காய் கறிகள் கீரை வகைகள........

காய் கறிகள் கீரை வகைகள் இன்டியன் க்ரொசரிகளில் வாங்குகிறோம். அவை யாவும் வத்தல் தொத்தலாகவே இருக்கு. என்ன செய்ய. கீரை காஞ்சி வாங்கின ப்ரயோஜனம் உண்டா,
தினமும் கீரை சாபிட்டால் நல்லது தெரியுது, எதை சமைக்க, வாடி போன கீரை, வதங்கிய காய்கறிகள் எங்கே போய் கிட்டு இருக்கோம் நம்ம?
உங்கள் கருத்து சொல்லுங்க

நாங்கள் எப்போதும் korean கடையில் vegetables வாங்குவோம். They are very fresh and tasty. You can try it too.
vany

இங்க வாடி வதங்கின காய்கறிகளை தண்ணி குடிச்சு இறக்கிக்கலாம்..ஊர்க்கு போனதும் முதல் வேளையா ஒரு சின்ன தோட்டம் போடனும்.சும்மா 2 சென்ட் இருந்தா போதும் கத்தரி முருங்கை,பப்பாளி காய்கறி கீரைன்னு போட்டு அதை செஞ்சு சாப்பிடனும்.
பரிச்சவுடனே செய்யும் காய்கறிகளின் சுவை கண்டிப்பா அசைவ உணவுக்கு இல்லை...ஒரு நாள் என் பாட்டி வீட்டில் செய்த பரித்த வாளவரை பொரியலின் சுவை இன்றும் என் நாவில் உள்ளது.
கீரையில் அந்த சிகப்பு கீரையை வாங்கவே கூடாது..கழிவு நீர் தேங்கு தண்ணியில் தான் அதை அதிகமா வளக்குராங்க...அதை குப்பை போல ரோட்டோரத்தில் போட்டு அது இங்க வந்து சேருவதை நினைத்தால் குமட்டுது.
அந்த கலரைக் கண்டால் வாங்கி விடுவோம் ஆனால் சுவையில் கொஞ்சம் கழிவுநீர் வாடை கூட வரும்..உவ்வே
ஆனால் அதுக்குன்னு என்னத்த சாப்பிடாம இருக்கரது..பட்டினி தான் பின்ன..எப்படியும் இனி வரும் காலத்தில் கேன்சர் ஹார்ட் அட்டாக் ஷுகர் ப்ரெஷர் தலைவிரித்தாடத் தான் போகுது..எல்லாத்தையும் ஒரு சின்ன காச்சல் போல எடுத்துகிட்டு கெடச்சதை சாப்பிட்டுட்டு சந்தோஷமா இருக்க வேண்டியது தான்

தளிகா,
நானும் அதை தான் முடிவு பண்ணி இருக்கேன். தோட்டம் போட்டு வளர்க்கணும்.
வாணி,
இங்க கொரியன் கடை இல்லை.
பார்போம்
ரேணுகா

nationality

மெக்ஸிகன் கடையில் நமது காய்கள் நல்லா கிடைக்கும், கொத்தமல்லி,கீரை வகைகள் வாசனையுடன் இருக்கும்.. சைனீஸ் கடையிலும் முயற்சிக்கலாம்.

கார்டன் பகுதியைப் பார்த்து இந்த முறை தோட்டம் போட்டேன். நல்ல மகசூல், ஆனால் தோட்டம் போட்ட, அதிரா,விஜி போன்றோரின் பின்னுட்டம் அங்கு காணவில்லையே?

நான் தக்காளி,புதினா,கத்திரி,வெங்காயம்,மிளகாய் போட்டேன். அடுத்த முறை அதிக காய்கள் போட உள்ளேன். உரம் அதிகம் உபயோகித்தால் மண் புழு இறந்துவிடும் என்று பயந்து 2 முறை மட்டும் உபயோகித்தேன். ஆகவே வீட்டிற்கு தேவையான அளவு மட்டும் காய்த்தது. நண்பர்களுக்கு கொடுக்க முடியவில்லை.

நீங்களே வீட்டில் உரம் தயாரிக்கலாம். ஒரு தொட்டியில் ஒரு லேயர் மண் அதன் மேல் மக்கும் குப்பைகள் (காய்கறித்தோல், பேப்பர் குப்பைகள்) ஒரு லேயர் - இதுபோல் மாற்றி மாற்றிப் போட்டு வையுங்கள். ஒன்றிரண்டு மண்புழுக்களையும் அந்தத்தொட்டியில் போடலாம். இப்படி இயற்கை உரம் போட்டால் மண்புழுக்கள் சாகாது.
ஆனால் இது உங்களுக்கு சாத்தியமா என்று எனக்குத் தெரியவில்லை.
இந்த முறையில் நல்ல மகசூல் கிடைக்கும்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

மேலும் சில பதிவுகள்