இயக்குனர் ஸ்ரீதர் மறைந்தார்.

இயக்குனர் ஸ்ரீதர் நேற்று காலமானார். சமூகப் படங்களின் பிதாமகன் என்றே இவரைக் கூறலாம்.

ஒரு கால கட்டத்தில் ரசித்த சில படங்கள், சில வருடங்கள் சென்ற பின், ரசிக்கத் தோன்றுவதில்லை. வேறு வார்த்தைகளில் சொன்னால், சென்ற தலைமுறையினர் ரசித்த படங்கள், இந்தத் தலைமுறையினரின் ரசனைக்கு உகந்ததாக இல்லை.

ஆனால், ஸ்ரீதரின் படங்கள் எத்தனை வருடங்கள் ஆனாலும், எவ்வித ரசனை கொண்டோரையும் ஈர்க்கும் படங்களாகவே என்றும் விளங்குகின்றன.

பழுத்த இலைகள் ஒவ்வொன்றாக உதிருகின்றன, - சுஜாதா, பூர்ணம் விஸ்வனாதன், ஸ்ரீதர் ..,

நம் கண்ணீர்த் துளிகளால் அவர்களுக்கு அஞ்சலி.
அவர்களது ஆத்மா சாந்தி அடைவதாக

அன்புடன்

சீதாலஷ்மி

டைரக்டர் ஸ்ரீதரின் படங்களில் இடம்பெற்ற பாடல்களின் இனிமையை வார்த்தைகளில் சொல்லமுடியாது. அந்த பெருமை விஸ்வனாதனுக்கா? அல்லது அப்படி ஒரு இனிமை ததும்பும் பாடல்களை அவரிடம் இருந்து வரவழைத்த ஸ்ரீதருக்கா? (அடுத்த பட்டிமன்றத்திற்கு நல்லதொரு தலைப்பு கிடைத்துவிட்டதோ)
கலைகோயில் படத்தில் இடம்பெற்ற ' தங்கரதம் வந்தது வீதியிலே ' ( பாலமுரளிகிருஷ்ணா & சுசீலா) என்ற பாட்டை எத்தனை முறைதான் கேட்பது.......
நெஞ்சிருக்கும்வரையில் 'முத்துக்களோ கண்கள் ' ........இந்த பாட்டின் இனிமைக்கு காரணம் சுசீலாவின் தேன்குரலா? டி.எம்.எஸ் -உடைய இழைத்து இழைத்து செதுக்கிய குரலா? அந்த சொக்கவைக்கும் இசையா? அந்த படத்தின் அற்புதமான கேமரா வர்க்கா?
காதலிக்க நேரமில்லை படத்தில் வரும் 'நாளாம் நாளாம் திருநாளாம் நம்பிக்கும் நங்கைக்கும் மணநாளாம் ' இது இசை விமர்சகர் சுப்புடுவின் ஃபேவரிட் சாங்க்.
சிவந்த மண் படத்தில் ' பார்வை யுவராணி கண்ணோவியம் '
வெண்ணிற ஆடை படத்தில் ' கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்ல சொல்ல '
இன்னும் எத்தனையோ அருமையான பாடல்கள் ஸ்ரீதரின் படங்களிலே............................
அவருடைய படங்களை பற்றி மற்றவர்கள் எல்லோரும் எழுதுவார்கள் என்பதால் நான் பாடல்களை பற்றி எழுதினேன்.

நீண்ட, பழைய படங்கள் வந்தவேளையில் நச்சென்ற கருத்துடன் காதல் படங்களை வித்தியாசமாய் இயக்கி எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மேலும் சில பதிவுகள்