் இலா
நான் doctor போனேன் tablet தந்தாங்க 2 நாட்களா பரவாயில்லை

துஷி நீங்க எந்த நாட்ல இருக்கிறீங்க என்பதுதெரியவில்லை.வெளிநாடுண்னா எல்லாமே நோர்மல் நோர்மல் என்று சொல்வது அவர்கள் பழ்க்கம்.எனக்குத்தெரிந்தவரை இது நெறய கேள்விப்பட்டிருக்கேன் .ஆனா நீங்க குழ்ந்தை க்கு முயற்சி எடுக்கறதாலpiriod ஐ கட்டுப்பாட்ட்டுக்குள் கொண்டு வர்ற்தே நல்லது.அனேகமா குழந்தைக்கு முயற்சி செயறப்ப piriodல குழ்ப்பம் வர்ரதுக்கு நம்பளோட மனமும் தான் காரண்ம்னு dr சொல்றங்க.ஏன்னா முன்னாடி இதப்பத்தி நாம காவலையே படமாட்டோம்.குழ்ந்தைக்கு try பண்றப்ப நம்பளோட main சிந்தனையே அதுதான்.வரக்கூடாது என்று ஓரே மனதுக்குள் நினக்கறது,வராப்பல இருக்கே என்று சங்கடப்படறது,வந்தப்பற்மா படி படிண்ணு படிச்சும் exam ல பெயில் ஆகிட்டாப்பல வருந்தறதும் இந்தப்பிரச்சனைக்கு ஒரு காரணம்.இது என் பிரச்னைக்குdr சொன்னது.உங்களுக்கும் பொருந்தும்னு நினக்கறேன்.எனக்கு இந்த மாதம்கூட 5 நாட்கள் தள்ளிப்போய் கொண்டிருக்கு. செக் பண்னதுல வழக்கம் போல நெகடிவ்.உங்க மனக்கஷ்டம் ,தவிப்பு எல்லாம் என்னால் எனக்குப் புரியும்.உங்கலுக்காக நான் கடவுளை வேண்டுரென் .மனதை அமைதியா வச்சிருங்க.இதுவும் கடந்து போகும்.

hi thusi.எனக்கு dr சொன்னதை சொல்கிறேன். periods-ஐ எதிர்பார்க்க வேண்டாம். 25 days முதல் steps ஏறி இறங்க வேண்டாம். கனமான பொருட்களை தூக்காதீர்கள். முடிந்த அளவு rest எடுங்கள். body heat ஆகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

ஹாய் உமா எப்படி இருக்ரிங்கள் உங்கள் பதிலுக்கு ரொம்ப நன்றி
நான் ஜேர்மனியில் வசிக்ரேன் என் வீடு இரண்டாவது மாடியில் இருக்ரது நான் தினமும் ஏறி இரங்குவேன் வேறு ஒன்ரும் நான் கஷ்ரமான வேலை செய்வது இல்லை எப்பவுமே என் உடம்பு heat ஆக தான் உள்ளது இதற்கு என்ன செய்யாலாம்

எப்படி இருக்கிறீர்கள். எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.Head bodyக்குஅதிகமாக தண்ணீர், பழச்சாறு எடுத்துகொள்ளுங்கள். periodஐ பற்றி நெனைக்கதீர்கள் நமக்கு நாள் வரப்போகிறது என சிறிது பதற்றம் இரூக்கும். ஆனால் முக்கியமாக நாம் குழந்தைக்கு எதிர்பார்க்கும் பொது மனதை சந்தோசமாக வைத்துக்கொள்ள வேண்டும். மற்ற பிரச்சனை எதுவாக இருந்தாலும் அதி பற்றி கவலை கொள்ளாமல் எப்போதும் சந்தோசமாக இருங்கள். கடவுளை நினைக்க தவறாதீர்கள்.sunflower seed,honey,almond நிறைய எடுத்துக்கொள்ளுங்கள். அதிக அலைச்சல் வேண்டாம்.உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேற இறைவனை பிராத்திக்கிறேன்.

படி ஏறி இறங்குவதை குறைத்துக் கொள்ளுங்கள் துஷி. வேறு வழியில்லை. இளநீர் கிடைத்தால் குடியுங்கள்பா. அப்புறம் வெந்தயக்களி சாப்பிடுங்கள்.நான் இதைத்தான் செய்தேன்.
அன்புடன்
உமா

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

ஹார்மோன் டெஸ்ட் பண்ணுங்க. அங்கு பண்ண சொல்லவில்லையா. பிறகு டிடைல்ஸ் சொல்லுகிறேன்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மேலும் சில பதிவுகள்