கணக்கு,விடுகதைகள்,புதிர்கள் இங்கே யாரும் கேட்கலாம் பாகம்-6!!

தோழிகளே,அந்த த்ரெட் வழிஞ்சு பேஜ் ஓபன் ஆக லேட்டாகுது,அதான் புதுசு.வாங்கப்பா விடுகதை கேளுங்க,புதிரை சொல்லுங்க,எல்லாரும் வாங்க,இருக்கிற அறிவை இன்னும் அதிகமா வளர்த்துக்கவும்,நிறைய தெரிந்து கொள்ளவும்,முக்கியமா மூளைக்கு வேலை கொடுக்கவும் இந்த த்ரெட்டுக்கு வாங்க,கேளுங்க,தெரிஞ்சா பதிலும் சொல்லுங்க!!!

ஹாய் தோழிகளே எல்லோரும் நலமா?
அகத்தில் அகம் சிறந்த அகம் அது என்ன அகம்?

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

நாங்க எல்லோரும் நலம்பா.நீங்க எப்படிபா இருக்கீங்க?எங்கே கொஞ்சநாளா உங்களை காணோம்?

உங்க விடுகதைக்கு விடை பல மாதிரி யோசிச்சேன்,அப்புறம் மனசு எப்போ சிறப்படையுது,நல்ல எண்ணம் உண்டாகும்போதுதான்,
அது உண்டாகுவது நல்ல புக்ஸ் படிக்கிறபோது தான்.

ஆக விடை புத்தகம்

நானும் நலந்தான். இரண்டு வாரம் வெளியூர் போயிருந்தேன். அப்புறம் விரதம் எல்லாம் முடித்து இன்று இந்தப்பக்கம் வந்தேன். சுகன்யா நீங்கள் பல மாதிரி யோசிச்சு சரியான விடையை கண்டுபிடித்து விட்டீர்களே.
அடுத்த விடுகதை சுற்றுவது தெரியாது ஆனால் சுற்றிக்கொண்டே இருப்பான். அவன் யார்?

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

காற்று

நான் சமீபத்தில் படித்தது (இது ஜோக் பகுதியில் இருந்தது தான் வருத்தம்)

ஒரு பாட்டி தன் பேரனிடம்: நான் இறந்தாலும் கவலைப்படாதே உங்கம்மா வயிற்றில் உன் தங்கையாய் பிறப்பேன்.

அதற்கு பேரன் : ஏன் பாட்டி இப்போ அம்மாகிட்ட திட்டுதான் வாங்குற. என் தங்கையா பிறந்து அடியும் வாங்கனுமா?

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

ஹாய் சுரேஜினி நலமா? உங்கள் விடை தவறானது. கொஞ்சம் யோசியுங்கள்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

ஹாய் வத்சலா,
ஊருக்கு போயிருந்தீங்களா!ஓகே ஓகே
உங்கள் விடுகதைக்கு பதில் - உலகம்,சரியான்னு சொல்லுங்க

தேன் கூடு.
சரிய்யா சுகன்யா

எல்லாம் நன்மைக்கே...

தேன் கூடு.
சரிய்யா சுகன்யா?

எல்லாம் நன்மைக்கே...

எந்த கேள்விக்குபா பதில் சொல்றீங்க.ஆயிரம் தச்சர்கள்.....அந்த விடுகதைக்கு ஏற்கனவே பதில் சொல்லியாச்சுபா.இப்ப வத்சலா அவங்க கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல முயற்சியுங்க!ஓகேவா

மேலும் சில பதிவுகள்