“ஒரு ஆண்மகனின் வாழ்க்கை சிறப்பாக அமைவதற்கு முக்கியமான காரணமாக அமைவது அவனது தாயா அல்லது மனைவி

அன்பிற்கினிய அறுசுவை சகோதர, சகோதரியர் அனைவருக்கும் என் அன்பு வணக்கங்கள்.
என்னை நடுவராக இந்தப் பட்டி மன்றத்திற்கு அழைத்ததற்கு அன்புச் சகோதரி திருமதி. செந்தமிழ் செல்விக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!

நான் தேர்ந்தெடுத்த தலைப்பு இதுதான்.

“ஒரு ஆண்மகனின் வாழ்க்கை சிறப்பாக அமைவதற்கு முக்கியமான காரணமாக அமைவது அவனது தாயா அல்லது மனைவியா?”

ஒரு பெண் தான் பிறந்ததிலிருந்து ஒரு ஆணைச் சார்ந்துதான் வாழ்கிறாள், முதலில் தந்தையை, பிறகு கணவனை, அதன்பின் மகனை. இப்படியே அவளின் வாழ்க்கை யாரையாவது சார்ந்திருந்தாலும் அவளே அவனது பலமாகவும் மாறுகிறாள். ஒரு தந்தையை இனிய மகளாக தன் அறிவினாலும் குணங்களாலும் பெருமிதப்படுத்தினாலும், அவள் திருமணத்துடன் மகள் என்ற பாத்திரம் முடிவடைந்து மனைவியாகவும் தாயாகவும் உறுமாறுகிறாள். அவள் எந்த உறவில் ஒரு ஆண்மகனின் வாழ்க்கையை சிறப்பாக மாற்றுகிறாள் என்பதுதான் என் கேள்வி.

நான் பார்த்தவரை இங்கு நிறைய அறுசுவை சகோதரிகளுக்குள் நல்ல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள், கவிஞர்கள் இருக்கிறார்கள். அனைவரும் தங்கள் புலமையைக்காட்டி, நியாயங்களை எடுத்து வைத்து வாதிட எல்லோரையும் அன்புடன் அழைக்கிறேன். நல்லறிவும் படிப்பும் அனுபவங்களும் நிறையப்பெற்ற சகோதர சகோதரிகளுக்கு அதிகம் விதிமுறைகள் எழுதத்தேவையில்லை. அத்துடன் வாக்குவாதங்களும் வாதப்பிரதிவாதங்களும் தாக்குதல்களும்தான் பட்டி மன்றத்துக்கு அழகு.

அன்பு சகோதரி மனோகரி!

உங்களின் புண்பட்டிருக்கும் மனது எனக்குப் புரிகிறது. அதையெல்லாம் ஒதுக்கி விட்டு இங்கு வந்து வாதிட உங்களையும் அன்போடு அழைக்கிறேன். ஏனென்றால் நீங்கள் ஆரம்பித்து வைத்திருக்கும் பட்டி மன்றம் இது.

அனைவருக்கும் வணக்கம்.மனோ மேடம் நல்ல தலைப்பு கொடுத்ததற்கு நன்றி.இப்போது என் வாதத்திற்கு வருகிறேன்.ஆண் மகனின் வெற்றிக்கு மிகமுக்கியமான காரணமாக அமைவது அவன் தாயே!

"எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே!
அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே அன்னை வளர்ப்பினிலே!"

தாயின் கையில்தான் இருக்கிறது அவன் நல்லவனாவதும் தீயவனாவதும்.ஒரு தீயவன் முன்னேறினால் எந்த பயனும் இல்லை மாறாக தீங்குதான்.முன்னேறும் ஒருவன் நல்லவனாக இருந்தால்தான் அவனுக்கும் குடும்பத்துக்கும் நல்லது.இந்த நாட்டுக்கும் நல்லது.முன்னேற்றம் எப்போதும் நல்ல வழியில் இருக்க வேண்டும் .அதுதான் உண்மையான முன்னேற்றம்.அதற்கு நற்குணம் என்ற அடித்தளம் அமைப்பது தாய்.
தாரம் ஆண்மகனின் வாழ்க்கையில் வருவது 25வயதிற்கு மேல்.அவன் திருமணமாகும் போது நிச்சயம் ஏதேனும் ஒரு துறையில் முன்னேற்ற பாதையில் பயணத்தை ஆரம்பித்திருப்பான் தாயின் உறுதுணையோடும் ஆசிகளோடும்.அதாவது நெற்பயிர் விதைப்பதில் ஆரம்பித்து பூச்சிகளை அண்ட விடாமலும் களைகளை விலக்கியும் விவசாயி பயிர் செய்திருப்பான்.பயிரும் நன்றாக வளர்ந்து நெல் மணிகள் குதிர்க்க ஆரம்பித்திருக்கும்.அப்போது அந்த விவசாயி உரம் போடுவான்.நெல்மணி நன்றாக விளைந்து நல்ல மகசூல் கிடைக்கும்.இப்போ சொல்லுங்க அந்த விவசாயி விதைப்பதில் ஆரம்பித்து கவனமாக கண்காணித்து பயிர் செய்தானே அதனால் மகசூல் இருந்ததா?இல்லை கடைசி நேரத்தில் போட்ட உரத்தால் மகசூல் இருந்ததா?இங்கே நெற்பயிரை மகனாகவும்,விவசாயியை தாயாகவும்,கடைசியில் போட்ட உரத்தை தாரமாகவும் நல்ல மகசூலை முன்னேற்றமாகவும் எடுத்துக் கொண்டால் யாரால் மூன்னேற்றம் கிடைத்தது?நிச்சயம் தாயால்தான்.நீங்கள் தாரம் என்ற உரம்தான் காரணம் என்று சொன்னாலும் விளைந்து பலன் கொடுக்கும் நேரத்தில் அந்த உரத்தை அதாவது தாரத்தை கொண்டு வந்தவளும் விவசாயியான தாய்தான்.
இன்னும் புரியற மாதிரி சொல்றேன்.ஆணை ஒரு உயரமான கட்டிடமாக கொண்டால் தாரம் அதை தாங்கி நிற்கும் தூண் போன்றவள்.தாய் வெளியில் தெரியாமல் மண்ணிற்குள் அந்த கட்டிடத்தை சரிந்து விடாமல் இருக்கச் செய்யும் அஸ்திவாரம்.தாயின் பக்க பலத்தோடு உழைத்து முன்னேறி சரியாக அதன் பலனை அனுபவிக்கும் நேரத்தில் அவன் வாழ்க்கையில் வரும் தாரம்தான் அவனது முன்னேற்றத்திற்கு காரணம் என்று
சொல்பவர்களுக்கு வடிவேலு ஸ்டைலில் பாடி ஸ்ட்ராங்கு ஆனால்...பேஸ்மெண்டு வீக்கு.

ஆணின் முன்னேற்றத்திற்கு மிக முக்கிய காரணமாக அமைவது தாய்தான் என்று ஆணித்தரமாக கூறி என் முதல் சுற்று வாதத்தை முடிக்கிறேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மதிப்பிற்குரிய நடுவர்,அன்பிற்கினிய மன்றத்தோழியர் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வணக்கம்.
தாயிற் சிறந்ததோர் கோவிலுமில்லை தந்தை சொல்மிக்க மந்திரமில்லை ,என்பர் ஆன்றோர்.அது நூற்றுக்கு நூறு உண்மை.ஒரு ஆண் மகனை உருவாக்குவதில் தாயே முக்கிய பங்கு வகிக்கிறாள்.ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?தாய் வளர்த்த விதம் தான் அவர்கள் வாழ்க்கை முழுவதும் பிரதிபலிக்கும்.இதில் எந்த மாற்றமும் இல்லை.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஒரு ஆண்மகனின் வாழ்க்கை சிறப்பாக அமைவதற்கு முக்கிய காரணம் மனைவிதான் என்று வாதட வந்துள்ளேன்..மனைவி ஒரு மந்திரி என்று சொல்ல கேள்விபட்டது இல்லையா?அப்படி என்றால் என்ன அர்த்தம்? ஒரு குடும்பத்தை திறம் பட நடத்தி வழிகாட்டுவது மனைவிதானே? தாய்தான் என்றாலும் கணவருக்கு மனைவிதானே?
தாய் என்பது ஆண்மகனின் வாழ்வில் ஒரு பகுதிதான் அதுவும் குறைந்த வருடங்கள் தான்..திருமணம் என்று ஆனவுடன் கணவனுக்கு வேண்டியதை செய்து ஒவ்வொரு நாளும் சுக துக்கங்களில் பங்கெடுப்பவள் மனைவிதானே?
கோவலனுக்கு அநீதி என்றதும் துடித்து எழுந்து மதுரையை எரித்தது கண்ணகிதானே அதாவது மனைவிதானே?
ராமர் காட்டுக்கு சென்றதும் கூடவே சென்றது சீதா தான் அதாவது மனைவிதான்
என் கணவன் பார்க்க முடியாத உலகத்தை நானும் பார்க்க விரும்பவில்லை என்று தன் கண்களையும் கட்டி கொண்டது காந்தாரிதானே?
சூரியன் வந்தால் கணவன் உயிர் பிரிந்துவிடும் என்று தெரிந்ததும் அதை உதிக்காமல் தடுத்தது சாவித்திரிதானே? இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்
தன் கணவன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று தினமும் அவருடன் சேர்ந்து வாழ்க்கையில் கூடவே ஓடுவது மனைவிதானே?
ஒரு குழந்தை வளர்ந்தது தாயின் அணிப்பில் இருந்து வந்து படித்து கணவன் என்ற நிலையை அடைவது 30வருடங்களுக்குள் நடந்துவிடுகிறது..அதற்கு பிறகு மனைவி குழந்தைகள் என்று அவர்கள் வாழ்க்கயும் மாறதான் செய்கிறது..பிறகு தான் வாழும் அத்தனை வருடங்களும் மனைவியுடன் தான்..கணவனுக்கு எதாவது ஒன்று என்றால் உடனே துடிப்பது மனைவிதான்..உங்கள் மாமனார் வயதுள்ள பெரியவர்களிடம் இப்போது கேட்டு பாருங்கள்..மனைவியுடன் இருப்பது தான் சுகம் என்பார்..அதுபோல தான் பெண்களும்..
எங்கிருந்தோ வந்து கணவர் கூடவே இருந்து கணவரை சார்ந்து இருந்து கொண்டே அவரை தன் உயிரைவிட மேலாக நேசித்து, அவரையே சுவாசித்து, கண்களில் காதலை தேக்கி,ஒவ்வொரு நாளும் கணவருக்காக வாழும் மனைவிதான் என்று கூறிக்கொள்கிறேன்..நன்றி.
தாமரைச்செல்வி

அனைவருக்கும் மீண்டும் வணக்கம்.இந்த சுற்றில் என் எதிரணியினருக்கு பதில் சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்
//மனைவி ஒரு மந்திரி என்று சொல்ல கேள்விபட்டது இல்லையா?அப்படி என்றால் என்ன அர்த்தம்? ஒரு குடும்பத்தை திறம் பட நடத்தி வழிகாட்டுவது மனைவிதானே? தாய்தான் என்றாலும் கணவருக்கு மனைவிதானே?//
தாய்தான் என்றாலும் கணவருக்கு மனைவிதானே என்கிறீர்கள்.ஆனால் இப்படி சொல்வதுதான் பொருத்தம்"மனைவிதான் என்றாலு அவளும் ஒரு தாய்தானே"
//தாய் என்பது ஆண்மகனின் வாழ்வில் ஒரு பகுதிதான் அதுவும் குறைந்த வருடங்கள் தான்..//

நீங்கள் சொல்வது போல அந்த குறைந்த வருடங்களில் அந்த ஆண் மகனுக்கு கல்வியும் நற்பண்புகளும் கொடுத்து அவனை தாய் சரியாக உருவாக்கவில்லையென்றால் மனைவி மந்திரியாக செயல் பட்டாலும் அவனால் எதுவும் செய்ய முடியாது.
//கோவலனுக்கு அநீதி என்றதும் துடித்து எழுந்து மதுரையை எரித்தது கண்ணகிதானே அதாவது மனைவிதானே?//
ஏங்க பிரச்சினை கண்ணகிக்கும் பாண்டிய மன்னனுக்கும்தானே.அப்புறம் ஏங்க அவங்க மதுரையையே எரிச்சு அப்பாவி மக்களையும் வேதனைப் பட வச்சாங்க.இப்படிப் பட்ட விவேகம் அற்ற பெண்களா கணவனை முன்னேற்றப் பாதைகு கொண்டு போக போறாங்க?அன்னிக்கு ஒரு மனைவி ஆரம்பிச்சதுதாங்க இப்ப வரைக்கும் ஏதாவது பிரச்சினயா பஸ்ஸை எரின்னு எரிச்சுடறாங்க :(
//ராமர் காட்டுக்கு சென்றதும் கூடவே சென்றது சீதா தான் அதாவது மனைவிதான்//
சீதா கூடவே காட்டுக்கு போனாங்க சரிதான்.மானைப் புடிச்சுதான்னு கேட்டு ராமனை மானைப் பிடிக்க அனுப்புனாங்க.சரின்னு அவர் வரும் வரை பொறுமையா இருந்துருக்க கூடாதா?அதுவும் இல்லை லட்சுமணனை அனுப்பி ராமனை தேட சொன்னாங்க.சரி லட்சுமணன் சொன்னபடி கோட்டுக்கு உள்ள நின்னாங்களா?அதுவும் இல்லை கோட்டை தாண்டியதும் ராவணன் கடத்திட்டு போயிட்டான்.அப்புறம் ராமனுக்கு எத்தனை பிரச்சினைகள்?இப்போ சொல்லுங்க் சீதை ராமனோட முன்னேற்றத்துக்க் துணை நின்னாங்களா இல்லை தொல்லை கொடுத்தாங்களா?
//என் கணவன் பார்க்க முடியாத உலகத்தை நானும் பார்க்க விரும்பவில்லை என்று தன் கண்களையும் கட்டி கொண்டது காந்தாரிதானே?//
கந்தாரி கண்ணை கட்டுனதுனால திருதிராஷ்டிரருகு என்ன பயன்?அட்லீஸ்ட் கண்ணை கட்டாம அவருக்கு கண்ணா இருந்து வழி காட்டியிருந்தாங்கனா நீங்க சொன்ன மாதிரி கணவனின் முன்னேற்றத்துக்கு காரணமா இருந்தாங்கன்னு சொல்லலாம்.அவங்க கண்ணை கட்டிக்க்கிட்டு இருட்டிலேயே இருந்து குழந்தைகளையும் சரியா வளர்க்காம பாரதப் போர் நடந்ததுதான் மிச்சம்.என்ன பயன் சொல்லுங்க?

//சூரியன் வந்தால் கணவன் உயிர் பிரிந்துவிடும் என்று தெரிந்ததும் அதை உதிக்காமல் தடுத்தது சாவித்திரிதானே?//
சாவித்திரி தன் கணவன் பாதை மாறிப் போகும்போதெ அவ தடுத்திருந்தான்னா நீங்க சொல்றதை நான் ஒத்துக்கிட்டு இருப்பேன்.அப்போ விட்டுட்டு அவன் உயிரை காப்பாத்த போராடினான்னு சொனா என்ன அர்த்தம்?இதுல சூரியனை வேற தடுத்தூ நிறுத்தி மற்ற உயிர்களுக்க கஷ்டம் வேற?

//உங்கள் மாமனார் வயதுள்ள பெரியவர்களிடம் இப்போது கேட்டு பாருங்கள்..மனைவியுடன் இருப்பது தான் சுகம் என்பார்..//

எதிரணியினரே தலைப்பை நன்றாக கவனித்து படியுங்கள்.ஆணின் முன்னேற்றத்துக்கு காரணம் யார்?அது இல்லாம ஆணுக்கு யாருடன் இருப்பது சுகம் அல்லது நலம் அல்லது சந்தோஷம் என்பதல்ல தலைப்பு.

ஒரு தாய் சரியான அடித்தளம் அமைத்து கொடுக்காவிட்டால் அவனுக்கு மனைவி மகா புத்திசாலியாக இருந்தாலும் அவனது முன்னேற்றம் கானல் நீர்தான்.சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்.அந்த சுவரை பதமாக உருவாக்குவதே தாய்தான்.சுவரில் வந்து பூவை வரைந்து விட்டு இந்த சுவர் என்னால்தான் அழகானது என்றால் ஏற்றுக் கொள்ள முடியுமா?
தாயே நீயே சரணம்.

பின் குறிப்பு:இதை வாதமாக மட்டும் எடுக்கவும்.எப்படி புராணங்களை குறை கூறலாம்னு கேட்காதீங்க. அவற்றிலுள்ள எல்லா கருத்துக்களும் இப்பொதுபொருந்தாது.நல்லவற்றை பொருந்துவதை எடுத்துக் கொள்வோம் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

முப்பது வருடங்களில் தாயின் வேலை முடிந்துவிடுவதில்லை.அவள் ஆயுள் வரை உடன் இருந்து அவனுக்கு தேவைப்படும்பொழுது ஆலோசனைகள் வழங்கி அவனை நல்வழிப்படுத்துகிறாள்.மனைவி சொல் கேட்டு தாயை முதியோர் இல்லம் மற்றும் தனியாக தவிக்கவிடுவது இதெல்லாம் நடப்பதை நாம் இன்றைய காலகட்டத்தில்
பார்க்கிறோம்.தாயுடன் ஓர் ஆண்மகன் இருந்தால் தான் அவன் வாழ்வு சிறக்கும் என்பதால்,பெண்ணைத்தான் திருமணம் செய்து மற்ற வீட்டுக்கு அனுப்புகிறோம்,ஆணை அல்ல.எனவே நடுவர் அவர்களே மகனுக்கு எப்பொழுதும் தாய் தான் பெரிதும் பங்கு வகிக்கிறாள்,மனைவி உறுதுணை புரிகிறாள்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

முதலில் நடுவருக்கு என் அன்பான வணக்கம்.ஒரு ஆண்மகனின் வாழ்க்கை சிறப்பாக அமைவதற்க்கு முக்கிய காரணம் என்று தான் கேட்டிருக்கிறார்கள்.ஆரம்ப வாழ்க்கை என்று கேட்க வில்லை.வாழ்க்கை முழுக்க சிறக்க காரணமாயிருப்பவள் அவள் மனைவிதான் என்று வாதாட வந்துள்ளேன்.எதிரணியினர் நெற்பயிர்,சுவர் என்றெல்லாம் உதாரணம் காட்டுகிறார்.நல்லதொரு உரம் இல்லாவிட்டால் பயிர் சிறப்பாக வளர்ந்திருக்குமா? மகசூல் கண்டிருப்பீறா?சுவரை உருவாக்கினால் போதுமா?பூச்சரிக்காமல் அதை பாதுகாத்து மனதை கிள்ளுகிற வண்ணத்தை தீட்டுவது மனைவி தானே!!சுவர் கவனிப்பாரற்று பாழ்மண்டபமாகாமல் நல்லதொரு பலமாய் திகழ்பவள் மனைவிதான்!!!

ஒரு தாய் தன் மகனோடு 25 சதவிகிதமே பயணிக்க முடியும்,ஆனால் மனைவியோ மிச்சம் 75 சதவிகிதம் பயணிக்கிறாள்.100 வயது வாழும் ஒரு மனிதனின் வாழ்நாளில் 25 வயதுவரை மட்டுமே அவனுடைய அம்மா வருகிறாள். மீதி 75 வயது வரை அவன்கூடவே வந்து அவனுடைய அடி, மிதி, குத்து, எச்சு, பேச்சு என எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு அவனுடைய சக இன்ப துன்பங்களில் பங்கெடுத்து அவனின் வெற்றிக்கும் அவனுடைய குடும்பத்தின் வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பது மனைவிதான்.

புராண கதைகளை வாழ்க்கையின் எடுத்துகாட்டாக வாழ வேண்டுமே தவிர அதை இப்படி,அப்படியிருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று வாதம் செய்வதில் பயன் இல்லை.கற்புக்கு கண்ணகி,பொறுமைக்கும் போராடுவதிலும் சாவித்ரி,,கணவனுக்காக தானும் இவ்வுளகத்தை கண்டு ரசிக்கும் சுகத்தை துறந்த காந்தாரி, பத்தினி என்றால் சீதை என்பதை எடுத்துகாட்டவே இந்த இதிகாசங்கள் சுட்டி காட்டுகிறது.எதிரணியினர் சொன்னது போல நடந்திருந்தால் இப்படிபட்ட இதிகாசம் தோன்றாமல் காலத்தோடு மறைந்திருக்கும்.

ஊதாரியாய் பிள்ளையை வளர்த்தாலும் ஒழுங்காக்குவதும்,அவனை சிறப்பாக வாழ்க்கையில் நிலைநிறுத்துவதில் முக்கிய காரணமாய் பங்கு வகிப்பது மனைவியே!!!

வணக்கம் மனோ மேடம்.அறுசுவை ல வர எல்லா பட்டிமன்றமும் நான் வாசித்து கொண்டிருக்கிறேன்.. ஆனா மத்த எந்த தலைப்புகள்லையும் எனக்கு ஒரு தெளிவான முடிவும், சிலதுல அனுபவமும் இல்லாதனால எதுவும் பதியல...ஆனா இந்த தலைப்பு நல்லா இருக்கு..என்னைய மாதிரி கத்துகுட்டியையும் யோசிக்க வச்ச தலைப்பு.. :-)

எல்லா தோழிகளும் ரொம்ப அருமையா பேசி இருக்கீங்க.. (கவி சிவா உங்க வாத திறமைக்கு ஒரு சலாம் :-).ஆனா நான் உங்க பக்கம் இல்ல :-)

இந்த பதிவு எழுதி முடிச்சிட்டு பாக்கறதுக்குள்ல சுமஜ்லாவும் , சுகன்யாவும் நான் என்ன சொல்ல வந்தனோ அதையே சொல்லிட்டாங்க...சரி நம்மளும் அதேதான் சொல்லி இருக்கோம் அத ஏன் போடணும்னு யோசிச்சேன்....ஆனா இவ்ளோ பெரிசா எழுதி அழிக்க மனசு வரல :-( அதுவுமில்லாம இது நம்ம கன்னி முயற்சி..அத என் வீண் பண்ணனும்னு ....... ரொம்ப யோசிச்சுட்டு ஒரு வழியா போட்டுட்டேன்...

என்னை பொருத்தவரை புரிதலும், அன்பும் கொண்ட ஒரு பெண் ஆணுக்கு பக்கத்தில் இருந்தால் அந்த ஆணின் வாழ்க்கை கண்டிப்பாக சிறப்பாக அமையும். அந்த பெண் தாயாய் இருந்தாலும் மனைவியாய் இருந்தாலும் இருவருக்குமே அந்த ஆணின் வளர்ச்சியில்/வாழ்க்கையில் பங்கு உள்ளது.

ஆனால் பட்டிமன்றம் வாதம் என்று வந்துவிட்டால் யாருடைய பங்கு அதிகம் என்று பேசியே ஆக வேண்டும் என்பதால் நான் மனைவியே ஒரு ஆணின் வாழ்க்கை சிறப்பாக அமைவதில் பெரும்பங்கு வகிக்கிறாள் என்று கூறி என் கருத்தை எடுத்து வைக்கிறேன்.

தாயின் பங்கு - ஒரு ஆணை பண்புள்ளவனாக , நல்லவனாக ,பெண்களை மதிப்பவனாக வளர்ப்பதில் உள்ளது. ஒரு ஆண் பாசத்தை முழுமையாக உணர்வது / புரிந்துகொள்வது தன் தாயிடம் மட்டுமே..ஒரு தாயோட அரவணைப்பில இருக்கறப்ப அந்த ஆண் வாழ்க்கைக்கு தயாராயிட்டு இருக்கறான்னுதான் சொல்லணும்...ஆனா அவனோட வாழ்க்கை ஆரம்பிக்கறதே குடும்பத்தலைவன் - ற பொறுப்பு அவனுக்கு கிடைக்கறப்பதான்.. வாழ்க்கையின் முடிவு வரைக்கும் அந்த தாய் அவனுக்கு வழிகாட்டியாக இருக்க முடியுமே தவிர அவன் வாழ்க்கையின் ஆதாரமாக இருக்க முடியாது . (ஏன்னா அந்த தாயும் இன்னொருவரின் வாழ்க்கைக்கு ஆதாரமான ஒரு மனைவியல்லவா). தாயில்லாத ஆண்கள் கூட நல்ல மனைவி கிடைத்தால் அவள் ரூபத்தில் தாயை காணமுடியும்..ஆனால் மனைவி சரியில்லையென்றால் நல்லபடியாக வளர்க்கபட்ட ஆண்கள் கூட வழி மாறலாம்.

அதனால போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையில் கூடவே நின்னு தோள் குடுக்கற மனைவியின் பங்கே அதிகம் என்று என் கருத்தை கூறி முடிக்கிறேன்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

அணித்தலைவி மனோ மேடம் அவர்களுக்கு என்னுடைய பணிவான வணக்கம்..

கவிசிவா உங்களுடைய வாதம் மிக சிறப்பு. ஆண்மகனின் வாழ்க்கை மிக சிறப்பாக அமைய காரணம் ஒரு தாய்தான்.. இதில் ஆரம்பவாழ்க்கை, இடைநிலைவாழ்க்கை என்றெல்லாம் இல்லை. எதிரணியினர் தாயுடன் வாழும் வாழ்க்கை 30 வருடத்திற்குள் முடிந்து விடுகிறது என்கின்றனர். ஒரு ஆண் பெரும்பங்கு யாருடன் வாழ்கிறார்கள் என்பது முக்கியமல்ல, அவருடைய வாழ்க்கை சிறப்பாக அமைவதற்கு முக்கிய காரணமாக அமைவது யார் என்பதுதான்.

30 வயது உள்ள மனிதரை மேம்படுத்துவது ஒன்றும் பெரியகடினமல்ல. கருவில் உருவாகிய நாள் முதல் தன்சுகத்தை பெரிதென கருதாமல், தன்குழந்தைக்காக (மகனுக்காக) எல்லா கஷ்டத்தையும் அன்புடன் சகித்துக் கொண்டு, ஈன்றெடுத்தபின் அவனுக்குத் தேவையான அததனைபணிகளையும் செய்து தன்னுடைய பசி, தூக்கத்தையும் மறக்கும் தாய் எதற்கும் ஈடானவள் அல்ல. இதோடு ஓப்பிட்டுப் பார்த்தால் மனைவியின் பணிவிடை ஒன்றும் கடினமல்ல. தாயின் பணி அதோடு முடிந்து விட்டதா இல்லையே. சிறுவயதில் தாய் நல்ல முறையில் வளர்த்து அவனை டாக்டராகவோ, இன்ஜினியராகவோ.....etc. ஆக்கியப்பின் என் கணவர் பெரியபதவியில் இருக்கிறார் என்று மனைவிமார்கள் சொல்கிறோம். மனைவியா அவர்களை படிக்கவைத்தோம்? அவர்களுக்கு வேலை வாங்கி கொடுத்தோம்? அவர்கள் அந்த அளவில் முன்னேறி வந்ததற்கு யார் காரணம் தாய்தானே?

எதிரணியினர் எல்லோரும் ஒரே கருத்தைதான் முன்வைக்கின்றீர்கள் "தாய் என்பவள் 30 வயதுவரைதான் மகனுடன் இருக்கிறாள், மனைவிதான் 75% இருக்கிறாள்". உங்க சர்வேபடி பார்த்தால் தாய்கிட்ட இருக்கிற 25% நாள் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க ஆண்கள் மீதியிருக்கும் 75% நாட்களில்தான் ரொம்ப டார்ச்சர அனுபவிக்கிறாங்க.

////ஒரு தாய்க்கு பல மகன்கள் இருக்கலாம், அதனால் அவர் ஒரு குழந்தையை தனி கவனம் எடுத்து முன்னேற்றுவது இயலாது!////

ஒருதாயிக்கு எத்தனை பிள்ளைகள் இருந்தாலும் அவள் அத்தனை குழந்தைகளையும், தனித்தனியேதான் பெற்றெடுத்து வளர்க்கிறாள். அதுக்காக பாசத்தை பாகப்பிரிவினை பண்ணமாட்டாள். ஒருபிள்ளைக்கு பசியாற்றிவிட்டு இன்னோரு பிள்ளைய பட்டினி போடமாட்டாள். அதுதான் தாயன்பு என்பது.

மனைவி கணவனே வாழ்க்கை என்று நினைப்பதற்கும்
கணவனிடம் அன்பை பொழிகிவதற்கும், கண்ணில் கேக்கத்தோடு காத்திருப்பதற்கும், பிள்ளைய பெறுவதும் தியாகம் கிடையாது இதிலெல்லாம் நம்முடைய சுயநலமும் இருக்கிறதுதானே. அவர் நம்மீது காதலுடன் இருப்பதால் நாமும் அவ்வாறே இருக்கிறோம். அவன்கூடவே வாழ்ந்து அவனுடைய அடி, மிதி, குத்து, எச்சு, பேச்சு என எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு அவனுடைய சக இன்ப துன்பங்களில் பங்கெடுத்து வாழ்கிறோம் என்கிறீர்கள் எதற்காக அவர்மேல் கொண்ட பாசத்தினால் மட்டுமா? இல்லை இதை நம்ம பிறந்தவீட்டில் சொன்னால் ஏத்துக்க மாட்டாங்க அப்போ அதுவும் நம்ம சுயநலத்திற்காகத்தானே இருக்கோம். கணவன் ஏதாவது திட்டினால் மனைவி கோவம் கொண்டு பேசாமல் இருப்பதுண்டு, ஆனால் தாய்,மகன் பிரச்சனையில் யார் மேல்கோவம் இருந்தாலும் முதலில் மகனை சமாதானப்ப்டுத்துவது ஒரு தாய்தான். ஒழுங்கான பிள்ளைய ஊதாரியா, கடன்காரரா மாத்துற மனைவியும் இருக்காங்க எதிரணியினர் நினைவு வச்சிக்கோங்க.

மனைவி என்னதான் கணவன் மேல் அன்பை பொழிந்தாலும், அதில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் அதை எந்த மனைவியாலும் மறுக்க முடியாது. ஆனால் தாயன்பு என்பது அப்படியல்ல. சுயநலமற்றது. தாய் ஒரு மகனுக்கு செய்த பணிவிடையை மனைவியால் தன் வாழ்நாளில் ஈடுசெய்ய முடியாது.மாதா, பிதா, குரு, தெய்வம்னுதான் சொல்லியிருக்காங்க. தாயில்லைனா பிள்ளையே இல்லை. தாயினால்தான் ஒரு ஆணின் வாழ்க்கை சிறப்பாக அமைகிறது என்று கூறி என்முதல் சுற்று வாதத்தை முடிக்கிறேன் :-)

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை....
முதலில் மனோ அக்கா, இந்தத் தலைப்பிலும் எனக்குக் கொஞ்சம் குழப்பம் இருக்கிறது, அதாவது ஆண்மகன் என்றால் பிறப்பு முதல் இறப்பு வரை, மனைவி வருவது இடையில்தானே....

திருமணத்தின் பின் தானே மனைவி வருகிறார், நீங்கள் குறிப்பிட்டது ஒரு ஆணின் மொத்தமான (பிறப்பு தொடங்கி இறப்பு வரை) வாழ்க்கையில் என எடுத்துக்கொண்டு என் வாதத்தைத் தொடங்குகிறேன்.

இந்த தனிஷாவும் நானும் முற்பிறப்பில் இரட்டையர்களோ தெரியவில்லை, எல்லா விவாதத்திலும் என்ன ஒற்றுமை பாருங்கள்...

எந்தக்குழந்தையும் பிறந்ததிலிருந்து ஒரு 18/20 வயதுக்குள் எப்படி வளர்க்கப்படுகிறாரோ அப்படித்தான் பின்னாளிலும் இருக்கப்போகிறார், பின்னர் அவர்களின் பழக்கங்களை மாற்றுவது கடினம். எனவே ஒரு ஆண் நல்ல முறையில் உருவாவது ஒரு தாயின் கையில்தான் தங்கியுள்ளது. தாயிடமிருந்து பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொண்டதாலேயே அவரால் மனையுடன் அனுசரித்துப் போக முடிகிறது.

நல்ல புத்திகள், பழக்கங்களைச் சொல்லி, நல்ல முறையில் கல்வியை ஊட்டி, தன் மகனை ஒரு தாய் வளர்த்து ஒரு மனைவியின் கையில் கொடுத்தால் அக் குடும்பம் நன்கு துலங்கும், மனைவி கோபக்காரியாக, தீய குணங்களோடு இருந்தாலும் நல்ல முறையில் வழர்க்கப்பட்ட கணவனாக இருந்தால் பொறுமையாக மனைவிக்கேற்றபடி நடந்து , மனைவியை மாற்றி நல்ல குடும்பத்தை உருவாக்க முடியும். ஆணின் வாழ்க்கை சிறப்பாக அமைந்தபின் தானே மனைவியைக் (பெண்ணை)கொடுக்கிறார்கள், ஒரு ஆண் கெட்டவர் எனத் தெரிந்தால் எந்தப் பெண் சம்மதிப்பார் தாலியை ஏற்க?

எதிர்க்கட்சியினரின் வாதத்தைப் பார்த்தால் ஒரு கதைதான் நினைவிற்கு வருகிறது, சரியாக மறந்துவிட்டேன் ஆனால் இதுதான் கதை, யானை கஸ்டப்பட்டு ஒரு கிணறு வெட்டியதாம், முடிந்ததும், அங்கிருந்த சேற்றை தன்மேல் அள்ளிப் பூசிக்கொண்டு ஒரு அணில் ஓடியதாம் "நான் தான் கிணறு வெட்டினேன்" என்று சொல்லியபடி.. அப்படித்தான் இருக்கிறது.

எதிர்க்கட்சியினர் கணவனைக்கண்டே சில வருடங்கள்தான் ஆகிறது... அதற்குள் மனைவிதான் நல்ல வாழ்க்கையை அமைக்கிறாவாம்... ஐயையோ ஐயோ.....

மாலதியக்கா வாங்கோ அதிராக்கு எதிராச் சொன்னாலும் பறவாயில்லை உங்கள் கருத்துக்களையும் எடுத்துவிடுங்கோ... நான் தலைப்பைப் பார்த்ததும் நினைத்தேன் பட்டிமன்றம் சூடேறாது எல்லோருமே தாயைத்தான் சொல்வார்கள் என்று, இங்கே வந்து பார்த்தால் ... சூடென்ன அனல் பறக்குது... தொடரட்டும்.... நடுவர் அவர்களே முடிவு சாலமன் பாப்பையாமாதிரி ஆக்கிடாதீங்கோ... ஜேமாமி சொன்னதுபோல் வெட்டு ஒன்று துண்டு ரண்டாகட்டும்.

எனது உருக்கமான ஒரு வேண்டுகோள், இங்கே ரைப் பண்ணுகிறபோது, கொஞ்சம் சிறிய சிறிய பந்தியாக ஆக்கிப் போட்டால் நல்லது, ஒரேயடியாக பெரிய பந்தியாக வரும்போது படிக்க கடினமாக இருக்கிறது, நானும் சிலவேளைகளில் அவசரத்துக்கு அப்படிச் செய்வதுண்டு, இனி நானும் சிறிய பந்தியளாக்குகிறேன்.(அதனால் தளத்திற்கு ஏதும் பாதிப்பு இல்லைத்தானே?)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இதில் யார் எப்படி வாதிட்டாலும் இது தான் உண்மை.எந்த தாயும் தன் மகனின் நிம்மதியை கெடுக்கவேண்டும் என்று நினைக்கமாட்டாள்.மனைவி மக்களுடன் மகன் வாழும் அழகை ரசிக்க கூட விடாமல்,தனிக்குடித்தனம் என்ற் பெயரில் குடும்பத்தை பிரித்து மகனை நிம்மதி இல்லாமல் ஆக்குவது அவனுடைய மனைவிதான்.அதே சமயம் மகனுக்கு எங்கு வேலை கிடைத்தாலும் சந்தோசமாக அனுப்பி வைத்து மகன்,மருமகள் பேரன்,பேரத்தி ஊர் வரும் நாட்களுக்காக காத்திருந்து மகன் உடைமைகளை பாதுகாத்து அவர்களுக்காக வாழும் எத்தனை தாய் தந்தை இருக்கிறார்கள் தெரியுமா?மகனுக்காகக நகை,சொத்துக்களை விற்று படிக்கவைத்த தாய் பற்றி தெரியுமா?மனைவி அணியினர்களே,வெற்றி பெறப்போவது தாய் அணி தான்

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மேலும் சில பதிவுகள்