ஹையா ஜாலி அறட்டை இல்லை சந்தோஷ அறட்டை

சந்தோஷமா பேசுங்கள் சிரிங்க சிரிச்சிக்கிட்டே பேசுங்க.

மர்லி கன்னி தீவு இல்லை இந்தாங்க கண்ணை துடைத்து கொள்ளுங்கள் இப்ப அதிரா வந்தால் அவ்வளவு தான் என்ன நடக்குமுன்னே தெரியாது//

ஹா ஹா ஹா

சந்தோஷமா பேசுங்கள் சிரிங்க சிரிச்சிக்கிட்டே பேசுங்க.

மர்லி கன்னி தீவு இல்லை இந்தாங்க கண்ணை துடைத்து கொள்ளுங்கள் இப்ப அதிரா வந்தால் அவ்வளவு தான் என்ன நடக்குமுன்னே தெரியாது//

ஹா ஹா ஹா

Jaleelakamal

இனி சண்டை பேச்சோ , வாக்குவாதமோ தேவையில்லை/போதும் பா நிறுத்துங்க//

தோழிகளே உங்கள் அறட்டையை இங்கு நடத்துங்கள்
50 பதிவுக்கு மேல் போக வேண்டாம் அந்த பதிவுக்கு என்னை மாதிரி சோம்பேறிகளுக்கு ஓப்பன் பண்ண முடியல ஹி ஹி ஹா ஹா

ஜலீலா

Jaleelakamal

ஹாய் சுதா
எப்படி இருக்கீங்க ரியா (பேரு நல்லா இருக்கு) எப்படி இருக்காங்க.சீக்கிரமா பில்டர் காபி போட்டு கொடுங்க,நான் ரொம்ப நாளா வெயிட் பண்ணிட்டுயிருக்கேன்.

அங்க பதிவுகள் நிறைய ஆயிடுச்சு அதுதான் இங்க வந்துட்டேன் இனிமே இங்கேயே தொடரலாம்.

இது ரொம்ப மோசம்.நகைச்சுவை பகுதியில் இருந்து அப்படியே copy பண்ணி இங்க paste பண்ணிட்டீங்க.ஜலீலா மேடம் சண்டை வேணாம்னு அவ்ளோ தடவை சொல்லியும் நீங்க மன்னிப்பு கேக்றேன்னு ஏம்ப்பா எங்கள இப்படி கொல்றீங்க!!!!!வேணா அழுதுடுவேன்?????வலிக்குது!!!!ஆனாலும் நீங்க புடிச்ச புடியில இருக்கீங்க.நடுவில் இதை படிக்கிற தோழிகள்(அதான்பா நாங்கல்லாம்)பார்த்து படிச்சு நொந்து நூலா சாரி நூடுல்ஸா போயிடுவோம் போல.

ஏம்ப்பா கவி.எஸ் ஃபில்டர் காபிய குடிக்காம சுதாவை விட மாட்டீங்கன்னு நினைக்கிறேன்.நகைச்சுவை பக்கம் உங்கள ஆளை காணோம்.ஒரு வேளை அந்த கவி(கவிசிவா)வந்தா நீங்க பெயர் குழப்பம் ஆயிடும்னு வரலையோ.கவலைப்பாடாதீங்கோ உங்கள கவி.எஸ் என்றே அழைக்கிறேன்.வந்து சும்மா பதில் சொல்லிட்டு போங்க.

பாருங்க சுஹைனா நானும் ஒரு வகையில் இதுக்கு காரணமா இருந்திருக்கேன்.எப்படி ஒரு கவிஞிக்கு(கிறுக்கிக்கு இது நல்லால்ல கிறுக்குபவருக்கு)தெரியலனா எப்படி.நான் நகைச்சுவைல அந்த பதிவ போட நீங்க அதோடு இதையும் சேர்த்துக்குங்கன்னு நீங்க சொல்ல எப்படியோ சேர்ந்தா சரிதான்.sweet கொடுங்கப்பா

நல்ல விசயம் சுஹைனா,மர்ழியா வாழ்த்துக்கள்.

எப்படி இருக்கீங்க?அப்புறம் நான் முன்னரே ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.நீங்கள் கவனிக்கலைன்னு நினைக்கிறேன்.எனக்கு ஒரு பெண் குழந்தை,3 வயது ஆக போகுது.ரொம்ப சுட்டி.கேள்வி கேட்டே என்னை ஓட வைப்பாள்.அவகிட்ட எஸ்கேப் லாம் ஆக முடியாது.பதில் சொல்லாம விடமாட்டாள்.அப்புறம் என்னப்பா carefourல கொலுச தொலைச்சிட்டீங்க.அங்க தேடினா கூட கிடைக்கிறது கஷ்டம்.கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும் பா.நானே என் பொண்ணுக்கு எதாவது நகையை போட்டால் அங்க மால் சுத்தி பார்க்கிறேனோ இல்லையோ இவளை நிமிஷத்துக்கு 10 தடவை பார்பேன்(அதான்பா லுக் விடுறது).

சீ என்னப்பா இந்த climate வேற சரியில்லை.திடீர்னு குளிர்ச்சியா இருக்கு,பல நேரம் சூடு தாங்க முடியல.என் பொண்ணுக்கு சீதோஷ்ண நிலை மாறுவதால்,சில சமயம் உடம்புக்கு ஒத்துக்க மாட்டேங்குது.ஒகே அப்புறம் எல்லாருக்கும் ஒரு ஹாய்...

நீங்க நலமா. பொண்ணு எப்படி இருக்கா? ரொம்ப சுட்டினு சொன்னதும் பார்க்க தோணுது. எம்பொண்ணும் இப்போ ரொம்ப சூட்டிதனம் பண்ணுது. கொலுச மிஸ்பண்ண அதுவே காரணம். நானும் உங்களை மாதிரிதான் சுகன்யா எப்பவும் அவமேல் கண்ணு வச்சிட்டுதான் இருப்பேன். இப்போ ரொம்ப துருதுருனு வரா. அவளே நடப்பேனு பிடிவாதம். நாங்க 2 பேரும் தூக்கினால் அழுகை. carrefour la நான் எங்கேயும் போகல only Electronic section. அதுவும் கஸ்டமர் கேரில் ரொம்ப நேரம் நின்றிருந்தேன்.

ரிட்டர்ன் வரும் போது டேக்ஸியில் ஷூ வை கழற்றி விளையாடிட்டு இருந்தா. எப்பவும் டாக்ஸி நம்பர் பார்ப்போம். அன்னைக்கு அதையும் மிஸ்பண்ணிட்டோம். வாங்கி இருபதுநாள் கூட ஆகல. அதுதான் மனதுக்கு கஷ்டமாயிடிச்சு சுகன்யா. என்ஹஸ் அதப்பத்தி எல்லாம் நினைக்க கூடாது. போகனும்னு இருக்கு போயிட்டு ஈஸியா எடுத்துக்க என்று சொல்லிட்டார். எனக்குதான் இன்னும் மனசு ஆறல. எம்பொண்ணு நல்ல கூடபோடல. டமாஸ்லதான் வாங்கினேன்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

எனக்கும் ஜலதோஷம் தான்,இப்ப பரவால்ல.உங்க பொண்ணுக்கு என்ன வயசு.நான் கூட ஒருமுறை carefour கஸ்டமர் கேர்க்கு சென்று,ஒன்னு replace பண்ண போயிருந்தேன்,ரொம்ப மோசம் அவங்க service.கிட்டத்தட்ட 1 மணிநேரத்துக்கு மேல காத்திருந்தோம்.இத்தனைக்கும் 3 பேர் தான் க்யூவில்.அங்க ஆளே இல்லை.வெறுத்து போயிட்டேன்.

நீங்க டாக்ஸி விட்டு இறங்கும் போது எப்பவும் check பண்ணிட்டு இறங்குங்க.டாக்ஸி நம்பர்லாம் நோட் பண்ணி அதுக்கு நாம ஒரு 4 தடவை டாக்ஸில போனா புது தங்க கொலுசே வாங்கிடலாம்பா.அவ்ளோ விலைவாசி ஏறி போச்சு.

நீங்க டமாஸ்ல வாங்குவீங்களா,நான் முதலில் ஜாய் ஆலுக்காஸில் வாங்கிட்டு இருந்தேன்.போனமுறை atlas ல வாங்கினேன்.அங்க கொஞ்சம் நல்ல ஸர்வீசும்,விலை கட்டுபடியாகவும்,நிறைய டிசைன்னும் இருந்தது.

ஆமாம்பா ஒரு பொருள் தொலைந்து போனால் ரொம்ப மனசு வலிக்கும்.நாம குழந்தைங்கள்கிட்ட என்ன கேட்டாலும் தெரியலன்னு சொல்வங்க.உப்புசப்பில்லாத விஷயத்தை(எழுதாத பேனா,டேமேஜ் ஆன பொம்மை)இதெல்லாம் தொலைச்சு,எங்க வச்சன்னு கேளுங்க,டான்னு பதில் வரும்.எடுத்துட்டு வந்து கொடுப்பாங்க.எனக்கு இப்படி தான் சில சமயம் கோவம்கோவமா வருமா,அப்புறம் அவளே சொல்லுவா`இப்ப தானே கொஞ்சுனீங்க,இப்ப என்னை திட்டுறீங்களே’இப்படி எதாவது டயலாக் பேசியே டாபிக்கை மாத்தி,என் திட்டுற moodஐயும் மாத்திடுவா.

ஒரு பொருளை தொலைச்சிட்டா அதோட ஏதோ ஒரு கெட்டது ஒன்னு தொலைந்து போச்சுன்னு மனசுல நினைச்சுக்குங்க.கொஞ்சநாள் கழிச்சு மனசு ஆறிடும்.ஓகே வா சுட்டியை கேட்டதாக சொல்லுங்க..

என்னாச்சு? எப்போ?எங்க வீட்டுக்கு வந்து போனபின்பா?மனசு ரொம்ப கஷ்டமயிடுச்சு.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மேலும் சில பதிவுகள்