பைனாப்பிள் மைதா கேக்

தேதி: October 17, 2008

பரிமாறும் அளவு: 6

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதாமாவு - 1/2 கப்
சீனி - 3/4 கப்
நெய் - 3 தேக்கரண்டி
பைனாப்பிள் எசன்ஸ் - 1/2 தேக்கரண்டி


 

ஒரு வாணலியில் நெய்யை விட்டு நன்கு காய்ந்தவுடன் மாவை கொட்டி கட்டிகள் இல்லாமல் கிளறி 2 நிமிடங்களில் தயிர் போன்ற பதம் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
ஒரு சின்ன பாத்திரத்தில் ஒரு கரண்டி தண்ணீர் விட்டு அதில் சீனியும் போட்டு கலந்து அடுப்பில் வைக்கவும்.
முத்து பாகு பதம் வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கிவிட்டு அதில் முன்பு தயார் செய்து வைத்துள்ளமாவு கலவையை இதில் போட்டு நன்றாக கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
பைனாப்பிள் எசன்ஸை இதில் விட்டு நன்றாக கலந்து கிளறி பாத்திரத்தில் ஒட்டாமல் வந்தவுடன் நெய் தடவிய தட்டில் கொட்டி சிறிதுகெட்டியானவுடன் வில்லை போடவும்.
மேலே வேண்டுமென்றால் முந்திரி தூவவும்.


இது பைனாப்பிள் எசன்ஸ் சேர்ப்பதால் நன்றாக டேஸ்டியாக இருக்கும்.
இதில் ரோஸ் எசன்ஸ், வெனிலா எசன்ஸ், பாதாம் எசன்ஸ் எது வேண்டுமானலும் சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்