என்ன உணவு சாப்பிட வேண்டும். எதை தவிர்க்க வேண்டும்

அனைவருக்கும் வணக்கம். நான் அறுசுவை-க்கு புதிது. திருமணமாகி 3 years -இல் 2 முறை அபார்ஷன் 40 days,12 weeks -லும் ஆகியது. சொந்தக்காரர்களின் (even my own sister) நக்கலுக்கு பயந்து எங்கும் செல்லமாட்டேன்.என் husband-ம் அவருடைய வீடும் என்னை இதுநாள் வரை ஒன்றும் சொன்னதில்லை.1 வருடம் என் மன மாற்றத்திற்காக குழந்தையை தள்ளி போட்டோம். 6 months முன்பு என் கணவருக்கும், எனக்கும் வெளிநாட்டு வாய்ப்பு கிடைத்ததால் சென்று விட்டோம். அங்கு போன அடுத்த மாதம் நான் conceive-ஆகிவிட்டேன். 45days-il spotting ஆனது. பயந்து உடன் dr-ஐ பார்த்தோம். ஒன்றும் பயமில்லை ஆனால் கட்டாயம் rest எடுக்க வேண்டும் என்றதால் bed rest 12 weeks வரை எடுத்தேன். அதன் பின் india வந்துவிட்டேன். இப்பொழுது அம்மா தான் என்னை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள். 5 months scan report-last week எடுத்தேன். குழந்தை நன்றாக உள்ளது. உண்மையை சொல்கிறேன் அன்று தான் நான் ஆனந்தக் கண்ணீர் என்றால் என்ன என்பதை அறிந்தேன். வெளிநாட்டில் உள்ள என்னவர் phone-ல் அழுதே விட்டார். இன்று முதல் 6-வது மாதம். என் சந்தோஷத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன். நான் என்ன உணவு சாப்பிட வேண்டும். எதை தவிர்க்க வேண்டும் என்று கூறுங்கள். எனக்காக கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள். எனக்கு குழந்தையை பார்த்தால் தான் நிம்மதி. உங்களின் அன்பான வார்த்தைக்காக ஆவலுடன் உங்கள்

உமா

இங்கே பல மன்ற இழைகளில் கர்பிணி பெண்களுக்கான உபயோகமான குறிப்புகள் இருக்கிறது. மன்றத்தில் சென்று கர்ப்பிணி பெண்கள் பகுதியில் இருக்கும் இழைகளை பார்க்கவும்...

நல்லா சாப்பிடுங்க... பழவகைகள் முடிந்தவரை அதிகமாக எடுத்துக்கொள்ளவும்... ஆல்மன்ட்ஸ் சாப்பிடுங்க.. ஆரஞ்சு ஜூஸ் குடிங்க.. ரெடிமேட் இல்லாம தனியாக பிழிந்து குடிங்க.. குழந்தை கலராக இருக்கும் என்று சொல்ல கேள்வி...

எதாவது கேள்வி இருந்டா கேளுங்க.. பல சகோதரிகள் இங்க உதவுவாங்க...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா உடனே உங்களுடைய வேலைகளுக்கு இடையில் பதில் சொன்னதற்கு நன்றி.கட்டாயம் என் கேள்விகளை அறுசுவை சகோதரிகளிடம் தான் கேட்பேன்.உங்களுடைய ப்ராத்தனைகளுக்கும் என் நன்றி.அறுசுவை எனக்கு நிறைய தோழிகளை தரும் என நம்புகிறேன்.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

அன்பு உமா,
ஆரோக்கியமான, அழகான குழந்தையைப் பெற உனக்கு என் வாழ்த்துக்கள் முதலில்.
ரொம்பவும் சூடான, காரமான உணவு வகைகளை தவிர்க்கவும்.
நிறைய தண்ணீர் குடிக்கவும்.
மாதுளம் ஜூஸ் நிறைய குடிக்கலாம்.
ஏழு மாதம் துவங்கிய பிறகு வாரம் ஒருமுறை வெந்தயக்களி, வாரம் ஒருமுறை சீரகக் கசாயம் குடித்து வந்தால் சுகப்பிரசவம் ஆக வழி வகுக்கும்.
கொழுப்பு சத்து, எண்ணெய்ப் பதார்த்தம் அதிகம் சாப்பிட்டால் நெஞ்சு கரிக்கும்.
படுக்கும் போது ஒருக்களிச்சே படுக்கவும். அடுத்த பக்கம் திரும்பணும்னா, எழுந்து உட்கார்ந்து, திரும்பி படுக்கவும்.
இன்னும் நிறைய இருக்கு. ஞாபகம் வரும் போது சொல்கிறேன்.
மீண்டும் வாழ்த்துக்கள்.

அன்புடன்,
செல்வி.

நன்றி செல்வி மேடம். எனது அம்மா மாதம் 2 முறை வெந்தயக்களி செய்து தருகிறார்கள். அதனை நான் இப்பொழுது சாப்பிடலாமா? கூடாதா? அப்புறம் சீரகக் கசாயம் எப்படி செய்வது? உங்களுக்கு நேரம் இருக்கும் பொழுது எனக்கு அனுப்புங்கள். கார உணவை நான் தவிர்த்து விட்டேன். ஆனால் ஆறிய உணவை சாப்பிடத்தான் முடியவில்லை. முயற்சிக்கிறேன். மறுபடியும் சொல்கிறேன் நன்றி மேடம்.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

அன்பு உமா,
தாராளமாக இப்ப வெந்தயக்களி சாப்பிடலாம். சிலபேர் சாப்பிட ரொம்ப கஷ்டப்டுவாங்க. அதனால ஏழு மாசத்திலயாவது சாப்பிட ஆரம்பிக்கலாம். ஏழு மாதம் ஆனது வாரம் ஒருமுறை. ஒன்பது மாதம் ஆனதும், ஒருநாள் விட்டு ஒரு நாள் சாப்பிட வேண்டும்.
சீரகக் கசாயம்:
சீரகம் - 2 டீஸ்பூன்,
பனைவெல்லம் - எலுமிச்சை அளவு,
வெண்ணெய் - 2 டீஸ்பூன்,
தண்ணீர் - 2டம்ளர்.
சீரகத்தை வெறும் வாணலியில் போட்டு பொரிய விடவும். சடசடப்பு அடங்கியதும் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் ஒருடம்ளராக சுண்டியதும், வடித்து பனவெல்லம், வெண்ணெய் சேர்த்து ஆற்றி பொருக்கும் சூட்டில் இரவில் படுக்கும்முன் குடிக்கவும். இப்ப வாரம் ஒருமுறை. ஒன்பது மாதம் ஆனபிறகு தினமுமே குடிக்கலாம்.
கை, கால் வீக்கம் வந்தால் பார்லி வாட்டர் குடிக்கலாம்.
அதற்காக ரொம்ப ஆறிய உணவு தான் சாப்பிடணும்னு அவசியமில்லை. வெதுவெதுப்பான சூட்டில் உண்ணலாம்.
மீதி பிறகு,
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

விரைவில் தாயாகப்போகும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஒரு குழந்தையை சுமப்பது ஒரு சுகமான அனுபவம். அந்த சந்தோஷத்தை நன்கு அனுபவியுங்கள். சத்தான உணவு எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள்.
சுகப்பிரசவமாக வாழ்த்துக்கள்.

அன்புடன்
ஜெயந்தி மாமி

டியர் உமா ராஜ் ரொம்ப சந்தோஷம்.
நல்ல சாப்பிடுங்கள். செல்வி மேடம் சொன்ன மாதிரி மாதுளை ஜூஸ் நல்ல குடிங்க அதில் இரண்டு இதழ் சாப்ரான் சேர்த்து அடித்து குடிங்க.நல்ல நிறைய பழங்கள் சாப்பிடுங்கள்.பால் குடிங்க.நிறைய ஜூஸ் குடிங்க. ஹார்லிக்ஸ்,குளுக்கோஸ் போட்டு குடிங்க குழந்தை நல்ல சுறு சுறுப்பாக இருக்கும்.ஏழு மாதத்திற்கு பிறகு இரவு 8 மணிக்குள் டின்னரை முடித்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.
ஜலீலா

Jaleelakamal

செல்வி மேடம் மிக மிக நன்றி (உடனடி பதிலுக்கு).எனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்கிறேன்.

பாசமுடன்
உமா

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

நீங்கள் சொல்வது உண்மை மாமி.பிறந்த பலனை இப்பொழுது தான் அனுபவிக்கின்றேன்.உங்களுடைய பதிலுக்கு நன்றி மாமி.

அன்புடன் உமா.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

நீங்கள் அறுசுவை-க்கு கொடுத்துள்ள கடல்பாசி உணவுகளை சாப்பிட எனக்கு ஆசை. நான் இதுநாள் வரை செய்ததில்லை. நன்றாக இருக்குமா? இதை கர்ப்பிணிகள் சாப்பிடலாமா?

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

மேலும் சில பதிவுகள்