எனக்கு உதவுங்கள்

வணக்கம் என் பெயர் லதா. நான் இந்த மன்றத்திற்கு புதிது. உங்கள் அறிவுரைகள் மீது நம்பிக்கை கொண்டு இதை எழுதுகிறேன்.
நான் இப்பொழுது 4 மாதம் கர்ப்பமாக உள்ளேன். ஆனால் நான் எப்பொழுதும் அமைதியின்றியே உள்ளேன். நான் விரும்பிய வாழ்க்கை தான் எனக்கு கிடைத்திருக்கிறது. அவரும் என்னை நன்றாகவே வைத்திருக்கிறார். ஏனோ தெரியவில்லை எதற்கெடுத்தாலும் அழுகை தான் வருகிறது. ஒரு சிறு பிரச்சனையை கூட என்னால் தாங்க முடிவதில்லை. இந்த மாதிரி நேரத்தில் நான் என்ன செய்ய வேண்டும் என்று கொஞ்சம் கூறுங்களேன்.

வாழ்த்துக்கள்... எனக்கும் இது 5வது மாதம்...

முதல் மாதம் (அப்போல்லாம் கன்ஃபர்ம் ஆகல) என்ன காரணம்னே இல்லாம சின்ன பிள்ள மாதிரி அழுதேன்... வேலை முடிஞ்சு வீட்டுக்கு போக மணி 8.30 ஆயிடும்.. ரொம்ப டயர்ட் ஆ இருக்கும்..அப்பல்லாம் அம்மா அப்பா ஞாபகம் வந்து அழுதுருகேன். கல்யாணம் ஆகி 2 வருஷத்துல நான் வீட்ட நினைச்சு அழுததில்ல... அன்னைக்கு எங்க அம்மா இருந்தா என் பொண்ணு பாவம்..எவ்ளோ களைச்சு இருக்கான்னு சொல்லுவாங்க(இத்தனைக்கும் நான் ஒண்ணும் வெட்டி முறிக்கறதில்ல.. காலேஜ் போயிட்டு வந்துருப்பேன்..)...அப்பா இந்நேரம் எனக்கு சாப்பாடு கொண்டு வந்துருப்பருன்னு தேம்பி தேம்பி அழுதேன்... பாவம் என் கணவர் (எங்களுக்குள்ள சண்டை கூட இல்ல அன்னைக்கு) ஒண்ணும் புரியாம நான் உன்னை சரியா பாத்துக்கறதில்லையான்னு வருத்தப்பட்டங்க..

இன்னைக்கு காலையில கூட 2 பேரும் சும்மா விளையாடறப்ப என் கணவர் கொஞ்சம் பலமா அடிச்சிட்டாங்க.. உடனே அழுகைதான் 15 நிமிஷத்துக்கு... ஏன்னே தெரியல...(இத்தனைக்கும் சீரியஸ் சண்டைக்கு கூட நான் அழமாட்டேன்..கோபமா திரும்ப சண்டைதான் போடுவேன்..)

கவலைப்படாதீங்க ..நான் கூட அப்படித்தான்.

இந்த சமயத்துல சந்தோஷமா இருக்கணும்னு சொல்வாங்க... காரணம் இல்லாம அழுதா பரவால்ல.. இல்லை ஏதாவது கவலைனா உங்க கணவர்கிட்ட மனம் விட்டு சொல்லுங்க...

வெயிட் பண்ணுங்க. இன்னம் நிறைய தோழிகள் சொல்லுவாங்க...

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

முதல்ல என் வாழ்த்துக்களைப் பிடியுங்க.
பெண்ணே ஒரு குழந்தையை சுமப்பது என்பது ஒரு சுகமான அனுபவம். அதை உங்களுக்குக் கடவுள் கொடுத்திருக்கிறார். முதலில் உங்களுக்குக் வாழ்க்கையில் கிடைத்துள்ள நல்லவற்றைப் பட்டியல் இடுங்கள். நீங்களே சொல்கிறீர்கள் விரும்பிய வாழ்க்கை என்று. அப்புறம் என்ன.
கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க. இந்த உலகத்தில எத்தனை பெண்கள் ஒரு குழந்தை வேண்டி தவம் இருக்கிறார்கள். உலகத்தில் பணம் இருந்தால் எதை வேண்டுமானால் வாங்கலாம். குழந்தை? உங்கள் குழந்தை நல்லபடி இந்த பூமிக்கு வரவேண்டும் அல்லவா?
இந்தியாவில் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள். என்னுடைய ஐடி அரட்டை பாகம் 10ல் கொடுத்திருக்கிறேன். மெயில் செய்யுங்கள். மனம் விட்டுப் பேசலாம். உங்களைச் சுற்றி இருப்பவர்களைப்பாருங்கள். எவ்வளவு பேர் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்.
உங்கள் இஷ்ட தெய்வத்தை நன்கு பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். மனதுக்கு அமைதியைக் கொடுக்கச்சொல்லி வேண்டுங்கள்.
நமது அறுசுவை தளத்தின் பழைய பதிவுகளைப் படித்துப்பாருங்கள்.
உங்களுக்கு விருப்பம் இருந்தால் இங்கோ, மெயிலிலோ சற்று விவரமாகச் சொல்லுங்கள்.
எந்தப்பிரச்னைக்கும் தீர்வு உண்டு.
மனம் தளராமல் மகிழ்ச்சியுடன் இருங்கள்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

பதில் அளித்தமைக்கு ரொம்ப நன்றி சங்கீதா. நீங்கள் குறிப்பிட்டுள்ள எல்லாமே இப்பொழுது எனக்கும் நடக்குது. என்னவரும் இப்படித்தான் அவர்தான் ஏதோ தவறு செய்தவர் போல "நான் தான் உன்னை சரியாக கவனித்துக்கொள்ளவில்லையா" என்று கேட்டு டென்ஷன் ஆகிறார்.
நான் இப்போது மெடிடேஷன் செய்ய முயற்சிக்கிறேன். பலன் என்ன என்பதை பிறகு சொல்கிறேன்.

மீண்டும் நன்றி.

லதா.

Nothing is impossible in this world
Because impossible itself means
I'm Possible.

Nothing is impossible in this world
Because impossible itself means
I'm Possible.

லதாமஹேஷ்வரி!!! சங்கீதா சிவகுமார் !!!
முதலில் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்...

இது ஒன்னும் இல்லைங்க.. இந்த அழுகைக்கி எல்லாம் காராணம்..."ஹார்மோன்ஸ்" நான் கொஞ்சம் டச்சிபீலிங் பர்சன்... அப்புறம் தான் அம்மா கிட்ட கேட்டா.. நீ பிரியட்ஸ் டைம்ல கூட அழுவேன்னு.. அப்பதான் ரிலேட் செய்ய முடிஞ்சது... உங்க ஹஸ்பண்ட்க்கு எடுத்து விளக்குங்க.. இப்பதைக்கு கூகிள் பண்ணி லின்க் குடுக்க நேரம் இல்லை.. இது ரொம்ப நார்மல் அதுவும் இப்படி ரொம்ப தூரத்தில இருக்கறதால சும்மாவே நல்ல நாள் பெரிய நாள் எல்லாம் அழுகையா வரும்...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

உங்கள் வாழ்த்துக்கு நன்றி இலா..நான் கூட ரொம்ப உணர்ச்சிவசப்படுற ஆள்தான்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

நன்றி ஜெயந்தி மாமி & இலா,

நான் மதுரையில் இருக்கிறேன். என் கணவரும் மதுரை தான். தாய் வீடும் பக்கத்தில் தான். அடிக்கடி அம்மா வீட்டுக்கும் போய் தங்கி வருவேன். அம்மா வீட்டு சாப்பாடுக்கும் மாமியார் வீட்டு சாப்பாடுக்கும் நிறைய வித்தியாசம். எனக்கு ருசி பிடிக்கவில்லை. மேலும் நான் வேலைக்கு செல்வதால் என்னால் சமைக்க முடிவதில்லை. ஈவ்னிங் வந்து டயர்ட் ஆகி படுத்து விடுவதால் அப்போதும் சமைக்க முடிவதில்லை. என்னால் எதையும் அவருக்காக செய்ய முடிவதில்லை என்று எண்ணும் போது அதற்கும் ஒரு அழுகை வரும். நான் என்ன செய்ய ?

லதா

Nothing is impossible in this world
Because impossible itself means
I'm Possible.

Vazhththukkal. ungal mananilai purighiradhu. idhu saghajam... naanum kuzhandhai pirakkum varai ippadi dhaan irundhaen. Kavalaya vidunga. Maatha nalla vazhi solraen... yedhayum ninaikkaama, kuzhandhai paththi mattum ninainga. adhaan orae vazhi. Unga kuzhandhai pirandhu unga kaila irukkaradhaa ninainga, kuzhandhayoda sirippai ninainga, kuzhandhai unga veetla odi vilayadaradhaa kanavu kaanunga... indha kanavughal manasukku sandhoshaththai tharum.... manasu relax aaghum. apparam paarunga yeppavum sirippeenga sandhoshamaa. Kanavarai paathukka mudiyalannu kavalai yedhukku??? innum sila maadhangal dhaanae.... apparam paathukkalaam periyavangalai, chinna jeevan dhaan mudhal gavanippu thevai.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்