தோழிகளே, கையில் சூடு, உடனடி உதவி தேவை ப்ளீஸ்...

தோழிகளே, கையில் சூடு - உடனடி உதவி தேவை ப்ளீஸ்...

இப்பொழுதுதான் சற்று நேரத்திற்குமுன் பாதாம் ஹல்வா செய்துகொண்டிருக்கும் நேரத்தில் தீடீரென்று சிறு துளி பாதாம் கலவை என் வலக்கையில் பட்டுவிட, சட்டென்று துடித்த நான் பக்கத்தில் இருந்த ஒரு டிஸ்யூ பேப்பர் எடுத்து அந்த இடத்தை வைப் பண்ணிவிட்டென்... அது தவறா?, தெரியவில்லை. இப்பொழுது பிரச்சனை என்னவென்றால் அந்த இடத்தில் ஒரு பெரிய ஸ்டிக்கர் பொட்டு அளவுக்கு தோல் வழட்டிகொண்டுவிட்டது... : (
வலி ஒரு பக்கம் இருக்க (கொஞ்ச நாளைக்கு பொறுத்துக்கொள்ளலாம்) இந்த தழும்பு போகுமா, போகாதா... பேப்பர் கொண்டு துடைத்ததும் உள் ஸ்கின் தெரிந்து எரியவும், ஒரு துண்டு ஐஸ் கட்டியை வைத்து ஒத்தடம் கொடுத்தேன்...

என்ன மாதிரி வைத்தியம் செய்துகொள்ள வேண்டும்... ப்ளீஸ் , சொல்லி உதவுங்களேன் தோழிகளே....

அன்புடன்,
ஸ்ரீ

தோழிகளே, கையில் சூடு, உடனடி உதவி தேவை ப்ளீஸ்...

தழும்பு போய்விடுமா? வலது கையில் மேலாக நன்றாக தெரியும் இடத்தில் உள்ளது. : (

எரிச்சல் இருக்கிறது. காயம் சீக்கிரம் குணமடையவும், தழும்பை ஆற்றவும் என்ன மாதிரி வைத்தியம் செய்துகொள்ள வேண்டும்... ப்ளீஸ் , சொல்லி உதவுங்கள் தோழிகளே....

அன்புடன்,
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

ஹாய் ஸ்ரீ, என்னது இது கவனம் இல்லாம இப்படி செஞ்சிக்கிட்டீங்க. டிஷ்யூ பேப்பரை வெச்சு துடைச்சதுக்கு பதிலா தண்ணீரில் கையை காண்பிச்சு கொஞ்சம் இட்லி மாவை தடவி இருந்தீங்கன்னா ( அதுவும் தோல் வழண்டுட்டா செய்யக்க்கூடாது. இன்பெக்ஷன் ஆயிடும்) கை நல்லா இருந்திருக்கும். இனி இதை ஞாபகம் வெச்சுக்குங்க. இப்பதான் ஐஸ் வெச்சிருக்கீங்களே. வலி குறையும். ஆனாலும் வாழைத்தண்டு சாறு நல்ல குணம் கொடுக்கும். தழும்பு வந்துடுச்சுன்னா போறது கஷ்டம். தீப்புண்களுக்கு பிளாஸ்டிக் சர்ஜரியே அத்தனை பலன் தரும்னு சொல்ல முடியாது. இதெல்லாம் சமையலில் நமக்கு கிடைக்கும் ப்ராட்க்டிகல் மார்க்ஸ்.

இப்போதைக்கு பர்னால் போன்ற க்ரீம் கிடைத்தால் போடுங்க. ஆனால் என் கசின் (டாக்டர்) சொன்னது, இப்படி பர்னால் போட்டால் பிறகு அந்த தழும்பு போகவே போகாதுன்னு. எந்தளவு உண்மைனு தெரியல. வீட்டில் நல்லெண்ணெய் இருந்தால் தடவுங்கள். அதுவும் புண்ணை ஆற்றும். தேங்காய் எண்ணெய்யும் தடவலாம். தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். விரைவில் குணமாகும். தழும்பு சுத்தமா போகுமான்னு தெரியல. புண் நல்லா ஆறினதும் தொடர்ந்து ஆலிவ் ஆயில் போட்டு வந்தா கொஞ்சம் தழும்பின் நிறம் மங்கும்.

உடனடி உதவி என்றதற்கேற்ப உடனடியாக ஆலோசனை கொடுத்ததற்கு ரொம்ப நன்றி தேவா!.

ஆமா தேவா, என்னவோ தெரியவில்லை.. எப்போதுமே நான் கவனமாக காரியம் செய்யும் ஆள்தான்... இன்னைக்கிதான் இப்படி. இதே ஹல்வா ஏற்கனவே செய்திருக்கிறேன்.. எப்போதும் சூடு பட்டுக்கொண்டதில்லை. நீங்க சொன்ன மாதிரி, இதெல்லாம் நம் சமையல் அனுபவத்தை பறைசாற்றும் விழுப்புண்கள்! :)

கட்டாயம் உங்க டிப்ஸ்-ஐ நியாபகம் வைத்துக்கொள்கிறேன். ஐஸ் கட்டி வைத்த வரை ஓகே, பட் பேப்பரில் துடைத்திருக்ககூடாதா?! சரி.

நீங்க பர்னால் பற்றி சொன்னதும் இங்கே எனக்கு கிடைக்கும் ஒரு Antibiotic ointment (Neosporin)பொட்டுக்கொள்ளலாமென்று யோசித்தேன். ஆனால் நீங்க அடுத்த சொன்னதை படித்ததும் தேங்காய் எண்ணெய்க்கு மாறிவிட்டேன். மீண்டும் ஒரு முறை தேங்ஸ் தேவா உங்க உடனடி பதிலுக்கு!

அன்புடன்,
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

ஹாய் ஸ்ரீ, முதல்ல டெட்டால் வச்சு லைட்டா அந்த இடத்த ஒற்றி எடுத்துட்டு தேவா சொன்ன மாதிரி பர்னால் இருந்தா அப்ளை பண்ணுங்க. பேண்ட் ஏய்ட் ஒட்டிடவே ஒட்டிடாதீங்க.அது ரிமூவ் செய்யும் போது தோல் பகுதியும் உரிஞ்சு வந்திடும்.ஒரு சிலர் இன்க் அப்ளை பண்ணுவாங்க..பர்னால் இல்லைனா ஆன்டிஸெப்டிக் கிரீம்(boroplus cream also ok) அப்ளை பண்ணிடுங்க.அந்த பகுதி உலர்வா(தண்ணீர் பட்டுடாமல் பார்த்துக்கோங்க) இருக்கணும்.சீக்கிரமே குணமாகிடும். ஓகே.டேக் கேர்பா......................... Each dawn holds a new hope for a new plan,making the start of each day the start of a new life.

ஷ்ரீ இந்த தளத்திலுள்ள கேரமல் பாயாசத்துக்கான கேரமெல் செய்யும்போது சர்க்கரை நல்ல ப்ரவுனா உருகியாச்சு என் பொண்ணு பக்கத்துல பாளோட ஓடி வந்து எரிந்தாளே நான் பதறிப் போய் கிளறும் கரண்டியை வெளியெஏ இழுக்க கேரமல் ஒரு 1/2 ஸ்பூன் அளவுக்கு என் கால் விரல் மூன்றில் விழுந்து அப்படியே கட்டியாகிக் கொண்டது அப்பாஅ அந்த எரிச்சலை மறக்கவே முடியாது.அதை பரிச்சு தான் கட்டி கட்டையா எடுக்க வேண்டியதிருந்தது அப்ப உடனே ஐஸ் கட்டி வச்சுட்டு கொஞ்சம் உப்பு தடவினேன் சூர்ர்ருன்னு எரிஞ்சது அதன்பின் வேஸ்லின் போட்டேன் அப்பளம் போல வந்து 1 வாரத்தில் உரிந்து இப்போ தழும்பே இல்லை..அடுத்த முறை வேஸ்லின் போடுங்க ஹிஹிஹீ

ஆக ஸ்ரீ கை பொத்து போச்சா?

இபப்டி தான் ஹல்வாக்கள் கிளரும் போது பார்த்து பதமா கிண்டனும் கிட்டேயே நின்று கிளறனும் என்ற அவசியம் இல்லை ரெடியா பக்கத்திலேயே மூடி வைத்து கொள்ளனும்.
சிம்மில் வைத்து கொள்ளனும்.கொஞ்சம் தள்ளி நின்று கொள்ளனும் பிடித்து கிளற என்றேஒரு கருவி இருக்கு அதை கூட பயன் படுத்தலாம்.

அப்படி தெரிக்கும் போது சட்டுன்னு ஒன்றுமே தோணாது.

ஸ்ரீ ஆலிவ் ஆயில், போடுங்கள், நிவ்யா கிரீம் போடுங்கள் தேங்காய் எண்ணையும் போடலாம் வடு போகும் கவலை வேண்டாம்.

சமையல் அறையில் நிறைய கிளறும் போது வடை போன்றவை சுடும் போது மிகுந்த கவனம் தேவை.

ஜலீலா

Jaleelakamal

ஸ்ரீ.இப்பொழுது கை காயம் எப்படி உள்ளது?வீட்டில் எப்பொழுதும் ஆண்ட்டி பயாடிக் ஆயிண்ட்மெண்ட் கைவசம் வைத்து இருங்கள்.இருக்கத்தவறினால் தீக்காயம் பட்டவுடன் சட்டென்று டூத் பேஸ்ட் எடுத்து தடவி விடுங்கள்.நான் சில சமயம் இன்க்(பென் இன்க் தான்)தடவுவேன்.கொப்புளம் வராமல் இருக்கும்.சென்றவாரம் என் பேரன் ஆமிர் டைனிங் டேபிள் மீது வைத்து இருந்த டீயை எட்டி தட்டி விட்டு சூடான டீ அவரது நெஞ்சின் மீது கொட்டி துடிக்க ஆரம்பித்து விட்டார்.உடனே அருகில் இருந்த கிளினிக் அழைத்துப் போய் காட்டினோம்.டாக்டர் சில்வரெக்ஸ் silvarex என்ற ஆயிண்ட் மெண்ட் எழுதி கொடுத்தார்.அதை தடவி விட்டு பயந்த படிதான் இருந்தோம்.ஆனால் காலையில் எதுவுமே கொப்பளம் எற்படாமல் சாதாரணமாவே இறைவன் உதவியால் இருந்து விட்டது குழந்தை .
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஸ்ரீ இப்போ எப்படி இருக்கிறது?எரிச்சல் குறைந்திருக்கிறதா?சாதிகா மேடம் சொன்ன மாதிரி சில்வரெக்ஸ் நல்ல பலன் கொடுக்கும்.
தீக்காயம்,அல்லது ஏடாவது சூடாக தோலில் பட்டு விட்டால் உடனே தண்ணீரில் காட்டி வெண்ணெய் அல்லது நெய் தடவி விட்டால் காயம் சீக்கிரம் ஆறும்.தழும்பும் வராது.சற்று பெரிய காயமாக இருந்தால் முதலில் சிறு தழும்பு வரும்.தொடர்ந்து ஃப்ரான்ச் ஆயில் அல்லது ஆலிவ் ஆயில் தடவி வந்தால் தழும்பு மாறிவிடும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

எவ்வளவு கவனமாக இருந்தாலும் இதுபோல் ஆகிவிடும். எப்போதும் தீக்காயமோ அல்லது இப்படி சுட்டுக்கொண்டாலோ இதில் ஏதாவது ஒன்றைச் செய்தால் போதும்.
1. தண்ணீரால் காயம்பட்ட் இடத்தைக் கழுவலாம்.
2. டேபிள்சால்ட்டைத்தூவலாம்.
3. சிறிது தோசை அல்லது இட்லி மாவு வைக்கலாம்.
4. தேங்காய் எண்ணை வைக்கலாம்.
5. இங்க் தடவலாம்.
இப்படி செய்தால் கொப்பளிக்காது.
சாதிகா, இப்ப மாஸ்டர் ஆமிர் எப்படி இருக்கார். இந்த குட்டி வாலுங்களை சமாளிக்கறது கஷ்டம்தான்.

அன்புடன்
ஜெயந்தி மாமி

ஹை
தீப்புண் காயம் பட்டௌடன் சில்வரெக்ஸ்தான் ஆஸ்பத்திரில் போடுவார்கள். இப்பொடுதான் அருசுவைக்குவந்தேன்.தாமதமாக பதில் அளிதத்தற்கு மன்னிக்கவும்.தீனமும் அWத இடத்தை சுத்தம் செய்துவிட்டு சில்வரெக்ஸ் பொடவும்

மேலும் சில பதிவுகள்