கணக்கு,விடுகதைகள்,புதிர்கள் இங்கே யாரும் கேட்கலாம் பாகம்-6!!

தோழிகளே,அந்த த்ரெட் வழிஞ்சு பேஜ் ஓபன் ஆக லேட்டாகுது,அதான் புதுசு.வாங்கப்பா விடுகதை கேளுங்க,புதிரை சொல்லுங்க,எல்லாரும் வாங்க,இருக்கிற அறிவை இன்னும் அதிகமா வளர்த்துக்கவும்,நிறைய தெரிந்து கொள்ளவும்,முக்கியமா மூளைக்கு வேலை கொடுக்கவும் இந்த த்ரெட்டுக்கு வாங்க,கேளுங்க,தெரிஞ்சா பதிலும் சொல்லுங்க!!!

சுகன்யா
தேன்கூடு கரெக்டா?

ஆயிரம் தச்சர்கள் கூடி அழகான மண்டபம்.....
தேன் கூடு

கரெக்டா சொல்லிட்டீங்க!ஹாய் ஜீவி நீங்களும் கரெக்டா சொல்லிட்டீங்க

ஒரு அமாவாசை அன்று தெரு விளக்குகள் இல்லாத ஒரு வழியில் பாலம் ஒன்று இருக்கின்றது. ( இந்த பாலத்தில் ஒவ்வொரு அமாவசை அன்றும் கும்மிருட்டில் எப்படியாவது ஒரு விபத்து நடந்து யாராவது ஒருவர் இறப்பது வழமையாகி விட்ட்டது. இதனால் அமாவாசை இரவுகளில் அந்த ஊர் மக்கள் பாலத்திலே போவதை தவிர்த்து விட்டார்கள். பெரும்பாலும் வெளி ஊர்களை சேர்ந்த ஆட்கள் விபத்தில் சிக்கி மரணிப்பார்கள். ஊர் மக்கள் இந்த பாலத்திற்கே மரண பாலம் என்று பெயர் வைத்து விட்டார்கள்.) இந்த பாலத்தில் ஒரு நேரத்தில் ஒரு வாகனம் தான் போக முடியும். அன்றும் அப்படித்தான் ஒரே நேரத்தில் எதிரும் புதிருமாக இரண்டு வாகனங்கள் வந்து விட்டது. அவர்களின் துரதிஷ்டம் இரு வாகனங்களிலும் விளக்கு எரியவில்லை. அதிலே ஒருவர் அந்த ஊர்காரர் மற்றவர் வெளி ஊர்காரர். எந்த ஊர்காரர் விபத்தில் அதிகம் பாதிப்படைந்து இருப்பார்.
அதற்கான காரணம் சொல்ல வேண்டும்?

சுகன்யா
இரண்டுபேருமே விபத்தில் காயம் அடைந்துருக்க மாட்டார்கள் காரணம் அவர்கள் சென்றது பகலில்.

யாருக்கும் விபத்து நடக்காது.அமாவசை அன்று போனலும் பகலில் வெளிச்சம் இருக்கும்.அதனால் யாருக்கும் விபத்து நடக்காது .விடை சரியா ?

ஹாய் இதற்கு பதில் தேன்கூடு சரியா

இப்பலாம் ரொம்ப யோசிக்கிறதே இல்ல போல!!!விடையை கண்டு பிடிச்சிட்டீங்க!

தேவை என்றால் எறிவார்கள், தேவையில்லை என்றால் எடுத்து வைப்பார்கள் அது என்ன?

ஆயிரம் தச்சர்கள் கூடி அழகான மண்டபம் கட்டி ஒருவன் கண் பட்டு உடைந்ததாம் மண்டபம்?

ஹாய் இதற்கு பதில் தேன்கூடு சரியா

சரியான விடை தான்பா.

ஹாய் துஷி அதற்கு எப்பவோ பதில் அளிச்சாசுபா.நீங்க கவனிக்கலை போலும்.உங்க விடை சரி தான்

மேலும் சில பதிவுகள்