பட்சிலம் குழந்தைகளின் ஆரோக்கியம்!

ஹாய் அருசுவை தோழிகளே!

இதில் பட்சிலம் குழந்தைக்களுக்கான கேள்விகளை கேட்கவும் பதில் பெறவும் பயன் படுத்திக்கலாம் பல திரட் தொடங்கி நாமும் அதற்க்கு பதில் கொடுத்து அதே கேள்விகளை புதிதாக யாராவது கேட்கும் போது அதே பதிலையே நமக்கு தர லேசாக சடைச்சல் வருகிறது

இதை தவிற்க்க அனைவரும் ஒரே திரட்டில் கேள்விகளை போட்டால் புதிதாக வருபவர்கள் பார்கவும் இல்லைனா அந்த லிங்கை நாம் கொடுக்கவும் ஈஸியாக இருக்குமே அதோட இப்ப நான் உட்பட பல கர்பிணிகள் இதில் இப்பொழுது இருக்கின்றோம் அவர்களும் கேள்விகளை எழுப்பலாம்...பதில்களையும் பெறலாம்..

இது எப்படி அசட்டுதனமாக இருந்தால் அடிசுடாதீங்கப்பா லேசா இரண்டு தட்டு வேணா தட்டிட்டு போங்க :-)

என்ரென்றும் சினேகிதத்துடன்,

உங்கள்
மர்ழியா!

ஹாய் அருசுவை தோழிகளே!

இதில் பட்சிலம் குழந்தைக்களுக்கான கேள்விகளை கேட்கவும் பதில் பெறவும் பயன் படுத்திக்கலாம் பல திரட் தொடங்கி நாமும் அதற்க்கு பதில் கொடுத்து அதே கேள்விகளை புதிதாக யாராவது கேட்கும் போது அதே பதிலையே நமக்கு தர லேசாக சடைச்சல் வருகிறது

இதை தவிற்க்க அனைவரும் ஒரே திரட்டில் கேள்விகளை போட்டால் புதிதாக வருபவர்கள் பார்கவும் இல்லைனா அந்த லிங்கை நாம் கொடுக்கவும் ஈஸியாக இருக்குமே அதோட இப்ப நான் உட்பட பல கர்பிணிகள் இதில் இப்பொழுது இருக்கின்றோம் அவர்களும் கேள்விகளை எழுப்பலாம்...பதில்களையும் பெறலாம்..

இது எப்படி அசட்டுதனமாக இருந்தால் அடிசுடாதீங்கப்பா லேசா இரண்டு தட்டு வேணா தட்டிட்டு போங்க :-)

என்ரென்றும் சினேகிதத்துடன்,

உங்கள்
மர்ழியா!

அன்புடன்,
மர்ழியா நூஹு

முதலில் நானே கேள்விகளை எழுப்புகின்ரேன்

என் பொண்ணிற்க்கு கிட்டத்தட்ட ஒன்னேகால் வயது வரை நைட் பால் கொடுக்கும் வழக்கம் இருந்தது விடியும் வரை டைம் பார்த்து பார்த்து கொடுத்து வந்தேன் ஒன்னேகால் வயதுக்கு பின்னெரே பாலுக்கு பதிலாக தண்ணீர் எனக் படிப்படியாக மாற்றினேன் தூக்கத்தோட பாலை கரைப்பேன் அது எனக்கு முதல் குழந்தை என்பதால் முடிஞ்சது இப்ப இவளையும் கவனிக்கனும் அதோட இரண்டாம் குழந்தையையும் கவனிக்கனும் அதற்ககு நைட் ஓரளவு தூங்கினால் மட்டுமே முடியும் சிலர் 2 , 3 மாசத்தில் குழந்தைக்கு லேட் நைட் பால் கொடுப்பது இல்லைன்னு சொல்லுறாங்க அப்படியே தூங்க விட்டுடுவாங்களாம்..விடியர்காலைதான் கொடுப்பாங்கலாம் அது எப்படி சாத்தியம் என எனக்கு தெரியல அதோட குழந்தை ஆரொக்கியத்து நல்லதா?எனவும் என்னுள் கேள்வி எழுகிறது தெரிஞ்சவங்க சொல்லுங்க..இன்னும் இது மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கட்டும்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்ழியா அருமையான திரெட் இது.எதுக்கு அடிக்கனும்?உங்களுக்கு அற்புதமான ரோஜா மலர்கள் நிறைந்த பொக்கே ஒன்றை மனதாரா தருகிறேன்.உங்கள் உடல்நிலை எப்படி உள்ளது?சுகமான சுமையை ஆனந்தமாக அனுபவியுங்கள்.எனக்கு அந்த நாள்களை நினைக்கும் போதே சிலிர்ப்பாக இருக்கு.மரியம் எப்படி இருக்கிறாள்?நீங்க சொல்வது போல் 2 குழந்தைகளை ஒன்றாக சமாளிப்ப்பது மிகவூம் சிரமம் தான்.

உங்க கேள்விக்கு எனக்கு பதில் தெரிய்யலை.பால் குடுக்காட்டி குழந்தைக்கு ரொம்ப பசிக்குமே?

என்னுடைய 3 மாத குழந்தைக்கு சளி பிடிச்சி கஷ்டப்படறா.தாய்பால் தவிர வேற எதுவும் குடுக்கலை.தண்ணீர் இன்னும் குடுக்க ஆரம்பிக்கலை.பனியால வந்திருக்கும்னு மருத்துவர் சொல்றார்.நான் வெளிய பனில போகவும் இல்லை.குழந்தையையும் பனில எடூத்துட்டு போகலை.ஆனா வந்துருச்சு.ஏதாவது வீட்டு வைத்தியம் செய்யலாமா? வெத்தலைல எண்ணெய் தடவி விளக்கில் காமித்து நெஞ்சில் போடுவது பற்றி ஒரு பதிவில் படித்தேன்.அதை சிறு குழந்தைக்கு செய்ய்யலாமா?வேறு என்ன செய்யலாம்?

அன்புடன்
திவ்யா அருண்

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

3 மாச குழந்தைக்கு ஒன்னுமே வேணாம்ப்பா கை மருந்து ஏதும் டிரை செய்யாதீங்கமா அந்த காலத்தில் இருந்த குழந்தைகள் வேற இப்ப இருக்கும் குழந்தைகள் வேற...தாய்பால் மட்டும் கொடுக்கின்ரேன் என்கின்றீர்கள் பனியிலும் எடுத்து செல்லல என்கின்றீர்கள் சோ தவறு உங்க மேல் இருக்கலாம்..அதை முதலில் கவனிங்க மேலும் டிட்டைலா எழுத முடியல கணவர் வந்து விட்டார் அவரை கவனிக்கனும் இன்னும் சாப்டல..பாவம் குழந்தை மூச்சு தினர கஸ்டபடும் சோ முதல்ல டாக்டரிடம் எடுத்து செல்லுங்கள்..மற்ற பதில்கள் நாளை போடுகிறேன் கை மருந்து என்றது பதறி போட வந்தேன்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மருத்துவரிடம் 2 நாள் முன்பே காட்டினேன் மர்ழி.அவர் டிராப்ஸ் குடுத்துருக்கார்.ஆனா சளி குறையவே இல்லை.சளி என் மூலமா வந்திருக்க வாய்ப்பில்லை.அண்ணா,அக்கா,அம்மா எல்லாருக்கும் 5 நாளா cold.ஆனா அவங்க அவளுக்கு வரக்கூடாதுனு பாப்பாகிட்ட வருவதோ, தூக்குவதோ இல்லை.நானும் காரமா,குளிர்ச்சியா எதுவும் சாப்பிடரதில்லை.அம்மா அதுல கண்டிப்பா இருப்பாங்க.தலைக்கு குளிக்கும் போது கூட நல்லா உடனே முடிய காய வைச்சிடுவேன்.தலை ஈரமா இருக்கு கூடாது,டிரஸ்ல கூட ஈரம் கூடாதுனு அம்மா சொல்வாங்க.மனசே சரியில்லைபா.கவனமா இருந்தும் இப்படி ஆயிருச்சு.இப்ப தான் 3 மாதம் முடிந்து 4 வது மாதம் ஆரம்பிச்சிருக்கு.மூச்சு விட சிரம்மா இருந்தா குடுக்க சொல்லி சலைன் டிராப்ஸ்ம் டாக்டர் குடுத்திருக்கார்.இப்பவே இப்படி மருந்து குடுக்க வேண்டி இருப்பது கஷ்டமா இருக்கு.மருந்து வேற கசக்கும் போல.5 டிராப்ஸ் குடிக்கறதுக்குள்ள முகத்தை அஷ்டக்கோணலாக்கி வாமிட் எடுக்கற மாதிரி இருமல் மருந்துக்கு மட்டும் பண்ணுவா.சளி மருந்த சமர்த்தா குடிச்சிடுவா.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

எப்படி இருக்கீங்க திவ்யா நேர்ரு என்னால் சரிவர பேச முடியலப்பா இவர் வந்ததும் சாப்ட போகிட்டேன்..குட்டி திவ்யா அழகா முகம்லாம் பார்கிறாளா சின்ன சிரிப்பு ஒன்னு வருமே அதுக்கு இணை ஏதும் இல்லை..எல்லாவர்றையும் போட்டோ,கேம் எடுத்துடுங்க பின்னாலில் பார்குறப்ப நமக்கே மெய் சிலிர்க்கும் நமக்கே இபப்டின்னா நம் குழந்தைகளிடம் காட்டுறப்ப அதை சொல்ல்வே வேணாம் இல்லையா?இன்று காலயும் நான் டாக்டரிடம் சென்று வந்தேன் திவ்யா (இவ என் அக்காவுடன் 15 நாள் முன்பு பீச் போய் இருந்தால் அப்ப மர்யம் சின்ன ராட்டினத்தில் ஏறுவேன்னு பயங்கர அடம் போட்டு இருக்கா என் அக்காவும் ஏற்றி விட்டு இருக்காங்க..அப்ப பை ந்னு கையை அசைத்தப்ப மற்றொரு இரும்பில் மாட்டி இருக்கு போல உடனே ஸ்டாப் செய்துட்டாங்கலாம்..கொஞ்ச நேரம் அழுதுட்டு ஸ்டாப் ஆனதாலும்,கையை அசைத்து பார்த்ததாலும் பயம் இல்லைன்னு என் அப்பா சொன்னதால் விட்டுட்டேன் ஆனா 5 நஆளாக வலிக்குதுன்னு சொன்னது பயமாகிட்டு டாக்டரிடம் சென்று காட்டினேன் இறைவன் புன்னியத்தால் எக்ஸ்ரே பார்த்து ஒன்னும் இல்லை கொஞ்ச வாரத்தில் சரியாகிடும்னு சொன்ன பின்னே எனக்கு நிம்மதி..

3 மாச குழந்தைக்கு மருந்து கொடுக்கவே கஸ்டமா இருக்கும் அதிலும் மூக்கில் டிராப்ஸ் விடுவதை,சின்ன மூக்கு ஒழுவதை சொல்லவே வேணாம் எல்லாமே நானும் அனுபவிச்சு இருக்கேன் முதல் அனுபவம் என்பதால் உங்களுக்கும் அபப்டி இருக்கு பயம் வேணாம் தரமான டாக்டரிடம் செல்லுங்கள் சிறு குழந்தைக்கு எந்த நோயுமே சரியாக லேட் ஆகும் இது சகஜமே!அது மூச்சு விட ரொம்ப கஸ்டபடும் அதனால் நைட் தூங்கும் டைம் மூக்கில் விடும் டிராப்ஸ் ஊற்றுங்கள் அப்பதான் நிம்மதியா தூங்கி முழிக்கும்...சாப்டவுடன் மருந்து கொடுக்காதீங்க பால் ஜீரமானதும் கொடுங்க இது வாமிட் வராமல் தடுக்கும் பொருமையா இருங்க சரியாகிடும்..நானும் வேண்டுகிரேன்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

நன்றி மர்ழி.உங்க பதிவு படித்து ஆறுதலா இருக்கு.ரொம்ப சின்ன குழந்தை அதோடு முதல் முறை என்பதால் கஷ்டமா இருக்கு.பாவம் குழந்தை.இப்ப கொஞ்சம் பரவாயில்லை.ஆமாம் அவங்க சிரிப்புக்கு எத்தனை கோடி கொடுத்தாலும் ஈடாகாது.அழகா சிரிக்கரா.என்னை நன்றாக அடையாளம் தெரியுது.இரவு என்னிடம் வந்து நெருங்கி படுத்துக்குவா.சிரித்துகிட்டே என் டிரஸ்ச பிடித்து இழுத்து விளையாடுவா.அம்மாவா இருப்பது எவ்வளவு அற்புதமான நிலை.போட்டோ,வீடியோ எல்லாம் எடுத்துகிட்டு தான் இருக்கேன்.உண்மை தான் மர்ழி.சில வருஷங்கள் கழித்து நமக்கே அவங்க வீடியோ பார்க்கும் போது பரவசமா இருக்கும்.அதுல அவங்க பெரியவங்க ஆனதும் பார்த்தா எவ்வளவு சந்தோஷப்படுவாங்க.நிச்சயம் இந்த பொன்னான தருணங்களை மிஸ் பண்ண கூடாதுபா.

மரியம் இப்ப எப்படி இருக்கா? வலி இருக்குதா? விளையாடுகிறாளா?

அன்புடன்
திவ்யா அருண்

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

பயம் இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டார் இருந்தாலும் பைன் 2, 3 வாரம் இருக்குமாம்...லிஸ்ட் எழுத்திட்டு இருக்கேன் குழந்தைக்கு தேவையான சாமான்களை வாங்க அடுத்த மாசம் வாங்கனும்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹலோ குழந்தைக்கு சளிப் பிடித்தால் ஒரு வெத்தலை & ஒரு சின்ன வெங்காயம் எடுத்து சாறு பிழிந்து கொடுத்தால் சளி சரியாகிவிடும்.

நீங்க சொல்லுவது சரிதான் வாமிட்டுடன் வெளிவர நிறைய சான்ஸ் இருக்கு இதில் இல்லையா?என் அம்மா சொல்லுவாங்க வெங்காயத்தோட வேறு சிலதையும் சேர்த்து கொடுக்க சொல்லுவாங்க

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்