"ஒரு பெண்ணுக்கு எதிரி ஆணா, பெண்ணா?'

அன்பு அறுசுவை சகோதர, சகோதரிகளே,
அனைவருக்கும் வணக்கம். முதல்ல இப்படியொரு தலைப்பு கொடுத்ததிற்கும், என்னை நடுவராக தேர்ந்தெடுத்தமைக்கும் ஜெயந்தி மேடத்திற்கு நன்றி(ஆஹா, எனக்கு மிகவும் பிடித்த தலைப்பு!!) நடுவராக இருப்பது எனக்கு முதல் அனுபவம். அதனால், கொஞ்சம் பயமாகவே இருக்கிறது.

"ஒரு பெண்ணுக்கு எதிரி ஆணா, பெண்ணா?'

இதுதான் தலைப்பு. அனைவரும் கவனிக்க. சில முக்கியமான விதிகள்.

1. விவாதங்கள் தலைப்பை ஒட்டியே இருக்கவேண்டும்.
2. யாரும் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்குவது போல் பதிவுகள் இருக்கக்கூடாது.
3. சொந்த மற்றும் கேள்விப்பட்ட, பார்த்த அனுபவங்களை சொல்லலாம்.
4. மதம், ஜாதி இவற்றின் அடையாளம் எங்கும் வரக்கூடாது.
5. பதிவுகள் ஆரம்பிக்கும் அனைவரும் நல்ல தொடக்கமாக தொடங்க நினைத்தால் வணக்கம் என்ற வார்த்தையை மட்டும் உபயோகிக்கவும். வேறு எந்த வார்த்தைகளும் வேண்டாம்.
6. நேரிடையாக இந்த பதிவு உனக்கு என்பது போல பதிவுகள் எதுவும் இதில் வேண்டாம்.
7. முடிந்தவரை ஒருவர் இரண்டு அல்லது மூன்று முறைக்குள் கருத்துகளை சொல்லி முடிப்பது போல பார்த்துக் கொள்ளுங்கள்.
8. கண்ணியமான வார்த்தைகளை மட்டும் பிரயோகிக்கும் படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

எனக்கு தெரிந்தவரை விதிமுறைகளைக் கூறிவிட்டேன். மற்றபடி அனைவரும் சபை நாகரீகத்தைக் காக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு பெண்ணின் சுக, துக்கங்களுக்கு எதிரியாக இருப்பது ஆண்கள் தான் என்றிருந்த காலம் மாறி, பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்று நினைப்பது போல் இருக்கிறது. இப்ப அவரவர் தரப்பு விவாதத்தை எடுத்து வையுங்கள் பார்ப்போம் எங்கும் எல்லை மீறாமல்.

கடைசியில் வந்து என்னுடைய தீர்ப்பை சொல்லுவேன்னாலும், இடையிலும் வருவேன், சாலமன் பாப்பையா மாதிரி:-))
அன்புடன்,
செல்வி.

நடுவர் உரையைத் துவக்கியாச்சு. இனி அணியினர் வந்து விவாதங்களைத் தொடரலாம்.

அன்புடன்,
செல்வி.

அனைவருக்கும் வணக்கம். பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்பதுதான் என் கருத்து.
முதலில் பெண் கருவாக உருவாவதிலிருந்து ஆரம்பிப்போம். கருவில் இருப்பது பெண் என்பது தெரிந்ததுமே அதை கலைக்க சொல்வது முதலில் ஒரு பெண்ணாகத்தான் இருக்கும் மாமியார் அல்லது வேறு ஒருவரின் ரூபத்தில்.அந்த நிலையை கடந்து பெண் குழந்தை இம்மண்ணில் பிறந்ததும் அதை நெல் மணி கொண்டும் கள்ளிப்பால் கொண்டும் அழிப்பதும் பெண்ணே. பெற்றோர்களால் பிற்காலத்தில் மணமகன் என்னும் ஆணுக்கு கொடுக்க வேண்டிய வரதட்சிணையை கருத்தில் கொண்டுதானே சிசுக்கொலைகள் நடக்கின்றன என்று எதிரணியினர் கேட்கலாம்.ஆனால் அந்த வரதட்சிணை கேட்பது மாமியார் என்னும் பெண்.அதற்காக மருமகளை கொடுமைப் படுத்துவதும் ஒரு பெண்.
கொஞ்ச காலம் கடக்கிறது.மாமியாருக்கு வயதாகிறது.மருமகள் கை ஓங்குகிறது.இப்போது மாமியாரின் இடம் வீட்டுத் திண்ணை இல்லையென்றால் முதியோர் இல்லம்.இங்கே பாதிக்கப் படுவது மாமனார்,கணவன் என்ற ஆண்களும் கூட.இங்கே பெண்ணுக்கு யார் எதிரி பெண்தானே.
குடும்பத்தை விட்டு வெளியே வருவோம்.அக்கம் பக்கத்திலும் அலுவலகங்களிலும் அதிகம் (கவனிக்கவும்) அதிகம் புறணி பேசுவது யார்?பெண்கள்தான் என்ற உண்மையை வெட்கத்தோடு ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். இந்த புறணியும் அதிகமாக இன்னொரு பெண்ணைப் பற்றித்தான் இருக்கும்.இங்கேயும் பெண்ணுக்கு பெண் எதிரியாகிறாள்
நடுவர் அவர்களே நல்ல தீர்ப்பு சொல்லும்படி கேட்டுக் கொண்டு என் முதல் சுற்று பேச்சை முடிக்கிறேன்.(யாருப்பா அது சோடா கொடுங்கப்பா...)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

செல்வி மேடம் rules and regulations சூப்பர்.அதுவும் 3 பதிவுக்கு மேல் போடக்கூடாது சொன்னது அதை விட அருமை.தலைப்புக்கு வருவோம்.1,2,3....start

பெண்ணுக்கு எதிரி ஆண் தான்.சிறுவயது முதலே எடுத்துக் கொள்ளுங்கள்.பெண் என்றால் சொல்படி தான் கேட்கனும்.வாழ்க்கையிலேயே சின்ன வயதில் அப்பா என்றாலே கண்டிப்பு என்று தான் அர்த்தம்.வெளியே சென்றால் அதுவும் பஸ்ஸில் ஏறினா சொல்லவே வேணாம்,அந்த இடுபிடியெல்லாம தாண்டி அலுவலகம் வந்தா பழகும் சில மனிதர்களும் வேறு பார்வையில் தான் பார்ப்பர்.திருமணமாகிட்டா இன்னும் சுத்தம் சொல்லவே வேணாம்.

அந்த வரதட்சணையை வாங்க கூடாதுன்னு அம்மாகிட்ட சொல்ல வேண்டியது தானே.ஆண் வரதட்சனை வாங்காம இருந்தா பல பெண்களுக்கு திருமணமாகும்.ஆனால் ஒரு பெண் வரதட்சனை கொடுக்காம திருமணம் பண்ணனும்னா அது ரொம்ப கஷ்டமாதான் உள்ளது.சிசுகொலைக்கு பெண் மட்டுமே காரணமில்லை,ஆணும் தான்,தனக்கு கொள்ளி வைக்க ஓர் ஆண் மகன் வேண்டும் நினைப்பதும் அவர்களே.பல படங்கள் இதுக்கு எடுத்துக்காட்டு.

எதிரணியினருக்கு பெண்ணுக்கு பெண்ணே எதிரிங்கற்த்துக்கு ஒரே ஒரு சாக்கு தான்,மாமியார் மருமகள் சண்டை வரக் காரணம் பெண் தான்பாங்க.அதுக்கும் காரணம் ஆண் தான் என்பேன்.சமாதானம் செய்து வைக்காமல் நின்று நமக்கென்ன என்று வேடிக்கை பார்க்கும் ஆண்களே பெண்ணுக்கு எதிரி.

இது அவரவர் சூல்நிலைகள்,அவர்களை பாதித்த நிகழ்வுகள் இவற்றை பொறுத்தே சொல்ல முடியும்.என்னைப் பொறுத்தவரை பெண்ணே .

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

சபாஷ் சரியான தலைப்பு!!!!!!!!!!!பெண்ணே என்பது என் வாதம். முதலில் நம்ம அம்மாகிட்ட இருந்து ஆரம்பிக்குது. வீட்ல ஒரு பொண்ணு, ஒரு பையன் இருந்தாங்கனா அம்மாவின் பங்கீடு முறை கொஞ்சம் வேறுபடுந்தானே.(நொறுக்கு தீனி முதல் விளையாட்டு பொருள் வரை)அதுக்கு சொல்லப்படும் சாக்கு பொண்ணுனா எல்லாத்திலயும் அட்ஜஸ்டு செய்துட்டு போகணும்.ஏன்னா!நாம (பெண்கள்)வேற வீட்டுக்கு போக போறோம்( அதனால்தான்பாங்க) கொஞ்சம் பெரிசானபிறகு நம்ம அம்மா நம்மை கவனிக்கறதைவிட நம்ம பக்கத்துவீட்டு ஆன்ட்டிகளால் தான் அதிகமா கவனிக்கப்படுவோம்.உங்க பொண்ணு அங்க யார்கிட்டயோ பேசிண்டு இருக்கா பார்த்துக்கோங்க ( போட்டு கொடுக்கிறதில் அப்படி ஒரு சந்தோஷந்தான்) ஸ்கூல்ல (கோ-எஜுகேஷனாயிருந்தா) பார்த்தீங்கனா நம்ம படிப்பு மற்றும் விளையாட்டு விஷயத்தில (பொறாமையிலும்) நம்ம எதிரணியினர் நம்ம கேர்ல்ஸ்தான்.பசங்க அவங்க வழி தனி வழியின்னு போயிகிட்டேயிருப்பாங்க. அப்புறமா திருமணம்(இது நம்ம மெயின் லாக்)எப்படியோ எல்லா டெஸ்டுலையும் பாஸ் பண்ணி (அதுதாங்க பெண் பார்க்கிறதில் ஆரம்பித்து கூட்டல் கழித்தல் எல்லாம் முடிந்து )புகுந்த வீட்டுக்குள்ளயும் புகுந்துட்டோம்.அங்கதான் நிக்கிறான் சந்திரன் (எஸ்.எஸ்.சந்திரன் ஸ்டைல்)மாதிரி நம்ம அம்மிணிகள் இருப்பாங்க மாமியார்,நாத்தனார்&ஓரகத்திகள் மற்றும் பலர்.நின்னால் குற்றம்,நடந்தால் குற்றம்,பேசினால் குற்றம் பேசாவிட்டாலும் குற்றம்.ஆண்கள் பாவம்.அவர்கள் கடமை (மனைவி,அம்மா&உடன் பிறந்த பிறவாத சகோதரிகளிடம் மற்றும் அவர்வீட்டுகுலகொழுந்துகளிடமும் மாட்டிக்கொண்டு முழித்தல்) பொருள் ஈட்டி குடும்பத்தை காத்தல்.அதனை செவ்வனேசெய்கின்றார்கள்.......... Every day is a little life.Live it to its fullest

எல்லா காலகட்டதிலும் பெண்களுக்கு எதிரி ஆண்கள் தான் என்பது எனது வாதம்..
1.மகளிர் பஸ் விடுவதற்கு காரணம் ஆண்கள் தொல்லை தாங்க முடியாமல் போனதால்..
2.ஈவ் டீசிங் கொடுமையில் சரிகா இறந்ததற்கு காரணம் யார்? ஆண்தான்
3.பெண் தற்கொலை செய்து கொள்வதற்கு பெரும்பாலும் காரணம் ஆண்கள்..அது மாமியார் கொடுமையாய் இருந்தாலும் தன்னை நம்பி வந்த பெண்ணுக்கு தன்னுடைய சப்போர்ட் செய்யாமல் விடுவது தான்
3. என் ஆசைகளை மதிக்காமல் கல்லூரியில் படித்து கொண்டு இருந்த என்னை படிப்பை நிறுத்தி பாதியில் கல்யாண பந்ததில் சேர்த்தது ஒரு ஆண்(அப்பா)..அந்த விசயத்தில் அப்பாவாக இருந்தாலும் எதிரி தான்..அவர் அப்படி செய்ய காரணமும் ஒரு ஆண்(முறை மாமன்கள் தகறாறு)
4. இப்போது பல பேர் தன்னுடைய திறமைகளை எல்லாம் அடக்கி கொண்டு(பல பேருக்கு நம்மிடம் என்ன திறமை இருக்குன்னு தெரியல) இருப்பதற்கு காரணம் கணவர் என்னும் ஆண் தான்
5.ஆண்களுக்கு இயற்கையிலே ஆணாதிக்கம் வந்து விட்டது..இது பெண்களுக்கு மிக பெரிய எதிரி..எது செய்தாலும் கணவரை கேட்க வேண்டும்..அப்பாவை கேட்க வேண்டும்..சுய அறிவு கிடையாதா? என்ன கொடுமை இது?
6.ஒரு ஆண் எத்தனை பெண்களுடனும் சகஜமாக இருக்கலாம், திருமணத்தில் எந்த ஒரு பாதிப்பும் இருக்காது..ஆனால் பெண் என்றால் அடக்கமாய் இருக்க வேண்டும்..இப்படி சகஜமாய் இருக்கும் பெண்களை யாரும் சகஜமாய் பார்ப்பது கூட இல்லை
7.வரதட்சணை வாங்கி மாமனார் அக்கவுண்டுக்கு தானே போகிறது அல்லது கணவரின் அக்கவுண்டிற்கு போகிறது..
8.தம்பதிகளுக்கு குழந்தை இல்லை என்றால் ஆண்களை விட பாதிப்பு பெண்களுக்கு தான்.. அந்த பட்டமும்(சொல்ல விரும்பமில்லை..அந்த பட்டத்தால் மிகவும் பாதிக்க பட்டு இருந்தேன்) பெண்களுக்கு தான்..
9.நாம் ஒரு 33% இட ஒதுக்கீட்டுக்கு என்ன பாடு பட வேண்டி இருக்கு? 50% கேட்டால் அவ்வளவு தான்..
10.ஆண்கள் நடத்தும் நேர்முக தேர்வில் எத்தனை பேர் பெண்கள் என்ற ஒரு காரணத்திற்காக செலக்ட் செய்யபடுவதில்லை? காரணம் அவர்களால் நீண்ட நேரம் வேலை செய்ய முடியாதாம்..மகப்பேறு விடுமுறையில் சென்றுவிடுவார்களாம்..
முடியல..இன்னும் சொல்லி கொண்டே இருப்பேன்.. எழுத முடியல..அடுத்த பதிவில் வாய்ப்பு கிடைத்தால் எழுதுகிறேன்,,ஆக எப்போதும் பெண்களுக்கு தொல்லை ஆண்கள் மூலம் தான்.. எனவே எதிரி ஆண்கள் தான் என்று சொல்லி என் உரையை முடிக்கிறேன்..நன்றி..

அழகிய முன்னுரையுடன்,செல்விக்கே உரிய மென்மையுடன்,அழகான,மென்மையான விதிகளுடன்,பட்டிமன்றத்தை ஆரம்பித்த வைத்த ஸ்னேகிதி செல்விக்கு எனது நன்றி.ஏனைய ஸ்நேகிதிகளும் அதனை பின்பற்ற வேண்டும் என்பது என் அவா.
மேற்கண்ட தலைப்பில் நானும் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு வாதிக்க வந்ததற்கு அவமானமாக இருந்தாலும் இதுதான் உண்மை.அதற்காக பெண்கள் அனைவரும் இப்படித்தான் என்று 100%கூற முடியாது.சதவிகிததில் பார்க்கப் போனால் என்னுடைய தலைப்புக்குத்தான் அதிக ஓட்டு.

1.பெண்குழந்தை பிறந்ததும் முகம் சுளிப்பது பெண்கள்தான்.நான் நிறைய பார்த்து இருக்கின்றேன்.போதாதற்கு நாம் பட்ட கஷ்டம் குழந்தையும் படக்கூடாது என்ற வியாக்கியானம் வேறு.

2.மாமியார் கொடுமை கேள்விப்பட்டுள்ளோம்.மாமனார் கொடுமை கேள்விப்பட்டுள்ளோமா?மருமகள் கொடுமை என்றும் கேள்விப்பட்டுள்ளோம்.மருமகன் கொடுமை என்று கேள்விப்பட்டுள்ளோமா?

3.குழந்தை தவறு செய்தால் அப்பா கண்டிப்பார்.அம்மா அடிப்பார்.இதுதான் வழக்கத்தில் உள்ளது.

4.சனியனே,நாயே.பேயே என்று திட்டுவது அப்பாக்கள் அல்ல.நிச்சயமாக அம்மாக்கள் தான்.

5 தன் குழந்தைகள் அப்துல் கலாம்களாகவும்.பில்கேட்ஸ்களாகவும்.லட்சுமி மிட்டல்கலாகவும்.டாடாக்களாகவும் பிர்லாக்களாகவும் ஆகிவிடவேண்டும் என்று பேராசைப்பட்டு(ஆசைப்படுவதில் தப்பில்லை)இதற்கெல்லாம் படிப்புத்தான் முக்கியம் என்று(இது உண்மைதான்)பிஞ்சுகளைப்போட்டு வறுத்து எடுப்பது யார்?அம்மாக்கள் தான்.

6.பெண்களிடத்தில் தான்,போட்டியும் ,பொறாமையும்,தான்தான் பெரியவள் என்ற அகம் பாவமும் அதிகம் உள்ளது.பெண்கள் தான் தனக்கு அனைவரும் முக்கியத்துவம் தர வேண்டும் என்று விரும்புவார்கள்.இதனால் பெண்ணுக்கு பெண்ணே எதிரி ஆகின்றாள்.

7.ஒரு அலுவலம் செல்லுங்கள்.பெண் ஊழியர் எவ்வளவு அலட்சிய போக்குடன் நடக்கின்றார்.இதுவே ஆண் ஊழியர் ஆனால் கண்ணியமாக,உதவி செய்யும் மனபோக்குடன் இருப்பார்.
9.நட்புகளுக்குள்ளும் பெண்களிடத்தில் ஏற்றதாழ்வு,போட்டி,பொறாமை,முக்கியத்துவம்,அலட்சியம்,போன்றவை அதிகம்.இதனால் ஒரு பெண்ணே பெண்ணுக்கு எதிரி ஆகின்றாள்.

10. நம் நடவடிக்கைகளைப்பார்த்து கமெண்ட் அடித்து சிரிப்பது அக்கம் பக்கம் அண்ணன்கள் அல்ல.அண்ணிகள்தான்.

11.நம் உயர்வுகளைப்பார்த்து காதில் புகை விடுவது உடன் பிறவா சகோதரர்கள் அல்ல.சகோதரிகள்தான்.

12.கடைகளுக்கோ,அலுவலகங்களுக்கோ,அட,கியூவில் நின்று டிக்கட் வாங்குவதாக இருந்தாலோ காசை வாங்கிக் கொண்டு எதோ பிச்சை போடுவது போல் பாவனையில் இருக்கும் சில பெண்களின் செய்கை ஐய்யோ..அதை எல்லாம் பார்த்து விட்டு தான் இந்த தலைப்பில் பதிவு போடுகின்றேன்.

13.இது தேவை இல்லாததுதான் இருந்தாலும் என் அருமை தம்பி என்னை கலாய்ப்பதில் அதீத ஆர்வம் கொண்டவன்,அறுசுவை பதிவுகளைப் பார்த்து விட்டு அறுசுவைக்கு பதிவு போடாமல் என்னிடம் கமெண்ட் அடிப்பவன் இந்த பட்டி மன்றதலைப்பை பார்த்து விட்டு சில சமயம் ஆண்களுக்கு கூட பெண்கள் தான் எதிரி என்று கலாய்த்து எத்தனை பெண்களுக்கு மத்தியில் பாபு மாட்டிக்கொண்டு விழிக்கின்றாரே.அட்மின் பாவம் என்று சாட்டில் உச் கொட்டுகின்றான். :) :)

14.கம்பியூட்டரை எங்களுக்குத் தராமல்,தனியாக ஒரு லேப்டாப் கூட வாங்கித்தராமல் பொழுதும் நீங்களே பி சி முன் உட்கார்ந்து அரட்டை அடிக்கின்றீர்களே நீங்கள் தான் எனக்கு எதிரி என்று என் அருமை புத்திரன் ஆதங்கப்படுகின்றான்.

15.13,14 வது பாராக்கள் ஸ்னேகிதிகள் ஸ்மைல் பண்ணுவதற்காக.தவறாக நினைக்க வேண்டாம்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

நம் நடுவர் அவர்களுக்கு முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல விதிமுறைகளை கொடுத்துள்ளீர்கள் செல்விமா. உங்களுக்கு மிக்க நன்றி. அதை எல்லோரும் மீறாமல் விவாதிப்போம்.

என்னைப் பொருத்தவரை பெண்ணுக்கு எதிரி பெண்தான். எல்லாவகையிலுமே ஒரு பெண் ஆணால் பாதிப்படைவதை விட பெண்ணால்தான் ஏற்படும் பாதிப்பு அதிகம். நிறைய பேர் அதற்கு நிறைய உதாரணம் கொடுத்துள்ளார்கள். மற்றவரின் கருத்தையும் பார்ப்போம்...மீண்டும் வருவேன்.... (கவி சோடாவில் எனக்கும் கொஞ்சம் கொடுங்க)

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

நான் சொல்ல நினைத்ததை மேலே சொல்லியிருக்காங்க அப்புறம் அதேயே நானும் சொன்னால் ஈ அடின்ச்சா காபி மாதிரி இருக்கும். 2 வரி ரொம்ப யோசித்து எழுதி களைப்பாயிட்டேன் அதான் சோடா :-)

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

வணக்கம். முதல் 2 பட்டி மன்றத்துலயும் கலந்துக்கணும்னு ஆசைப்பட்டும் முடியாம போச்சு. இதுலயாவது பங்கெடுக்கணும்னு நினைச்சேன், செஞ்சுட்டேன் :-)

தலைப்பில் எனக்கு ஒரு சிறிய குறை இருக்கு - இந்த காலத்தில் பெண்ணுக்கு பெண் / ஆண் எதிரி அப்படினு ஜெனரலைஸ் செய்வது சரியாக வராது. ஒரு 50 வருடம் முன்னாடி பெண்கள் ஆணின் அடிமை போல நடந்த காலத்தில் வேண்டுமானால் உண்மையா இருந்து இருக்கலாம். ஆனா இப்போ ஆண் - பெண் பாகுபாடே இல்லாம ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதனே எதிரினு போயிட்டு இருக்கு. பரிணாம வளர்ச்சி?? :-)

ஆனாலும் கொடுத்த தலைப்புக்குள்ள, என் வாதம் பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்பது தான். என் அனுபவத்தில் இருந்து மட்டுமே என்னால் பேச முடியும்.

வாழ்க்கையில் நான் சந்தித்த பெண்களை இந்த உறவுகளுக்குள் அடக்கிடலாம் - 1. பாட்டி, அத்தை, பெரியம்ம - முந்தின தலைமுறை ரத்த உறவுகள்
2. அம்மா
3. கசின்ஸ் (எனக்கு உடன் பிறந்தோர் இல்லை)
4. தோழிகள்
5. மாமியார், நாத்தனார்.

என் அம்மா நல்லவரா இருந்தும் அவங்க மாமியாருக்கு (என் பாட்டி)பிடிக்கலை. என் அத்தை என் அம்மாவின் அண்ணனை திருமணம் செய்து கொண்டார் - அவருக்கு என் அம்மாவின் அம்மாவை கண்டால் ஆகவில்லை! இத்தனைக்கு அம்மா வழி பாட்டி பரம சாது. ஆக ஒரு வீட்டின் சம்பந்தத்தில் அந்த தலைமுறைக்கே நிம்மதி இல்லாமல் போய்விட்டது.

என் அம்மா இந்த மாதிரி ஒன்றுக்கும் உபயோகமில்லாத குடும்ப சண்டகளில் சிக்கி புலம்பி தன் வாழ்க்கையை ஓட்டி விட்டோமே என்று இப்போ வருந்துகிறார். அவருக்கு அவரே எதிரி. ஒரு பாயிண்டில் இவங்களை எல்லாம் சொல்லி திருத்த முடியாதுனு வெலைக்கு போயிருக்க வேண்டாமா? என்ன படிச்சு என்ன புண்ணியம்??

அடுத்து தோழிகள் - ஒரு சில நல்ல தொழிகள் நிச்சயம் உண்டு, ஆனால் நான் உயர்நிலை பள்ளியில் - கல்லூரியில் யாரும் சந்தித்து இராத சில சிக்கல்களில் சிக்க இருந்தேன் - அதற்கு குழி தோண்டியவர்கள் - என்னுடைய தோழிகளாக நடித்தவர்களே. என் அம்மாவை போல் வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பாமல் இருந்தால், பிழைத்தேன். பெண்கல் எந்த அளவுக்கு கீழ்த்தரமாக இறங்குவார்கள் என்பதற்கு இவை சாட்சிகள் (எனக்கு).

என் மாமியார் - மற்ற புகுந்த வீட்டினரிடம் எப்படி எல்லாமொ நடந்து கொள்ள வேண்டும் என்று கனவு கண்டேன், அப்படியே செய்யவும் செய்தேன் அவர்களுடன் இருந்த ஒரு வாரம். ஒன்றும் எடுபட வில்லை, அவர்களுக்கு அவர்கள் கேட்ட பணத்தை மகன் தர வேண்டும் (இல்லயென்றால் நான் தான் மாற்றி விட்டேன்), அவர்களை எதிர்த்து எதுவும் பேசி விட கூடாது (நான் தான் மாற்றி விட்டேன்), கணவராக சுயமாக முடிவு எடுக்க கூடாது ( நான் தா மாற்றி விட்டேன்)... - இது ஒரு பெரிய லிஸ்ட். திருமணத்திர் முன்பும் இதே போல தானே இருந்தேன் என்னத்துக்கு இப்படி சொல்கிறார்கள் என்று கணவர் வியக்க மட்டும் தான் முடியும். என் பிறந்த வீட்டினருடன் என் உறவை விட்டு விட வேண்டும் என்று நினைப்பவர்களை நான் எப்படி பாசமுடம் பார்த்து கொல்ள போகிறேன் (இந்தியா சென்று)? தெரியவில்லை. இந்த காலத்தில் இப்படி ஒரு மாமியார். அவர் போததென்று மகளையும் சரியான வாரிசாக வளர்ஹ்ட்து விட்டு இருக்கிறார். இந்த கால பெண் (ஒரு 33 வயது இருக்கும்) வாழ்க்கையை பார்ப்போம், குழந்தைகளை காவ்னிப்போம் என்றில்லாமல், எங்கல் விஷயங்களை சொல்லி சன்Dஐ மூட்டி விடுவது, நான் வேலைக்கு போகிறேன், சின்ன வயது பெண் என்று எல்லாம் கூட போறமை படுவது - அபத்ததின் உச்சம்.

தான் குட்டி சுவரானதும் இல்லாமல், தன் பெண்ணையும் இப்படி ஆக்கி விட்டாரேனு என் மாமியார் மேல் இது ஒரு தீராத கோபம் எனக்கு.

என் பெரியம்மா பெண்களுக்கு நல்ல (ஓரளவாவது) மாமியார்கள் தான், ஆனால் அவர்களுக்கும் ஒத்து வர்வில்லை, சின்ன சின்ன விஷய்ங்களுக்கு எல்லாம் சண்டை போட கூடாதுனு என் அப்பா அவங்களுக்கு அறிவுரை சொன்ன போது என் அப்பா மேல ஒரே கோபம் அவங்களுக்கு.. இப்பொ என் மாமியார் செய்வதை பார்த்து உள்ளூர சந்தோஷம், நல்ல வேணும் இவளுக்குனு.. இது இப்படி இருக்கு? இவங்களுக்கு நல்லது சொன்னா அதை எடுத்துக்கவும் தெரியலை, அடுத்தவங்க கஷ்ட பட்ட அதில் சிரிக்க என்ன இருக்குனும் புரியல.

என்னை பொறுத்த வரை, மெஜாரிட்டியான பெண்கள் இன்னும் அடிப்படையில் வம்பு (மற்றவருக்கு பதிப்பு இருக்கும்படியான) பேசுவது, உன்னை விட நான் சிறந்தவள் என்று காட்டி கொள்வது, அவர்வர் வாழ்க்கை அவர்வருக்கு என்று இல்லாமல், மகன் / சகோதரன் என்று உரிமை கொண்டாடி படுத்துவது (அதே இவருடைய கணவரை அவர் அம்மாவோ / சகோதரியோ உரிமை கொண்டாடி விடவும் கூடாது!) போன்ற இயல்புகளை விடவே இல்லை. வேலைக்கு சென்றாலும் எவ்வளவோ சாதித்தாலும் இந்த இயல்புகளுக்கு தீனி கொடுக்க அவர்களுக்கு எப்படியோ நேரம் கிடைத்து விடுகிறது!! இதே ஆண்களுக்கு அவர்களுடைய இயல்பிலேயெ இது எதுவும் இல்லை. சேர்வாரோடு சேர்ந்து மாறுபவர்கல் சிலரே. மர்ற படி அவர்களுக்கு வேலை, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ர ப்ரெஷர் எல்லாமக டிஸ்ட்ராக்ஷன் குறைவாக இருப்பதாகவே எண்ணுகிறேன். அடுத்த தலைமுறை பெண்கள் ஆவது அப்படி இருக்க மாட்டார்களா என்று ஆசை. தயவு செய்து உங்கள் குழந்தையின் முன், வேறு எந்த பெண்ணை பற்றியும் வம்பு, சண்டை, கேலி எதுவும் செய்யாதீர்கள். அவர்களுக்கு கவலை பட வேறு எத்தனையோ விஷயங்கல் இருக்கும் எதிர்காலத்தில் :-)

யாரையும் புண்படுத்தி இருந்தேனானால் மன்னிக்கும் படி கேட்டு கொள்கிறேன். தெரிந்து செய்ய வில்லை.

அன்புடன்,
ஹேமா.

பதிவுக்கு தலைப்பு கொடுத்து உதவின தலைவர் சாமுக்கு நன்றி. http://www.youtube.com/watch?v=urN6mrM8iAw&feature=related :-)

அன்புடன்,
ஹேமா.

மேலும் சில பதிவுகள்