சிம்பிள் வெஜிடபுள் ஸ்பகடி

தேதி: October 29, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கனடாவில் வசித்து வரும் இலங்கை தமிழரான <b> செல்வி. விசா </b> தற்போது முதுகலை அறிவியல் பயின்று வருகின்றார், கூடவே சமையலும் சமைக்க ஆரம்பித்தது மூன்று வருடங்களுக்கு முன்புதான் என்றாலும், அதீத ஈடுபாட்டின் காரணமாக இன்று பல்வேறு உணவுகளை சுவைபட தயாரிப்பதில் திறன்பெற்றவராய் இருக்கின்றார். கேக், குக்கீஸ் செய்வதை தனது தனித்திறமையாக குறிப்பிடும் இவர், வரைதல், கைவினைப்பொருட்கள் செய்தல் போன்றவற்றை கொண்டு ஓய்வுப் பொழுதினை செலவு செய்கின்றார்.

 

ஸ்பகடி - ஒரு பாக்கெட் (500 கிராம்)
வெங்காயம் – ஒன்று (மெல்லியதாக நறுக்கியது)
பீன்ஸ் - ஒரு கப் (மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கியது)
காரட் - ஒரு கப் (மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கியது)
கோவா / கேபேஜ் - ஒரு கப் (மெல்லியதாக நறுக்கியது)
பயறு முளை - ஒரு கப்
லீக்ஸ் - ஒரு கப் (நீளவாக்கில் நறுக்கியது)
ஸ்பிரிங் ஆனியன்ஸ் - 1/2 கப் (மெல்லியதாக நறுக்கியது)
ரெட் / க்ரீன் பெப்பர்ஸ் - ஒரு கப் (நீளவாக்கில் நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
சோயா சாஸ் - 3 டேபிள் ஸ்பூன்
சில்லி சாஸ் - 3 டேபிள் ஸ்பூன் (அல்லது மிளகாய் தூள் தேவைக்கேற்ப)
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்


 

மேலே குறிப்பிட்டுள்ளவைகளை நறுக்கி தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயத்தை போட்டு உப்பு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சிறிது நேரம் வதங்கியதும் அதனுடன் நறுக்கின பீன்ஸை போட்டு வதக்கி விடவும்.
பீன்ஸ் வதங்கியதும் நறுக்கி வைத்திருக்கும் காரட்டை சேர்க்கவும். ஓரிரு நிமிடங்களுக்கு பின், நறுக்கின பெப்பர்ஸை சேர்க்கவும்.
அதன் பிறகு லீக்ஸை சேர்த்து நன்றாக கிளறி விட்டு எல்லா காய்கறிகளும் சேர்ந்து சிறிது நேரம் வதங்கியதும் கேபேஜை சேர்த்து கிளறி விடவும்.
எல்லாம் காய்களும் நன்கு வெந்தவுடன், பயறு முளைகளை சேர்க்கவும்.
சிறிது நேரம் கழித்து சில்லி சாஸ் அல்லது மிளகாய் தூள் சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்றாக கிளறி விடவும்.
பின்னர் சோயா சாஸ் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக கிளறி விட்டு இறக்கும் முன், ஸ்பிரிங் ஆனியன் தூவி இறக்கி விடவும்.
ஸ்பகடியை அதன் பாக்கெட்டில் கூறியுள்ள முறைப்படி தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
அதன் பிறகு செய்து வைத்திருக்கும் காய்கறி கலவையை ஸ்பகடியுடன் சேர்த்து நன்கு கிளறவும். தேவைக்கேற்றவாறு உப்பு, சில்லி சாஸ், சோயா சாஸ் சேர்த்துக் கொள்ளவும். விரும்பினால் அஜினோமோட்டோவும் சேர்த்துக் கொள்ளலாம். முட்டை பொரித்து சேர்த்தால் சுவை இன்னும் நன்றாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

nandrey chivir
chelvi vicha unagalathu intha spagati murai naan chithu parthen.nandraka erunthathu.nengal kaikarigali megavum azaghaka naruki irukirirgal.kay naruki eduthu ulla photovai naan oru fiveteen minutes aachum rasichuripen.very beautiful.aanal enaku ungal kuripil ulla leks patri theriyathu.please ungalaal mudindhal athai patri therivikavo allathu athan veru peyarai kuripadavo mudiuma.please....

nandrey chivir

அவந்திகா லீக்ஸ் என்பது எல்லா சூப்பர் மார்கெட்களிலும் கிடைக்கும். இது ஸ்ப்ரிங் ஆனியனை போல ஆனால் பல மடங்கு குண்டாக இருக்கும். இந்த் லீக்ஸ் ரொம்ப நல்லது உடம்புக்கு. சூப்பும் செய்யலாம் இதில்.

I have not seen in india probably it may grow in places like ooty. I remember my mom telling about it

Spelling : leeks

http://en.wikipedia.org/wiki/Leek

"If you want things to be different, perhaps the answer is to become different yourself." - Not mine someone else's

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

nandrey chivir
thangalathu udanadi pathiluku most thanks.

nandrey chivir