பிறந்தநாள் வாழ்த்துமடல்

தேதி: October 31, 2008

4
Average: 3.4 (5 votes)

இந்த பிறந்தநாள் வாழ்த்துமடலை செய்து காட்டியவர், அறுசுவையின் நீண்ட நாள் அங்கத்தினராகிய திருமதி. இமா அவர்கள். 24 வருடமாக ஆசிரிய பணியை சிறப்புடன் செய்து வருகிறார். உணவுகள் தயாரிப்பதில் இருக்கும் ஆர்வத்தைவிட அதை கலையுணர்வுடன் அழகுபடுத்தி பரிமாறுவதில்தான் மிகவும் ஆர்வம் என்று சொல்லும் இவர், கைவினைப் பொருட்கள் செய்வதிலும் மிகத் திறமை வாய்ந்தவர்.

 

A-4 அட்டை - ஒன்று
பொருத்தமான வேறு ஒரு நிற அட்டை -
(ஏதாவது ஒரு பக்கம் 17 செ.மீ அளவில் இருக்கட்டும்)
ஸ்டிக்கர் (Happy Birthday)
ஸ்பாஞ்ச் / போம் - சிறு துண்டு
உலோக ஸ்கேல்
பூ மற்றும் இலை வெட்டும் பன்ச்
கத்தி
கத்தரிக்கோல்
PVA பசை

 

மேலே கொடுக்கப்பட்டிருக்கும் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
A - 4 அட்டையை படத்தில் காட்டியுள்ளபடி நான்கு பாகங்களாக மடக்கிக் கொள்ளவும்
மற்றொரு நிற அட்டையில் 2 மி.மீ x 17 செ.மீ அளவிற்கு 2 துண்டுகள் நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
அதே நிற அட்டையில், பூக்கள், இலைகள் வடிவில் இருக்கும் பன்ச்சைக் கொண்டு 7, 8 பூக்களும், 15 - 20 இலைகளும் நறுக்கி எடுத்துக் கொள்ளவும்
ஸ்பாஞ்சை 3 மி.மீ கனத் துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
நறுக்கி வைத்திருக்கும் பூக்களில் ஒன்றை எடுத்து படத்தில் காட்டியுள்ளபடி ஒரு கையால் பிடித்துக் கொண்டு மறுகையால் பூவின் நடுப்பகுதியிலிருந்து ஒவ்வொரு இதழாக மெதுவாக அழுத்தி இழுத்து விடவும். அதிகமாக அழுத்தினால் இதழ்கள் பிரிந்துவிடும்.
அதன் பிறகு நான்கு பாகங்களாக மடித்து வைத்திருக்கும் A4 அட்டையில் இரண்டு நீள கோடுகளையும் ஒட்டிக் கொள்ளவும். பின்பு அட்டையின் திறந்திருக்கும் ஓரங்கள் இரண்டையும் சீராக வெட்டி விடவும்.
தேவையான ஒரிரு பூக்களில் மட்டும் பின்புறம் ஸ்பான்சை ஒட்டி விடவும்.
இனி விருப்பத்திற்கு ஏற்றாற்போல் பூக்கள் இலைகளைக் கொண்டு அந்த அட்டையை அலங்கரித்துக் கொள்ளலாம், பூக்களின் நடுப்படுதியிலும், இலைகளின் காம்பு பகுதியிலும் மட்டும் கம் தடவவும்.
கடைசியாக அட்டையின் நடுவிலோ அல்லது மேல் புறத்திலோ ஸ்டிக்கரை ஒட்டி அலங்கரிக்கலாம்
அழகிய பிறந்தநாள் வாழ்த்து மடல் தயார். மடலின் உள்ளே உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வாசகங்களை எழுதி பரிசளிக்கலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

"அதன் பிறகு நான்கு பாகங்களாக மடித்து வைத்திருக்கும் அட்டையில் வலது ஓரத்தில் இருக்கும் பெரிய திறந்து மூடும் வாய் பகுதியை மட்டும் விட்டுவிட்டு மற்ற திறந்திருக்கும் பகுதிகளை ஒட்டி விடவும். திறந்திருக்கும் பெரிய வாய் பகுதியை சமமாக வெட்டி விடவும்."

இந்த பகுதி எனக்கு குழப்பமாக இருக்கு.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

இமா இதே போலவே உலர்ந்த பூக்களை வைத்து ஒட்டி செய்து வந்தேன்.ஆனால் இப்போது உங்கள் செய்முறை பிடித்திருக்கிறது. neatஆகவும் இருக்கிறது.ரொம்ப நன்றி

அன்பின் இமா, மிகவும் அழகாக இருக்கிறது உங்களின் வாழ்த்து மடல். எனக்கும் வாழ்த்துமடல் செய்வதில் மிகவும் ஆர்வம். நிறைய செய்திருக்கிறேன். இப்பவும் செய்கிறனான். நாங்களே செய்து தெரிந்தவர், உறவினர்களுக்கு கொடுப்பது சந்தோசம்தானே:) வேறு என்னெல்லாம் செய்வீர்கள். எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்களேன். எனக்கு ஸ்கிரப்புக்கிங்கிலும் ஆர்வம். இப்போதுதான் மகளிற்காக ஒன்று தொடங்கியுள்ளேன்.
நானும் பல வாழ்த்து மடல் டிசைன்கள் செய்து அட்மினுக்கு அனுப்பினேன். இன்னும் காணவில்லை :(
நீங்கள் இன்னும் இன்னும் செய்து எங்களுக்கும் காட்டுங்கோ. வாழ்த்துக்கள்.
-நர்மதா :)
PS: 24 வருடமாக ஆசிரியரா இருக்கிறீங்க. அப்ப கட்டாயம் பெரியவங்களா இருப்பீங்க எண்டுதான் மேம் சொன்னன். குறை நினைக்க வேண்டாம். இனி இமா என்றே சொல்லுறன்.

செய்முறையில் திருத்தங்கள் செய்து உதவிய அறுசுவை குழுவினருக்கு எனது நன்றிகள்.

அன்பின் ஆசியா, இப்பொழுது தெளிவாக இருக்கும் என்று நினைக்கிறேன். சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

பாராட்டுக்கு நன்றி சுரேஜினி. உலர்ந்த பூக்கள்தான் எனது விருப்பமும். இயற்கையின் அழகு வேறெதிலும் வராது.

நர்மதா, பாராட்டுக்கு நன்றி.

அன்புடன்
இமா

‍- இமா க்றிஸ்

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta