இலங்கை தோழிகள் சங்கம் பாகம் 2

சகோதரிகளே இங்கே வாருங்கள்

வந்தாச்சு :)

அன்புள்ள சுரேயினி,நர்மதா சுகமா? எனக்கு நேரம் கிடைப்பதே குறைவு. அதுதான் பதிவு போட முடிவதில்லை. சில நேரத்தில் ஏதாவது எழுத வேண்டும் என்று நினைப்பேன், ஆனால் type பண்ண சோம்பலாக இருக்கும். My kids are always keeping me busy.
Vany

சுரேஜினி ஆர்த்தி இப்ப ஓகே பல்லு சின்னதாதான் உடைஞ்சது. அதுதான் இப்ப இன்னும் கவனமாப் பார்த்துக்கொண்டிருக்கின்ரேன்.
நர்மதா இங்கு நேற்றிரவு நல்ல ஸ்னொ இனித்தான் மகளைக் கூட்டிக் கொண்டு போகப்போறன்.ஜன்னலுக்கால காட்டினனான். உங்கட மகள் எப்பிடி இருக்கிறா?
வாணி எப்பிடி இருக்கிறீங்கள்.

காயத்ரி, நான் நலம். மகன் 4 வயது ஆகிவிட்டது. இப்போது ஸ்கூல் போகின்றார். எனவே தான் அருசுவை பக்கம் வருவதில்லை. உங்கள் மகள் எப்படி? நாங்கள் நவம்பரில் கனடா போகின்றோம். நான் இப்பவே நாட்களை எண்ண தொடங்கி விட்டேன்.
Vany

always smile

மகளை ஜனவரியில் இருந்து ப்ளேஸ்கூல் கொண்டு போகலாம் என்டு இருக்கிறன்.கனடாவிற்கு வர்ற சந்தோசத்தில இருக்கிறீங்க போல.வெல்கம் டு கனடா

எல்லாரும் எப்பிடி சுகம்??
யார்யாரெல்லாம் நேற்று பேயை பிடிச்சனீங்கள்.
அதிரா நீங்க விரதமோ? இது கஸ்டமான விரதமல்லவா?.எனக்காக என் மாமியார் பிடிக்கிறார். துஷி இப்போ எப்படி ? எழும்பி நடக்காமல் படுத்திருங்கோ.நேற்று உங்களுக்காக தாய் மாதாவை மண்றாடினேன்.குரோஷே, கைவேலைப்பாடு எப்பிடி செய்யிரது எண்டு சொல்லித்தந்தா நாங்களும் செய்வமில்ல?ஊர் நிலமைகளை நாளாந்தம் கேட்க கேட்க சரியான மனக்கொதிப்பா இருக்கு. ஜீவி நிவ்.... எல்லாரும் இந்த திரட்டுக்கு வாங்கோ நர்மதா மாதிரி வந்து பிரசன்ட் சொல்லுங்கோ.

http://aruchuna.net/ தோழீஸ் இந்தப்பக்கத்தில் நிறய ஈழப்புகைப்படங்கள் இருக்கு போய்ப்பாருங்கோ. வேற எங்கயாவது இருந்தாலும் எனக்கு சொல்லுங்கோ

அன்பு நர்மதா,
நீங்கள் வாழ்த்துமடலுக்குக் கொடுத்த பின்னூட்டத்திற்கு இங்கு பதிலளிக்கிறேன். உறவினர், நண்பர்க்கு எங்கள் கையால் வாழ்த்துத் தயாரித்து அனுப்புவது ஒரு தனி சந்தோஷம்தான். நாமே செய்து அனுப்புகிறபோது அதுபோல் இன்னொன்று கிடைக்காது, இல்லையா? சிறுவயதிலிருந்து நான் செய்து சேர்த்துவைத்திருந்த கிராஃப்ட்ஸ், என் ஸ்கிரப் புக்ஸ் எல்லாம் இலங்கையிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டேன். இங்கு என்னுடன் வந்தது நான் சேர்த்த முத்திரைகளும் நாணயங்களும்தான்.
என்னவெல்லாமோ செய்வேன். இன்னதென்று குறிப்பாகக் கூறமுடியாது.ஆனால் இங்கு சேகரித்து வைக்கிறமாதிரி இடவசதி இல்லை. அதனால் செய்யும் கிராஃப்ட் எல்லாம் அன்பளிப்பாகக் கொடுத்துவிடுவேன். பாடசாலையிலும் கிராஃப்ட் கற்றுக் கொடுக்கிறேன். இனிமேல் ஏதாவது செய்கிறபோது அறுசுவையில் பகிர்ந்துகொள்ளுகிறேன். (12 படங்களுக்குள் செய்முறையை அடக்கிவிடுவது என்பது கொஞ்சம் சவாலாக இருக்கிறது.)
உங்கள் ஸ்கிரப் புக் நன்றாகவர என் வாழ்த்துக்கள். விரைவில் உங்கள் வாழ்த்து அட்டைகளும் பிரசுரமாகும். கவலை வேண்டாம். நானும் இனி வராது என்று நினைத்திருந்தவேளை தான் வெளியிடப்பட்டிருக்கிறது.
மீண்டும் சந்திப்போம்
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

சுரேஜினி, லொலீஸ் எல்லாம் வாங்கி வைத்தேன். ஏனோ இந்த வருடம் ஒரு பேய்க்குட்டியும் வரவில்லை. : (
வாணி, காயத்ரி, எப்படி இருக்கிறீர்கள்?

‍- இமா க்றிஸ்

ஹய்!
எல்லாரும் எப்படி இருக்கிறீங்கள்? நேற்று என்னை கண்டு பேயெல்லாம் பயந்து ஓடிற்றுது.

மேலும் சில பதிவுகள்