பால் போளி

தேதி: October 23, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா மாவு - கால் கிலோ
சீனி - கால் கிலோ
பால் - அரை லிட்டர்
எண்ணெய் - கால் லிட்டர்
ஏலக்காய் - 4
உப்பு - அரை தேக்கரண்டி
சோடா உப்பு - கால் தேக்கரண்டி


 

மைதா மாவை சலித்து எடுத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்துக் கொள்ளவும். மற்ற தேவையான அனைத்துப் பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சலித்த மைதா மாவை போட்டு அதனுடன் உப்பு, சோடா உப்பு சேர்த்து கலந்துக் கொள்ளவும். பிறகு அரை கப் தண்ணீரை மாவில் தெளித்து பிசைந்து 20 நிமிடம் ஊற வைக்கவும். மாவின் பதம் மிருதுவாக இருக்க வேண்டும்.
பிசைந்து வைத்து ஊறிய மாவை எடுத்து ஒரே அளவிலான உருண்டைகளாக உருட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி தண்ணீர் சேர்க்காமல் நன்கு பொங்கும் வரை காய்ச்சி அதில் சீனி மற்றும் பொடி செய்த ஏலக்காயை போட்டு கலக்கி இறக்கி வைத்து விடவும்.
உருண்டையாக உருட்டி வைத்திருக்கும் மாவை எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்து பூரியை போல் வட்டமாக தேய்க்கவும். ஒட்டாமல் இருக்க மேலே மைதா மாவை தேய்த்து கொள்ளவும். எல்லா உருண்டைகளையும் இதைப் போல வட்டமாக தேய்த்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேய்த்து வைத்திருக்கும் பூரியை எண்ணெயில் போட்டு உப்பியதும் திருப்பி போட்டு எடுத்து ஒரு பெரியதாம்பாளத்தில் போட்டு வைக்கவும்.
அதில் காய்ச்சி வைத்திருக்கும் பாலை எல்லா பூரியின் மேலும் படும்படி பரவலாகஊற்றி விடவும்.
பிறகு 5 நிமிடம் கழித்து எல்லா பூரிகளையும் திருப்பி போட்டு மீண்டும் 5 நிமிடங்கள் ஊற வைக்கவும். எல்லா பூரியும் பாலில் நன்கு ஊற வேண்டும்.
பூரி நன்கு ஊறியதும் ஒரு தட்டில் பாலுடன் பூரியை சேர்த்து வைத்து பரிமாறவும். இந்த செய்முறையை வழங்கியவர் சமையலில் நல்ல அனுபவம் வாய்ந்த திருமதி. ஜோதி கோவிந்தராஜ் அவர்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சதாலட்சுமி
பால் போளி செய்துபார்த்தேன் சுவையாக இருந்தது.நன்றி

சதாலட்சுமி