பொட்டுக்கடலை , வேர்கடலை , நிலக்கடலை என்றால் என்ன?
எனக்கு தெரிந்தவரை வேர்கடலை என்றால் (kacang tanah) என்று
சொல்வார்கள். ஆனால் பொட்டுக்கடலை , நிலக்கடலை
எப்படி இருக்கும்?
அதுவும் வேர்கடலை வகையை சேர்ந்ததா அல்லது பருப்பு வகையை
சேர்ந்ததா?
அன்புடன்
கீர்த்தீஷ்வரி
ஹாய் கீர்த்தீஸ்வரி
ஆங்கிலத்தில் roasted gram என்று சொல்வர்கள்.இது பட்டாணி வகை சார்ந்ததுபா.கூகிள் பண்ணி பாருங்கள்.
roasted gram,groundnut
சுகன்யா சொன்னது கரெக்ட்..பொட்டுக்கடலை சட்னி,லட்டு,காரப் பொட்டுகடலை செய்தால் நல்ல இருக்கும்..
வேற்க்கடலையும் நிலக்கடலையும் ஒனுன்னே நினைக்கிறேன்.அதாவது groundnut
இல்ல வேர்க்கடலை தோலோடு பரித்தெடுத்த நிலக்கடலையும்..அதை உரித்தால் தான் நிலக்கடலைன்னு சொல்லுவாங்களோ என்னவோ
கீர்த்தீஷ்வரி
வேர்க்கடலையும் நிலக்கடலையும் கச்சானும் ஒன்றுதான். இது நிலத்தின் கீழ் விளைவது.
சுகன்யா குறிப்பிட்டது போல் பொட்டுக்கடலை பட்டாணிவகை. (ஆனால் உடைத்திருக்கும் என்று நினைத்தேன். யாராவது விபரம் சொன்னால் நல்லது.)
- இமா க்றிஸ்
hi
நிலக்கடலையும் வேர்க்கடலையும் ஒன்றுதான். பொட்டுக்கடலை சுண்டல் வகையை சார்ந்தது..பொட்டுகடலையை பார்த்தால், சிறிய சுண்டல் போல் தோன்றும்.பொட்டுக்கடலை சட்னி நன்றாக இருக்கும்.பொரியில் கூட போட்டு சாப்பிடலாம்.சுண்டல் வகையை சார்ந்த அந்த கடலையை வருத்து உடைத்தால் , பொட்டுக்கடலை,.... வருப்பதற்கு முன் பச்சயாக அரைத்தால் கடலை மாவு(கடையில் விற்பார்கள்)கடலை மாவு.. போண்டா , பச்சி சுடலாம்..
கவி
தகவலுக்கு நன்றி கவி.
அன்புடன் இமா
- இமா க்றிஸ்
hi imma
நீங்க teacher ஆ?
கவி
ஆமாம் கவி. ஆனால் இங்க படிப்பிக்கிறதா இல்ல. ;-D
அன்புடன் இமா
- இமா க்றிஸ்
hi imma
புரியலை! படிப்பிக்கர்தா இல்லைன்னா?not working?
கவி ;-)
அறுசுவையில் படிப்பிப்பதாக இல்லை. ;-D நான் இங்கு special needs teacherஆக இருக்கிறேன். ஒரு பையன் என் பொறுப்பில் இருக்கிறார். வேலை பிடித்திருக்கிறது.
அன்புடன் இமா
- இமா க்றிஸ்
hi imma
ரொம்ப சந்தோசம்..