கவிதை எழுத வாருங்கள்

தான் படித்த ஒரு ஆங்கில புத்தகத்தில் இருந்து சில வரிகளைத் தேர்ந்தெடுத்து, அந்த வாக்கியங்களின் பொருளைக் கருவாகக் கொண்டு, அதற்கு அறுசுவை நேயர்களை கவிதை எழுத அழைப்பு விடுமாறு திருமதி. இலா அவர்கள் கேட்டிருந்தார்கள். அவர் கொடுத்திருந்த வாக்கியங்கள் இவைதான். கொஞ்சம் நேரடி மொழிபெயர்ப்பு செய்துள்ளேன். பிழைகள் இருப்பின் அல்லது மாற்றங்கள் தேவைப்படின் இங்கு தெரிவிக்கலாம்.

"கற்சுவர்கள் (மதிற்சுவர்கள் என்றும் மாற்றிக்கொள்ளலாம்) ஒரு காரணத்திற்காகவே இருக்கின்றன. நம்மை வெளியில் நிறுத்துவதற்காக அவை இல்லை. நாம் எவ்வளவு தீவிரமாக (எப்படியெல்லாம்) சிலவற்றை பெற விரும்புகின்றோம் என்பதைக் காட்டுவதற்கான வாய்ப்பினை வழங்கவே அவை இருக்கின்றன. சில நேரங்களில், ஊடுருவ இயலாத சுவர்கள் சதைகளால் ஆனவை."

அவரது ஆங்கில வரிகள்,

"The Brick walls are there for a reason.... They are not to keep up us out. The brick walls are there to give us a chance to show how badly we want something"

The following line has to be added in middle of thier kavithai

" Sometimes the most impenetrable walls are made of flesh"

தடைகள் என்பவை
தடுப்பு சுவர் அல்ல....
உன்னை
தடுத்து நிறுத்த...!!!

உன்
உள்ளத்தை அறிய,
உறுதியை சோதிக்க,
உன் வெற்றியை
மேலும் பெருமிதப்படுத்த
உதவும் "படிக்கற்கள்"!

வாழ்க்கைப் போராட்டத்தில்
மனித உறவுகள் கூட
தடுப்பு சுவர் ஆகலாம்!
அதையும் உடைக்காமல்
ஜெயிப்பதில்தான்
இருக்கிறது...
உனது வெற்றி!!
அதுதான்
வாழ்க்கையின் வெற்றியும்!

ரொம்ப நாட்களுக்கு பிறகு அறுசுவைக்கு வருகிறேன்.... கவிதை என்று பார்த்தும் ஆர்வமாகி, தூக்கத்தை தள்ளி வைத்துவிட்டு, தோன்றியதை பதிவு செய்துள்ளேன்.
இன்னும் சிறப்பாக எதுவும் தோன்றினால், version 2 பதிவு செய்வேன்...
:)
சிஜா தோட்டா.
life is not wat u think! It is more than that!!!

நான் இப்படி நினைக்கவே இல்லை "மனித உறவுகள் கூட
தடுப்பு சுவர் ஆகலாம்!
==அதையும் உடைக்காமல்==
ஜெயிப்பதில்தான் இருக்கிறது..."

"Miracles sometimes occur, but one has to work terribly hard for them."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

சிஜா தோட்டா...!! உங்க கவிதை அருமையாக இருக்கிறது. பொதுவாக கவிதைகள் ஷார்ட்டாக இருந்து பொருளை புரிய வைப்பது என்பது ரொம்ப நல்ல யுக்தி. அந்த வித்தையை உங்கள் கவிதையில் பார்க்க முடிகிறது. இலாவுக்கு பிடித்த அந்த வரிகள் எனக்கும் ரொம்ப பிடிக்கிறது சிஜா...!!

ரொம்ப நாளைக்கு அப்புறமா உங்களை பார்க்கிறேன். உங்க கவிதை ரொம்ப அருமை. 4 வரியில் எண்ணத்தை சொல்வதற்கு ஒரு திறமை வேண்டும். மீண்டும் பதியுங்கள். All the best.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஹாய் இலா, மாலதி, தனிஷா!

அன்பிற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி....
பள்ளி மற்றும் கல்லூரி காலத்தில் கவிதைகள் எழுதியது. இப்போ வாழ்க்கையே அழகான கவிதை மாதிரி போகுது. அதனால, தனியா கவிதை எழுதுறதையே மறந்துட்டேன். இலாவோட வரிகள் ரொம்ப பிடிச்சிருந்தது. அத படிச்சதுமே மண்டைக்குள்ள மணி அடிச்சது.பதிவு செய்தேன். உங்களோட ஊக்கம் என்னை ரொம்ப உற்சாகப்படுத்துது.ரொம்ப ரொம்ப நன்றி.தொடர்ந்து எனது சிந்தனைகளை பதிவு செய்ய முயற்சிக்கிறேன்...
அப்புறம்.. தனிஷா! கொஞ்ச நாள் ஊருக்கு போயிட்டேன்... அதான் அறுசுவை ல ஆப்சென்ட்! எப்படி இருக்கீங்க?

சுமஜ்லா!
உங்கள் கவிதை அருமை... அழகான சந்தம் இருக்கு!!! ராகத்துடன் பாடுவதற்கு ஏற்ற வரிகள்!!! அத வாசிக்கும் போதே... எனக்கு தானா tune வருது!! உங்களுக்கு இசை ல ஆர்வம் உண்டா?
நட்புடன்,
சிஜா.
life is not wat u think! It is more than that!!!

கற்கள் சுவராகலாம்
தசைகள் ஆகலாமோ
கற்சுவர் தடையானால்
உடைத்தெறியலாமே
தசைச்சுவர் உடைக்க இயலா
உயிரின் சுவரல்லவா
முடிந்தவரை தசைச்சுவர்
முன்னேற்ற உதவட்டும்....

ஆகா!!! தனு!!! ரொம்ப நல்லா இருக்கு.. எல்லாரும் ஒவ்வொரு கோணத்தில் எழுதுறீங்க!!!
கடைசி 3 வரி நச்ச்ன்னு இருக்கு
"Miracles sometimes occur, but one has to work terribly hard for them."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

உங்களுக்கும் பதில் டைப் செய்த நியாபகம்... தமிழ் ஆங்கிலம் இரண்டிலுமே அருமையா கவிதை எழுதி இருக்கீங்க... மறுபடியும் சொல்றேன் உங்களுக்கு.. நாளைக்கு ஒரு படப்பாடல் என் கவிதை மாதிரி இருக்குன்னு சொல்லாதீங்க... அட்மின் கிட்ட சொல்லி நம்ம அருசுவை கவிதைகளுக்கு காப்பி ரைட் கேளுங்க!!! நான் இந்த வரிகளை ட்ரெயினில் மெயில் அடிக்கும்போதே எப்படியும் சுஹைனா எழுதிடுவாங்க என்ற நம்பிக்கையில்... வானம் பொய்த்தாலும் சுஹைனா பொய்க்க மாட்டார்கள்!!!!
You are this kavithai phenomenon waiting to happen

"Miracles sometimes occur, but one has to work terribly hard for them."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நன்றி இலா அவர்களே உங்களின் பாராட்டிற்கு,

எனக்கும் அந்த 3 வரி பிடித்தது
தோழி சிஜா,சுஹைனா வைப்போல அருமையான கவிதைகள் எனக்கு எழுதவராது.சுஹைனாவின் கவிதைகள் எல்லாமே நன்றாகயிருக்கிரது.

அழகா கவிதை எழுதுறீங்கப்பா..
எனக்கு தெரிஞ்ச ஒரு கவிதை சொல்லட்டா..
மகபேறுக்கு போனவளின் மரணத்தை எப்படிச்சொல்ல
குளியலறையின்..சுவர்களில்..
ஒட்டிக்கொண்டு காத்திருக்கும்
ஸ்டிக்கர் பொட்டுகளுக்கு...!!

மேலும் சில பதிவுகள்