குழந்தை பயம் தெளிய

என் பேரன் வயது 1.4 மிகவும் பயப்படுகின்றார்.மிக்ஸி ஓடினாலும் சரி குக்கர் விசில் அடித்தாலும் சரி பயந்து அழுகின்றார்.தூரத்தில் பட்டாசு வெடிக்கும் ஒலியாக இருந்தாலும் சரி அழுது கொண்டே நம் அருகில் ஓடி வந்து கட்டிக்கொண்டு அழுவதை வழக்கமாக கொண்டுள்ளார்/இடி இடித்தால் கேட்கவே வேண்டாம்.குழந்தையின் பயத்தை தெளிய வைத்து தைரியமாக இருக்கச் செய்ய ஸ்னேகிதிகள் தங்களுக்கு தெரிந்த ஆலோசனைகளை தருவீர்களா?
ஸாதிகா

ஆமிரின் பயம் தெளிய யோசனை சொல்லுங்களேன் ஸ்னேகிதிகளே.
ஸாதிகா

arusuvai is a wonderful website

குழந்தைக்கு ஒன்றரை வயது தானே,போக போக பயம் தெளிந்து விடும்.மிக்ஸி ஓட்டினால் பயப்படும் போது,நீங்கள் உடனே ஆஃப் செய்து விட்டு,இப்ப பாரு செல்லம்,மறுபடியும் ஆன் செய்துட்டு,அவனிடம் பாட்டி பயப்படவே இல்லை பாரு,எவ்ளோ போல்டா இருக்கேன் பாரு.முதலிலே நாம் காதை பொத்தி பழக்க படுத்தி விட்டால்,அதுவே ஒரு பழக்கமாகி விடும்.அதனால் அப்படி செய்யாமல் மிக்ஸியை ஒரு சுற்று சுத்தி ஒரு விளையாட்டா,சும்மா சுத்தி காட்டுங்க.பொருட்களையும் அரைச்ச மாதிரி இருக்கும்,அவனுக்கு விளையாட்டு காட்டின மாதிரி இருக்கும். ஆனால் குழந்தைய தூக்கி வச்சுக்கனும்,ஏன்னா கொஞ்சம் பயப்படும்.யாராவது ஒருத்தரை கூட அரைக்க சொல்லலாம்.குக்கர் விசில் வரும் போதும் நீங்க தூக்கி வச்சு தைரியம்வர வைக்கனும்.ஆனால் எப்போதும் மிக்ஸி அரைக்க போகும் முன்,அவரிடம் நீங்க முதலில் சொல்லிட்டு,நீ எவ்ளோ போல்டுன்னு பார்க்கலாம் என்று சொல்லி பயத்தை போக்கலாம்,ஏன்னா என் பொண்ணுக்கு இந்த வழியை தான் ட்ரை பண்ணேன்.

ஸாதிகா மேடம் என் பொண்ணு 4 வயசு ஆக போகுது இன்னும் மிக்ஸி , குக்கர் விசில், ஹீடேர் சத்தம் கேட்ட வந்து என்னை புடுச்சுகுவா .....அவளுக்கு பயந்தே நான் இப்போ எலேடிக் குக்கர் தான் தினமும் .....ஆனா முன்னே எல்லா சத்தத்துக்கும் பயபடுவா இப்போ ரொம்ப குறைஞ்சுருச்சு .....ஆனா இன்னும் குக்கர் விசில் பயம் போகலே .....:-( அமீர் இப்போ சின்ன குழந்தே தானே இன்னும் கொஞ்சம் நாள் போந சரியடும் ....

இப்போ எல்லா சத்தத்தையும் அவளே பண்ணி காமிக்க ஆரம்பிச்சுட்டா ....இப்போ நான் தான் பயப்பட ஆரம்பிச்சுட்டேன் :-)

ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

ஆமிர் சின்ன பிள்ளைதானே நாள் போக போக சரியாகிடும் என் பொண்ணும் பயப்படுவா மிக்ஸி சும்மா இருக்கும் சமையம் பாரு எவ்லோ ஸ்மூத்தா இருக்குன்னு சொல்லுங்க..அடுத்து லேசா போட விட்டு கூடவே நானும் சவுண்டா பேசுவேன் நீயும் சவுன்ட் கொடுன்னு அப்படியே இவ பழகிட்டா அது கத்தினா கூடவே இவளும் ஆன்னு சிரிச்சுட்டே சவுண்ட் கொடுப்பா பயம் வேணாம்..இடி வரும் சமையம் நெஞ்சில் கை வைத்துட்டு சாதாராணமா இருங்க பயம் வராது..என் பொண்ணுக்கு இப்படிதான் பழகியது ஆனா இப்ப இருக்கும் இடி யப்பப்பா எனக்கே வயிறு அதிருது..இதுல அன் டைமில் பட்டாசு வேற இந்த பக்கம் விட்டாங்க அதி பயங்கர சவுண்டுடன் அதில் இருந்து என் பொண்ணு இடிக்கும் பயப்படுகிறாள் நாலடைவில் சரியாகிடும்னு இரூகேன்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஷாதிகா ஆன்டி
நம்ம செயலை வச்சு பயத்தை மாத்த முடியும்.எம் மகள் ரொம்ப சின்னதா இருக்கப்ப பயப்படுபா மிக்சிக்கு குக்கர் விசிலுக்கெல்லாம்.ஆனால் அதுகுப் பின் ஏறக்குறைய மர்ழியா சொன்னது போல நான் மிக்சி போடும்போது ஹஹஹான்னு சிரிசுட்டே நானும் கத்தி பாடுவேன் பிறகு அவளும் மிக்சி போட்டாலே கத்தி பாட ஆர்ம்பிச்சுட்டா அது ஒரு விளையாட்டா போச்சு குக்கர் விசிலும் அப்படி தான் ஆஃப் பன்ன போகும்போது பாரு விசில் வருது ஆம்மா ஓடி போய் ஆஃப் பன்றேன்னு குடுகுடுன்னு ஓடிப் போயி ஆஃப் பன்னிட்டு ஓடி வருவேன் அதைக் கண்டு அவ சிரிப்பா.என்ன விஷயத்துக்கு அவங்க பயப்படுவாங்கன்னு தோனுவதற்கு முன்னயே நம்ம முகத்தை அது ஒரு தமாஷ் போல மாத்திகிட்டா ச்சே இதெல்லாம் சப்ப மேட்டர் போலிருக்குன்னு குழந்தைக்கே புரிஞ்சு போகும்..கீழே விழுந்தால் கூட அப்படி தான் ஆஹ் ஊ என்று ஓடி வந்து தூக்கி விடாம மனசுக்குள் நாம் பதட்டப்பட்டாலும் வெளிய காமிக்காம ஓஹ்சர்கஸ் பன்னினியா அது நல்லா இருந்ததுன்னு சிரிச்சுட்டு கவனிக்காம விடுங்க அது தானா எழுந்து விடும் இல்லன்னா சும்மா யாராவது மொரச்சாலே அழுது வடியும்...எல்லாம் போக போக சரியாகிடும் சின்ன குழந்தைதானே.ஆனா இப்ப என் ப்ரச்சனை இவளுக்கு பயமே இல்லாம ஆயிப் போச்சு என்பது தான்..யார் கூடயெல்லாமோ போய்விடுகிறாள் அது தான் எனக்கு கவலை.அதைப் பற்றி இன்னொரு த்ரெட்டில் கேட்கிறேன்

சுகன்யா.அடுக்களைக்குள் குழந்தையை தூக்கி வைத்துக்கொண்டு மிக்ஸி அரைக்கும் உங்கள் யோசனைக்குகு ஒரு சபாஷ்.
ஹாஷினி உங்கள் யோசனை ஆறுதல் அளிக்கின்றது.பிறகு ஆமிர் சாதாரணமாகி விடும் என்பதே ஒரு ஆறுதல்தான்.
மர்ழி,இடி இடிக்கும் பொழுது நெஞ்சில் கையை வைக்கச்சொல்லும் உங்கள் யோசனைக்கு ஒரு பலே.நாளைக்கு இன்னும் கொஞ்சம் உங்களிடம் நேரில் வந்து கத்துக்கொள்கின்றேன்.
தளிகா.சூப்பர் யோசனைப்பா..இனி பேரனிடம் அட்றா அட்றா என்று பாடி காட்ட வேண்டியது தான்.இப்போ இங்கு என்ன பிரச்சனை தெரியுமா?ஆமிர் ரீமா பொண்னுக்கு நேர் எதிர்.புது முகங்களைக் கண்டால் பயந்து ஒரே அழுகை.யார் வீட்டுக்கு அழைத்து சென்றாலும் இதே கதை தான்.ரீமா வயதில் சரியாகி விடும் என்று நினைக்கின்றேன்.
அனைவருக்கும் நன்றி
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஹா ஹா சாதிகா அக்கா இதுக்கு நான் காலையிலெயே டிரை பண்ணேன் ஆனால் ஒப்பன் ஆகல,

மிக்சி,குக்கருக்கு பெரிய ஆட்களுக்கே திஹீல் வரும்.
நாமா விழுந்து விழுந்து சிரிக்கனும் அப்ப அவர்கல் பயபட மாடார்கள் நல்ல கை தட்டி சிரிங்க ஹி ஹி பயம் போயே போச்சு.

ஜலீலா

Jaleelakamal

தலைப்பை பார்த்ததுமே நீங்கள் தான் எனகண்டு பிடித்து விட்டேன்.இந்த சிரிப்புக்கு அறுசுவையில் பெரிய ரசிக பட்டாளாமே உங்களுக்கு உள்ளது.
ஸாதிகா

arusuvai is a wonderful website

சாதிகா அக்கா ரொம்ப சிரிப்பு நீங்க கேசரியில் நெயிக்கு பதில் இஞ்சி பூண்டு அனக பதிவு போட முடியல.
இன்று இஞ்சி பூண்டு அரைக்கும் போது சிரித்து கொண்டே அரைத்தேன்.
ஜலீலா

Jaleelakamal

ஜலீலா.உங்களிடம் மைக் இருந்தால் நீங்களும் பிரீயாக இருந்தால் யாஹூ வை ஓப்பன் பண்ணுங்களேன்.உங்கள் குரலை கேட்க ஆசை.
ஸாதிகா

arusuvai is a wonderful website

மேலும் சில பதிவுகள்