வணக்கம் தோழியரே! நான் 26 வாரங்கள் கர்ப்பமாக உள்ளேன்...எனக்கு HEART BURNS எனப்படும் நெஞ்சு எரிச்சல் உள்ளது... சாயுங்காலம் ஆரம்பித்து இரவில் அதிகம் ஆகிறது.சில நேரம் தூங்க முடியாமல் அவதி படுகிறேன்.காரம், எண்ணெய் குறைத்து பார்த்தும் பயன் இல்லை. மருத்துவரிடம் கேட்டால் மருந்து சாப்பிடலாம் என்கிறார்.இதற்கு கை வைத்தியம் இருந்தால் சொல்லுங்குளேன்...
ஹெலோ இளவரசி
ஹெலோ இளவரசி
உங்கள் பதிவை படிக்க முடியவில்லை ஆனால் ஹார்ட் பார்ன்ஸ் என்று தலைப்பு தெரிவதால் ப்திலளிக்கிறேன்..இது எல்லோர்க்கும் உள்ளது தான்...இரவில் தொடங்கும் படுத்தால் அதிகரிக்கும் கழுத்தை அழுத்துவது போலோ அல்லது வாந்தி வருவதோ போலோ இருக்கும்.
தலையணையை உயர்த்தி ப்டுத்தால் கொஞ்சம் பலன் கிடைக்கும்..இரவில் காரம் சேர்க்காத எண்ணையில் வறுக்காத உணவாக சாப்பிடுங்க..எனக்கு பால் கலந்து இனிப்பு சேர்த்த குழ் வகைகள் சப்பிட்டு படுத்தால் அவ்வளவாக இது தெரியவில்லை முன்பு..ஆனால் என்ன தான் செய்தாலும் சில சமயம் இது இருந்து கொண்டே இருக்கும்..ஆனால் கடைசி மாதங்களில் குறிஅந்து விடும்