கணக்கு,விடுகதைகள்,புதிர்கள் இங்கே யாரும் கேட்கலாம் பாகம்-6!!

தோழிகளே,அந்த த்ரெட் வழிஞ்சு பேஜ் ஓபன் ஆக லேட்டாகுது,அதான் புதுசு.வாங்கப்பா விடுகதை கேளுங்க,புதிரை சொல்லுங்க,எல்லாரும் வாங்க,இருக்கிற அறிவை இன்னும் அதிகமா வளர்த்துக்கவும்,நிறைய தெரிந்து கொள்ளவும்,முக்கியமா மூளைக்கு வேலை கொடுக்கவும் இந்த த்ரெட்டுக்கு வாங்க,கேளுங்க,தெரிஞ்சா பதிலும் சொல்லுங்க!!!

ஹாய் துஷி சிகப்பு குப்பிக்குள் சில்லறை காசு மிளகாய். பதில் கரெக்ட்டா.

ஹாய் காயத்ரி உங்க பதில் சரிப்பா

ஹாய் தனு நான் இப்ப online தான் இருகேன் நீங்களும் online
தான் இருகிங்ள் ஆனால் பேச முடியல

உலகம் முழுவதும் படுக்கை விரித்திரிப்பான் ஆனால் அவன் படுக்காமல் ஓடிக்கொண்டிருப்பான். அவன் யார்?

ஹாய் ஹரிகாயத்ரி,எப்படியிருக்கீங்க?கடல்.
No problem can stand the assault of sustained thinking.

நான் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க? கடல் ரொம்ப கரைக்ட். சரியாக பதில் சொன்ன அருண்பாலா ஒரு ஓ... ஓகோ..
சரி அடுத்த கேள்வி இவன் தண்ணீரில் தான் பிறப்பான் தண்ணீரில் தான் இறந்தும் போவான்?

மீன்!சுகன்யா,தனீஷா,தனு,கவி.எஸ்,ஜெயா,மர்ழி,சாந்தோ,கவிசிவா,கவி1911,விடுபட்ட தோழிகளே வாங்கபா!!
No problem can stand the assault of sustained thinking.

ஹாய் அருண்பாலா மீன் கூட விடையா வைச்சிருக்கலாம். ஆனால் பதில் இது இல்ல.

ஹாய் ஹரி,

தண்ணீரில் பிறப்பான்; தண்ணீரில் இறப்பான். அவன் யார்- உப்பு

ஹாய் அருண்பாலா கூப்பிட்டா வராம இருப்போமா!!

ஹாய் சுகன் பதில் கரைக்டா சொல்லிட்டீங்க.

மேலும் சில பதிவுகள்