பாசிப்பருப்பு தேங்காய்பால் முறுக்கு

தேதி: October 17, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

தீபாவளியின் போது பெரும்பாலான வீடுகளில் செய்யும் இந்த தேங்காய் பால் முறுக்கு குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் <b> திருமதி. சாந்தா குமார் </b> அவர்கள்.

 

பச்சரிசி - 4 கப்
பாசிப் பருப்பு - ஒரு கப்
எள்ளு - ஒரு தேக்கரண்டி
தேங்காய் பால் - 2 கப்
கல் உப்பு - 2 மேசைக்கரண்டி
சீனி - 3 தேக்கரண்டி
வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - ஒரு லிட்டர்


 

பச்சரிசியில் தண்ணீர் ஊற்றி அலசி தண்ணீரை வடித்து வெய்யிலில் காயவைத்து மெஷினில் கொடுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். எள்ளை தூசியில்லாமல் சுத்தம் செய்துக் கொள்ளவும்.
வெறும் வாணலியில் பாசிப் பருப்பை போட்டு வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு பருப்பை குக்கரில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மேலும் அதிகமாக 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி 4 விசில் வரும் வரை நன்கு குழைய வேக வைக்கவும்.
வெந்த பருப்பில் உள்ள தண்ணீரை வடிகட்டி விட்டு மிக்ஸியில் போட்டு குழைய அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் அரைத்த பச்சரிசி மாவை போட்டு அதனுடன் வேகவைத்து அரைத்த பாசிப்பருப்பு மற்றும் சுத்தம் செய்த எள்ளை தண்ணீரில் அலசி அதில் போட்டு எல்லாவற்றையும் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் உப்பை போட்டு கால் கப் தண்ணீர் ஊற்றி கரைத்து அரிசி மாவில் ஊற்றி பிசையவும். மாவு முழுவதும் உப்பு சேரும்படி நன்கு பிசையவும்.
ஒரு பெரிய தேங்காயை துருவி எடுத்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து பால் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். ஒரு தேங்காய்க்கு 2 கப் பால் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். தேங்காய் பாலுடன் சீனியை சேர்த்து கரைத்துக் கொள்ளவும். பிறகு அரிசி மாவில் தேங்காய் பால் மற்றும் வெண்ணெய் சேர்த்து பிசையவும்.
பிறகு ஒரு கப் தண்ணீர் எடுத்து, மாவில் சிறிது சிறிதாக ஊற்றி நன்கு தளர முறுக்கு மாவு பதத்தில் பிசைந்துக் கொள்ளவும். எள்ளுக்கு பதிலாக சீரகம் சேர்த்துக் கொள்ளலாம்.
முறுக்கு உரலில் ஸ்டார் வடிவில் உள்ள அச்சியை போட்டுக் கொள்ளவும். பிறகு பிசைந்த மாவை ஆரஞ்சு பழ அளவில் உருண்டையாக உருட்டி முறுக்கு உரலில் வைத்து நிரப்பிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவு நிரப்பி வைத்திருக்கும் உரலை வைத்து எண்ணெய் முழுவதும் முறுக்கு பிழியவும். தனியாக ஒரு தட்டின் பின்புறத்திலோ அல்லது ப்ளாஸ்டிக் கவரிலோ பிழிந்து எடுத்து எண்ணெயில் போடலாம்.
முறுக்கு பிழிந்த சில நொடிகளில் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்க ஒரு மெல்லிய கம்பி அல்லது கரண்டியை வைத்து முறுக்கை நகற்றி விடவும். ஒரு நிமிடம் கழித்து முறுக்கை திருப்பி போட்டு வேக விடவும். பிறகு மீண்டும் ஒரு நிமிடம் திருப்பி போட்டு வேக விடவும்.
எண்ணெய் அடங்கி முறுக்கு வெந்து பொன்னிறமானதும் முறுக்கில் உள்ள எண்ணெயை வடித்து எடுத்து விடவும்.
சுவையான பாசிப்பருப்பு தேங்காய் பால் முறுக்கு தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹைய்யா தேங்காய் பால் முருக்கு டியர் சாந்தா ரொம்ப ஜோர்

ஜலீலா

Jaleelakamal

உங்கள் பாசிப் பருப்பு முருக்கு இப்பொலுதே செய்ய வேண்டும் போல் இருக்கு..ஆனால் உங்கள் பாசிப் பருப்பு மஞ்சள் நிறத்தில் இருக்கிறதே?
என்னிடம் பச்சை நிறத்தில் இருக்கிறது. செய்யலாமா?

தயவு செய்து விளக்கம் தரவும்

அன்புடன்
கீர்த்தீஷ்வரி

Keerthi

கீர்த்தீஷ்வரி பச்சை நிறத்தில் உங்களிடம் இருப்பது பாசிப் பயறு(kacang hijau)மஞ்சள் நிறத்தில் இருப்பது பாசிப்பருப்பு(kacang kunning).பொங்கல் பருப்புன்னும் சொல்லுவாங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

kavisiva Avargale,

விளக்கம் கொடுத்ததற்கு மிகவும் நன்றி

Keerthisvary

Keerthi

கீர்த்தி பாசி பருப்பு தான் போடனும் இப்ப வே முருக்கு சாப்பிடனும் நா நிறைய யாரும் சமைக்கலாமில் முருக்கு இருக்கு பாருங்கள் அதௌ செய்து சாப்பிடுங்கள்
ஜலீலா

Jaleelakamal

ஜலீலா Mdm,
நலமா..?
நீங்கள் சொன்னது போல நான் செய்து பார்க்கிரேன்.
ஆமாம் உங்களிடம் ஒரு சமையல் குறிப்பு கேட்கலாம் என்று நினைகிறேன்.
எங்கள் Malaysia vil ரவா இட்லி செய்வதும் கிடைப்பதும் ரொம்ப கடினம்.
எனக்கு ரவா இட்லி என்றால் ரொம்ப உயிர்.தெரிந்தால் கோரவும்.

மிக்க நன்றி.

அன்புடன்
கீர்த்தீஷ்வரி

Keerthi

டியர் கீர்த்தி காஞ்சீபுரம் இட்லி ரொம்ப நல்ல இருக்கும்,
இட்லி சரியா செய்ய தெரியா காலத்தில் அதான் அடிக்கடி செய்வேன்,
நீங்கள் வலது புறத்தில் சிற்றுண்டி என்பதை கிளிக் செய்யுங்கள்.
நிறைய வகை இட்லி கிடைக்கும், அப்படி தேட முடியவில்லை என்றால் சொல்லுங்கள் நான் எடுத்து தருகிறேன். ஒகே வா
ஜலீலா

Jaleelakamal

எனக்கு முறுக்கு மாவு பதம் சரியா வரல. எண்ணெயில் போட்டவுடன் தனி தனிய பிரிஞ்சு போய்டுச்சு. வெண்ணெய் அள்வு குறைத்து செய்து பார்த்ததும் கொஞ்சம் கடித்து சாப்பிடற அளவுக்கு மொருமொருப்பா வந்ததே தவிர முருக்கு shapela வரல. பிரிஞ்சு போகுது. முருக்கு மாவு பதம் சொல்லி கொடுங்களென் யராவது எனக்கு.

வெண்ணை 1 அல்லது 2 டீஸ்பூன் போட்டால் போதும் ... மாவு அளவுகள் எல்லாம் சரியா... வெண்ணை சரியான அளவு போட வேண்டும். அங்கே பட்டர் ஸ்டிக் போல கிடைத்தால் 1 டீஸ்பூன் அளவு அதிலேயே குறித்து இருக்கும்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

again try பண்ணி பாக்கரேன் ila

Thanks

ஹலோ மேடம் நான் எப்பொழுதும் உளுந்துதான் சேர்த்து செய்வேன்.புதிதாக இருந்ததால் செய்து பார்தேன். ரொம்ப நன்றாக இருந்தது.மிக்க நன்றி.

பச்சரிசி மாவு போடுவதென்றால் அளவு சொல்லுங்களேன்

சங்கீதாஜகராஜன்

vazhga vazhamudan

பச்சரிசி மாவு போடுவதென்றால் அளவு சொல்லுங்களேன்

சங்கீதாஜகராஜன்

vazhga vazhamudan

200 கிராம் பச்சரிசி மாவும், 50 கிராம் உளுந்து மாவும் போடுங்கள்

Jaleelakamal

நன்றி ஜலீலா அக்கா அவர்களே.ஆனால் நான் கேட்பது இதே பாசிபருப்பு அளவுக்கு யெவ்வளு பச்சரிசி மாவு சேர்க்க வேண்டும். பதில் Pls....

Sanageethajagarajan

vazhga vazhamudan

என்னுடைய முருக்கு ரெஸிபியை செக் பண்ணுங்கள் இல்லை என்றால் எடுத்து தரேன்
ஜலீலா

Jaleelakamal

அக்கா சிரமம் பார்க்காமல் கொஞ்சம் உங்கள் ரெசிப்பிய்யை அனுப்புவீர்களா

சங்கீதாஜகராஜன்

vazhga vazhamudan

http://www.arusuvai.com/tamil/node/7191
முருக்கு

டியர் சங்கீதா அன்று உடனே கிலம்பிட்டேன் எடுத்து கொடுக்க முடியல.
நேற்று லீவு வெளியில் போய் விட்டேன்.
நான் கொடுத்துள்ள இந்த லிங்கை பாருஙக்ள்.
ஜலீலா

Jaleelakamal

நான் முறுக்கு செய்தேன் ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது ஆனால் உதிர்ந்து விடுகிறது உதிராமல் வர என்ன செய்ய வேண்டும் ples solunkallan இந்த குறிப்பு தந்ததற்கு மிக்க நன்றி

நஸ்ரின் கனி ஒன்று தண்ணீர் அதிகமாகீ இருக்கும் இல்லை பட்டர் அதிகமாக சேர்த்து இருப்பீங்க‌

Jaleelakamal

ஹாய் ஜலீலா அக்கா அஸ்ஸலாமு அழைக்கும் நல்லா இருக்கீங்களா உங்கள் பதிலுக்கு ரொம்ப நன்றி

i tried your murukku, it came out really good. Thanks for a good receipe!.

செய்து பார்த்தோம். நன்றாகவும், சுவையாகவும், மொறு மொறுவென்றும் இருந்தது.
மிக்க நன்றி
முல்லை