பளிங்குப் பல்

எனகு என் பற்களை கொஞ்சம் அழகு படுத்த ஆசை வந்து விட்டது.சிறு வயதில் கேடு வரலாம் என்று ஃபில்லிங் செய்யப்பட்ட பல்லும் ஒன்று உண்டு..முன் பல் இரண்டும் ஒரு 3 மில்லிமீட்டெ நீளம் அதிகம்.பல்லும் ந்ல்ல வெள்ளை வெளேர் என்று இருக்க வேண்டும் என்று ஆசை.
ஃபில்லிங் செய்யப்பட்ட பல்லிலுள்ள ஃபில்லிங் அகற்றி ரூட் கெனால் செய்யலாம் என்று நினைத்திருக்கிறேன்..
1)ரூட் கனால் செய்த அனுபவங்களை சொல்லுங்களேன்..அதற்கு எத்தனை சிட்டிங் வேண்டி வரும்..வலி இருந்ததா.செய்தபின் பலன் கிடைத்ததுஇபோல் உணர்ந்தீர்களா?
2)முன் பல்லை ட்ரிம் செய்ய ஆசை அதை செய்தவர்கள் உண்டா?
3)பற்களை பளிச் வெள்ளை ஆக்க ஆசை அதையும் செய்தவர்கள் உண்டா..வெண்மை எத்தனை நாட்களுக்கு இருக்கும்..என்ன மாதிர்யான ட்ரீட்மன்ட் செய்யலாம் என்று சொல்லுங்கள்..
உதவுங்கள் தோழிகளே.

சரி இன்னைக்கு வேண்டா தீபாவளி முடிஞ்சு வந்து பல்லை பளிங்காக்க ஐடியா கொடுங்கோ

நான் பல்லை க்ளீன் செய்தேன். அதில் வலி எல்லாம் இல்லை. எல்லா பல்லிலும் உள்ள அழுக்கை எடுத்தார்கள். பல்லில் ஒரு கரை கூட இல்லை. அப்படி ஒரு க்ளீன். சிறு வயதில் இருந்த கருமை நிற க்ராச்சஸ் கூட போய் விட்டது. மெட்டல் வைத்து செய்வதால் பல் கூசும் அவவளவுதான் வலிக்காது. ஒரு சில இடங்களில் இரத்தம் வரும் அவ்ளோதான். நான் செய்து 2 வருடம் ஆயிட்டு ஆனால் இன்னும் அப்படியேதான் இருக்கு

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

தளிகா பல் கிளீன் செய்வது வருடத்துக்கு ஒருமுறை செய்ய வேண்டும் என்பது டாக்டர்கள் பரிந்துரை.என் பற்கள் முன்பு மஞ்சல் மசேலென இருந்தது.முதல் முதலில் செய்யுபோது டூள்ஸ் பல்லில் படும்போது அருவருப்பாகவும் கடினமாகவும் இருந்தது.கிளீன்பண்ணி முடிந்து என் பற்களின் சுத்தமும் வெண்மையும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சுத்தம் செய்வதில் நல்ல பலன் கிடைக்கும் பாதிப்பில்லை.இப்போ பல தடவை செய்து விட்டேன்.பல் டக்டர்கள் எப்போதும் முதலில் ஆலோசனை செய்வார்கள்.அதனால் நீங்கள் எல்லாவற்றுக்கும் ஒரு டாக்டரை சந்தித்து தகுந்த விளக்கங்களைப்பெறலாம்.பொறுத்திருங்கள் தீபாவளி முடித்து நம் அனுபவசாலிகளெல்லாம் வருவார்கள்

ஹாய் தளிகா, நீங்க கேட்ட கேள்விகளுக்கு பதில் இங்கே கொடுத்திருக்கேன்.
1) ரூட் கேனல் ட்ரீட்மெண்ட் செய்யும்போது மிகவும் லேசான வலி முதல் சிட்டிங்கில் இருக்கும். அதுக்கூட ஊசிப் போடற அந்த செகண்ட் தான். பிறகு ஒரு வலியும் தெரியாது. தெரிஞ்சா அந்த ஊசி சரியா போடலன்னு அர்த்தம். ஊசிப் போட்ட பிறகு அந்த இடமே மரத்துப் போயிடும். முதல்ல பல்லை க்ளீன் செய்து அதன் நெர்வ்ஸை ரிமூவ் செஞ்சுடுவாங்க. பல்லின் நரம்பை எடுத்து விட்டால் பிறகு எந்த வலியையும் நம்மால் உணர முடியாது. பல் கூச்சமும் இருக்காது. அடுத்த 2, 3 சிட்டிங்கில் பல்லை க்ளீன் செய்து, நன்றாக ஷேப் செய்வார்கள். பிறகு சரியான அளவுக்கு பில்லிங் செய்வார்கள். முதல் முறை சும்மா க்ளீன் செய்த இடத்தை மூடவே சாதாரண பில்லிங் உபயோகப்படுத்துவார்கள். ரூட் கேனால் ட்ரீட்மெண்ட் நன்கு தெரியாதவாறும், பல நாள் பலன் தரவும் பல்லுக்கு கேப்(மூடி) போடுவது அவசியம். அதற்கு நமது பல்லை அளவெடுத்து, நமக்கு தேவையான பொருளில் கேப் செய்ய ஆர்டர் கொடுத்து வரவழைப்பார்கள். எனவே ஒரு 15 நாள் அதற்கென்று ஒதுக்கி விடுவது நலம். செராமிக் கேப் நமது பல்லில் ஷேடை எடுத்து அதே நிறத்தில் செய்து பொருத்துவதால் எந்த வித்தியாசமும் தெரியாது. பல பேர் மெட்டல் கேப் மட்டும்தான் விரும்புவார்கள். செராமிக் கொஞ்சம் விலை அதிகம். முன்பு செய்த பில்லிங்கை எடுத்துவிட்டு, புதிதாக பில்லிங் செய்து இந்த கேப்பையும் மாட்டி விடுவார்கள். கொஞ்ச நேரத்துக்கு பல்லை அழுத்தி மூடிக் கொண்டு எதுவும் உண்ணாமல் இருந்தால் போதும். சில மணி நேரத்தில் எல்லாம் செட்டாகி விடும்.

2)என் கஸின் ஒருத்தி முன் பல்லை ஷேப் செய்து இருக்கிறாள். நன்றாக இருக்கிறது. சின்ன வயதில் செய்து கொண்டாள். அதனால் எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தோற்றமும் நன்றாக இருக்கும்.

3) பல் ஒயிட்டனிங் ட்ரீட்மெண்ட் செய்வது எந்த அளவு நல்லது என்று சொல்ல முடியவில்லை. சிலர் அதனால் பல்லில் கூச்சம் ஏற்படும் என்றும் சொல்கிறார்கள். நீங்கள் பல் க்ளீனிங் பற்றிக் கேட்கவில்லை என்று நினைத்து இதை சொல்கிறேன். பல் க்ளீனிங் என்றால் தனிஷா, சுரேஜினி சொன்னது போலத்தான் இருக்கும். பல் களீனிங் வீட்டிலேயே செய்ய கோல்கேட் ப்ரொபஷனல் க்ளீன் பேஸ்ட்டை வாரம் ஒரு முறை துலக்கலாம். ஒயிட்டனிங் பேஸ்ட் எல்லாம் ட்ரீட்மெண்ட் அளவு பலன் கொடுக்கும் என்று சொல்ல முடியாது. எனவே நல்ல டெண்டிஸ்ட்டை பார்த்து இந்த ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொள்வது அவசியம். இங்கே வெளி நாடுகளில் டெண்டிஸ்டை விட டெக்னீஷியன்ஸ் செய்யும் ட்ரீட்மெண்ட்டே அதிகம். எனவே கவனமாக இருங்கள். கண்ட கெமிக்கல்சையும் உபயோகித்து பல்லை பாழ்பண்ணிவிட வாய்ப்புண்டு. இதற்கு இன்னொரு சொல்யூஷன் இருக்கு. அது ( கிளாஸ் போன்று நிறமற்று ) சிலிக்கான் போன்ற ஒரு பொருளில் செய்து விற்கப்படும் பல் கவர். இது அப்படியே பல் வரிசை செட் போன்று இருக்கும். இதனை பல்லில் போட்டுக் கொண்டு பார்ட்டி போன்ற இடங்களுக்கு செல்லலாம். பல்லில் போட்டிருப்பது தெரியாது. அதே சமயம் பல் வெள்ளையாகவும், பள பளவென்றும் இருக்கும். இது பலரும் தற்போது உபயோகிக்கிறார்கள்.இது ஒரு காஸ்மெட்டிக் சாதனம்தான்.

சகோதரி தேவா,
'பல் கவர்' பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். இது பற்றி ஒரு சந்தேகம். இது வெவ்வேறு அளவுகளில் கிடைக்கிறதா? அல்லது வாங்கி வந்து அவரவர்க்கு ஏற்ப அளவு சரிசெய்துகொள்கிற மாதிரி இருக்கிறதா? இதனை ஆங்கிலத்தில் குறிப்பிடுவது எப்படி? இது தொடர்பாக வேறு ஏதாவது பயனுள்ள தகவல்கள் இருந்தால் சொல்லுங்களேன்.
நன்றி.
அன்புடன் இமா.

‍- இமா க்றிஸ்

அய்யோ எனக்கு பாதி பாதி பதிவா தெரியுதே எப்படி ஃபுல்லா படிக்கன்னு புரீலயே

உங்க சிஸ்டத்தில் ஏதேனும் பிரச்சனையோ. எங்களுக்கு நல்லாதானே தெரியுது. தேவா சொல்வது ரொம்ப சரி. பல் க்ளீன் பண்ணும் போது கூச்சம் தாங்க முடியாது. அதனால் டாக்டர் க்ளீன் பண்ணும் போது கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ண டைக் கொடுப்பார்கள்.

தேவா உடம்பில் உள்ள எல்லா பார்ட்சுக்கும் உள்ள டவுட்ட ரொம்ப அழகா தெளிவா க்ளியர் பண்ணுறீங்க. எனக்கு ஒரு சந்தேகம் நீங்க டாக்டரா இல்ல உங்க ஹஸ்பண்ட் டாக்டரானு. பரவாயில்லை டாக்டர் மனைவி இப்படிதான் இருக்கனும்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஹா ஹா தளிகா வேணும் நா கண்ணாடி போட்டு பருங்களேன்.கண் டெஸ்ட் பண்ணியாச்சா அல்லது சிஸ்டம் கோளாறா??/
ஜலீலா

Jaleelakamal

ஹாய் தாலிகா,
அடிக்கடி பல் க்ளீன் செய்வதால் ஈறு கெட்டுவிடும். ஈறு கூசசம் வரும்.ஒருமுரை செய்துகொள்ள்வும். இது என் அனுபவம்.இரன்டுபல்லுக்கு இடையில் gap விழும். அதனால் தொல்லை ஆகிறது.சாபிட்டவுடன் ஒவ்வொருதரமும்சுத்தமாக பல்தேய்க்கவும்.வாய் கொப்பலிக்கவும்.

தனிஷா,தேவா,சுரெஜினி,விஜயா
உங்கள் பதில் படிக்க இன்று தான் முடிந்தது அது என்னமோ பாதியா தெரியுது..ஜலீலக்கா நெசம்மாப்பா எனக்கு மத்ததெல்லாம் முழுசா தெரியுது.அப்ப எது கோளாறு?
டாக்டரிடம் போனேன்..பார்த்தார் ஃபில்லிங் போட்டு விடலாம் எதுக்கும் எக்ஸ்ரே எடுங்க என்றார்.
க்லீனிங்,ஷேப்பிங் இதெல்லாம் ரொம்ப கேடு செய்யாதீங்க எஙிறார்.எனாமெல் தேய்ந்து விடுமாம்..இம்முறை போனப்ப தான் கடைசிபல்லில் ஓரத்தில் 1 சின்ன புள்ளி போல் கேடு அதையும் ஃபில்லிங் போடலாம் என்றார்.
என் பல்லை நான் சுத்தம்பன்றதைக் கண்டு என் கனவர் கிண்டல் பன்னுவார் தேஞ்சுட போவுதுன்னு ஒவொரு முறையும் ப்ரஷ் பன்னுவேன் சாப்பிட்டபின்.அப்படி இருந்தும் சொத்தையாவது பாரம்பரியமாக இருக்கலாமாம்.
மட்டுமல்லாமல் 15 நிமிடம் பல் தேய்க்கனுமாம் கிட்ட கண்ணாடி வச்சு அழுத்தாம ஒவ்வொருபல்லா அழுக்கை மட்டும் மெமையா எடுக்கனுமாம்.
தினம் இரவு தூங்கும் முன் எலுமிச்சை நீர் கலந்த தண்ணீரால் வாய் கொப்பளிச்சுட்டு பல் தேய்த்து படுத்தால் கேடே வராதாம்.எல்லோரும் இதை கடைபிடித்து பல்லை பாதுகாத்துக் கொள்ளுங்க.

மேலும் சில பதிவுகள்