கார முறுக்கு

தேதி: October 23, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.5 (2 votes)

 

முறுக்கு மாவு - ஒரு கப்
தனி மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கல் உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் 3/4 கப் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு தேக்கரண்டி உப்பை போட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் முறுக்கு மாவை போட்டு அதனுடன் மிளகாய் தூள் மற்றும் சீரகம் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
மிளகாய் தூள், சீரகம் சேர்த்து கலந்து வைத்திருக்கும் முறுக்கு மாவுடன் உப்பு கரைத்த தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து பிசைந்துக் கொள்ளவும். மாவு நன்கு மிருதுவாக இருக்க வேண்டும்.
ஒரு தட்டின் பின்புறத்தில் சிறிது எண்ணெய் தடவிக் கொண்டு பிறகு முறுக்கு பிழியும் உரலில் மாவை வைத்து தட்டில் பிழிந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிழிந்து வைத்திருக்கும் முறுக்கை போடவும். ஒரு முறைக்கு 3 அல்லது 4 முறுக்குகள் போடலாம்.
2 நிமிடம் கழித்து திருப்பி விடவும். முறுக்கு வெந்ததும், எண்ணெய் அடங்கிய பின்னர் ஒரு நீளமான குச்சியைக் கொண்டு எடுக்கவும்.
சுவையான காரமான முறுக்கு தயார். இந்த கார முறுக்கு குறிப்பினை வழங்கியவர் திருமதி. செல்லம்மாள் அவர்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஒரே நாளில பல யாரும் சமைக்கலாம் குறிப்புகள்!!! இனிய வாழ்த்துக்கள் அனைவருக்கும்...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..