குழந்தைக்கு தாய்பால்

குழந்தைக்கு தாய்பால் எந்த மாதத்தில் இருந்து நிறுந்தவேண்டும் அதன்பிறகு என்ன உணவு கொடுக்கவேண்டும்.தாய்பால் நிறுத்தும்போது மார்பில் பால்கட்டிக் கொண்டால் என்ன மாத்திரை சாப்பிடுவது என்று சொல்லுக்கள்.

ஜலீலா அக்கா பதில் கொடுக்க.என் குழந்தைக்கு இப்பொழுது 8month. அன்புடன், சுபாஷினி.

By
Subhashini madhankumar

டியர் சுபாஷினி எவ்வளவு நாள் கொடுக்கிறீகளோ அந்த அளவிற்கு உங்கள் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
குறைந்தது ஒன்று முதல் ஒன்னறை வருடம்./ மீதி உங்கள் பால் கட்டி கொள்வது பற்றி எல்லாம் மாத்திரை எல்லாம் டாக்டரிடம் கேளுங்கள்.

சாப்படு, உணவு.
நான்கு (அ) ஆறு மாதம் வரை

ராகி கஞ்சி, கேதுமை மாவு கஞ்சி,சோஜி ரவை பாலில் காய்ச்சியது
போன்றவை

ஆறு மாததிலிருந்து பருப்பு சாதம்.
கேரட், உருளை வேகவைத்து மசித்தோ (அ) மிக்சியில் அரைத்தோ ஊட்டி விடுங்கள்
காய் வேக வைத்த சூப். சிக்கன் வேகவைத்த சூப் தண்னீர் மட்டும் காரம் இல்லாமல்.
எட்டு மாதம் என்றால் பல் முளைத்திருக்கும் எக்க் புட்டிங்,வேகவைத்தது, சிக்கன் போட்டு, (அ) காய் கறி போட்டு கிச்சிடி, தோசை, இட்லி எல்லா, கொடுக்கலாம்.

இப்ப டைம் இல்ல பா நிறைய டைப் பாண்ண

மற்ற தோழிமார்களும் நிறைய அட்வைஸ் தருவார்கள்
என் குறிப்பை செக் பண்ணுங்கள் குழந்தை உணவு நிறைய இருக்கும்.
ஜலீலா

Jaleelakamal

குறைந்தது 6வது மாதம் தொடங்கி நீங்க ஆகாரம் கொடுக்க ஆரம்பிக்கலாம்.நான் 10 மாதம் வரை தாய் பால் கொடுத்தேன்.ஆனால் 6வது மாததில் இருந்து carrot வேகவச்சு ப்ளெண்டரில் அரைத்து கொடுக்க ஆரம்பித்தேன்.டாக்டர் ஒரு உணவை எழுதி கொடுத்தாங்க.அதை வீட்ல prepare பண்ணி கொடுக்க ஆரம்பித்தேன்.பால்குடி நிறுத்த வயது வரம்பு கிடையாது.1 வயதுக்குள் நிறுத்துவது என் அபிப்ராயம்.இல்லாவிடில் நமக்கு அசெளகரியாமாகி போய்விடும்.

Dear Subha,

pls. send an email to all your friends (girls) in arusuvai and ask your queries. this is common for all, it will be viewed by everyone, both gender. its better to send separate email and get it clarified. you have started this question, now all will give differrent opionions and comments.

pls. don't mistake me

shaikha

இதுபற்றி மன்றத்தில் நிறைய இருக்கு பாருங்க. ஜலிலாக்கா, தளிக்கா, மனோகர் மேடம், மனோ மேடம் நிறைய குறிப்பு கொடுத்திருக்காங்க. உங்க டவுட் க்ளியர் ஆகும்னு நினைக்கிறேன்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

இப்ப என் ஊருக்கு போன் செய்தேன் என் கஸின் குழந்தை பெர்று இருக்கா..கொஞ்சநஆள்தான் ஆகி இருக்கு அவளுக்கு இப்ப பால் கட்டி இருக்காம் பாவம் அதனால் பீவர் வந்து இருக்கு போல வலி தாங்க முடியலன்னு அழுறா..என் ஊரில் ஒழுங்கான டாக்டர்ஸ் இல்லை பக்கத்து ஊருக்குதான் போகனும் இப்ப உங்க ஆலோசனை வந்தால் உடனே போனில் சொல்லிடுவேன்..இதை எப்படி சரி செய்யலாம்..அதோட பிறந்த குழந்தைக்கு ஒரு நஆளைக்கு எவ்வளவு மணி நேரத்திற்க்கு ஒரு முறை பால் கொடுக்கலாம்??பால் அதிகம் சுரக்க என்ன செய்ய வேண்டும்? என கேட்கிறாள் பிறந்த குழந்தை என்பதால் எனக்கு எல்லாம் மறந்து போய் விட்டது

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

பெரியோர்கள் பால் கட்டிய இடத்தில் மல்லிகைபூ ஒரு பந்து போல் வாங்கி அந்த இடத்தை சுற்றி வைப்பார்கள்.மெத்தென்று இருக்கும்,அப்போது அந்த பாலை கையாலேயே அழுத்தி அந்த பாலை எடுத்து விடுவர்.இந்த பாலை குழந்தைக்கு கொடுக்க கூடாது.அதிகபட்சம் 2 மணிநேரத்திற்க்கு ஒரு முறையாவது குழந்தைக்கு பால் கொடுக்கனும்.

சுகன்யா சொன்னதுபோல் பிறந்தகுழந்தைக்கு 2 மணிநேரத்துக்கு ஒரு தடவை பால் கொடுக்கலாம்.மார்பில் பால் கட்டிவிட்டால் மல்லிகைப்பூ[அ]கோஸ் இலை [அ]ஒரு சின்ன பாட்டிலில் சுடு தண்ணீர் ஒத்தடம் [கீழே ஒத்தடம் கொடுக்கும் போது துணி வைத்துக்கொள்ளவும்]செய்யலாம்.பால் அதிகமா சுரக்க சுறா மீன்,சிறுத்தை மீன்,பூண்டு,பால் சாப்பிடலாம்.முதலில் சுடுதண்ணீர் ஒத்த்டம் கொடுக்க சொல்லுங்கப்பா.

எனக்கு குழந்தை பிறந்து 5 மாதங்கள் தான் ஆகின்றது.எனக்கும் ஆரம்பத்தில் பால் கட்டியது....அப்பொழுது என் தோழி ஒருவர் நல்ல கனமான துண்டை சூடான நீரில் நனைத்து அதை மார்பின் மெல் போட்டு பிழிய சொன்னார்..அது எனக்கு மிகவும் வசதியாக இருந்தது.அதை முயற்சி செய்ய சொல்லுங்கள்.இரண்டு மணி நேரத்திர்கு ஒரு முறை பால் கொடுக்க சொல்லுங்கள்..நடு இரவில் ந்நன் அலார்ம் வைத்து எழுந்து கொடுத்தேன்....ஒரு மாதம் வரை....குணமானவுடன் தெரிவிக்கவும்

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
என்றும் அன்புடன்
ஜெயஸ்ரீ

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
என்றும் அன்புடன்
ஜெயஸ்ரீ

பிறந்த குழந்தைக்கு பால் குடுக்க குறிப்பிட்ட நேர இடைவேளை தேவைஇல்லை... குழந்தை எப்போப்போ அழுகிறதோ, அப்போதெல்லாம் குடுக்கலாம். மேலும், பிறந்து ரெண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு, குழந்தை அதிக அளவில் பால் குடிக்காது. அதனால், தாயின் பால் சுரப்பினை பொறுத்து, குறிப்பிட்ட நேர இடைவெளியில், express செய்து விடுவது நல்லது. ( in foreign coutries, pumps to express milk also will available.)

கருவாடு, பூண்டு நல்லது. மதர் ஹர்லிக்ஸ் கூட நல்லது தான்!

குழந்தை பால் குடிப்பது சமந்தமான கேள்விகள், ஆலோசனைகள், அறுசுவை யில் நிறைய உள்ளது.. பழைய பதிவுகளை பாருங்கள்.

And, one friend here suggested not to ask this kind of doubts in public. BUt, these kind of problems are common to all mothers. so, there is nothing to hesitate and feel shy. those who have experience will share how they managed.

dont mistake me too.

sija.

life is not wat u think! It is more than that!!!

மேலும் சில பதிவுகள்