அடையார் ஆனந்தபவன் வெங்காயத் துவையல்!

ஹாய் ப்ரெண்ட்ஸ்,

போன கோடை விடுமுறையில் இந்தியா சென்றிருந்த போது, நிறைய ருசியான சாப்பாடு எல்லாம் சாப்பிட்டு ( : )) எஞ்ஜாய் பண்ணிட்டு வரும்போது ஸ்வீட்ஸ், ஸ்னாக்ஸ் எல்லாம் பர்சேஸ் பண்ணும்போது அப்பா ஒரு சில ஐயிட்டம்ஸ் கூடவே சஜஸ்ட் பண்ணி வாங்கி கொடுத்தார்... அது இந்த துவையல் வகைகள்... கோங்கூரா (அதாங்க புளிச்ச கீரை), கருவேப்பிலை அப்பறம் வெங்காயத்துவையல்... எல்லாம் ரொம்ப டேஸ்டியா, ஹேண்டியா இருந்தது... அவசரமா ஆபீஸ்க்கு லன்ச் கட்ட உதவியா இருந்தது... சுட சுட சாதம் வைத்து, துவையலை கொஞ்சம் போட்டு நல்லெண்ணெய் கொஞ்சம் விட்டு பிசைந்து சாப்பிட்டால்... அடடா, சுவை ஜோர்தான் போங்க!.

மத்த ரெண்டு துவையலும் எனக்கு நல்லாவே செய்ய வரும். ஆனால் இந்த வெங்காயத்துவையல் எப்படின்னு தெரியலை. வெங்காய சட்னி பல முறை செய்திருகிறேன்... ஆனால் துவையல்...

தோழிகளே உங்களில் யாருக்காவது இந்த சுவையில் வெங்காய துவையல் தயாரிப்பது எப்படி என்று தெரிந்தால் , ப்ளீஸ் எனக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன். நன்றி!

அன்புடன்,
ஸ்ரீ

மன்னிக்கவும்... நான் கடை பேரை தவறாக எழுதிவிட்டேன்...

அது அடையார் க்ராண்ட் ஸ்வீட்ஸ் வெங்காயத் துவையல்!

ஆனந்த பவன் அல்ல..... இங்கேயும் ஸ்வீட்ஸ் , ஸ்னாக்ஸ் வாங்கியதால், துவையல் வாங்கியது இங்குதான் என்று கொஞ்சம் குழம்பி விட்டேன். ஹி..ஹி.....

அன்புடன்,
ஸ்ரீ

பி.கு. கேள்வியையும் சரியாக மாற்றி விட முயற்சி செய்தேன், முடியவில்லை.
'மாற்று' ஆப்ஷன் உபயோகித்து கருத்தைதான் மாற்ற முடியுமா?! புதிதாக சேர்க்கப்பட்ட கேள்வியை முடியாதா?!!

அன்புடன்
சுஸ்ரீ

அட, என்னப்பா.. யாரும் ஒரு பதிலும் சொல்ல மாட்டேங்கறீங்க?! ஓகே, ஓகே... அது சரி, க்ராண்ட் ஸ்வீட்ஸ் கடை வெங்காயத்துவையல்தான் வேணும்னு நான் அடமெல்லம் பிடிக்க மாட்டேன். : ) வேறு ஏதாவது ரெஸிபி இருந்தாலும் சொல்லுங்கள் தோழிகளே....

நான் தேடின வகையில் இங்கே ஏதும் எனக்கு தென்படவில்லை. தெரிந்தால் லிங்க் கொடுங்க ப்ளீஸ். நன்றி!

அன்புடன்
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

vengayth tha nall veyil la kaaya podunga, athu nalla kainthathaum neenga eppadi vengaya chutney pannuveengalo appadi seinga vathakittu. but its nt adyar grand eet chutney it will come with good smell and diffrent teast. hi suji how r u?

//'மாற்று' ஆப்ஷன் உபயோகித்து கருத்தைதான் மாற்ற முடியுமா?! புதிதாக சேர்க்கப்பட்ட கேள்வியை முடியாதா?!!// முடியுதே! உங்க அக்கவுண்ட் லாகின் செய்து இருக்கணும். பிறகு தலைப்பில் ஒருமுறை க்ளிக் பண்ணுங்க. போஸ்ட்டுக்கு மேல வலதுபுறம் 'பார்வையிடுக' & 'மாற்றுக' இருக்கு. 'மாற்றுக' உள்ளே போனால் விரும்பியதை மாற்றலாமே!

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்