உருளைக்கிழங்குல டவுட்பா!

தோழிகளே,ஒரு சின்ன டவுட்பா!இங்கு கார்ஃபார்,சஃபீர்,சொயிட்ராம் இப்படி எல்லா கடைகளிலும் இஞ்சி,உருளை (மோஸ்ட்லி)எப்ப வாங்கினாலும் முல(முடிச்சு)விட்ட மாதிரிதான் கிடைக்குதுப்பா.இஞ்சி கூட பரவாயில்லபா.ஆனா இந்த உருளைக்கிழங்குதான் பசங்களுக்கு ரொம்ப யூஸ் செய்றேன்பா.இது நல்லதா அல்லது அந்த மாதிரி உள்ள கிழங்கை வாங்காம இருப்பதே நல்லதா.சொல்லுங்க ப்ளீஸ்.
Pay attention to the small things-the kite flies because of its tail.

Pay attention to the small things-the kite flies because of its tail.

இது ஒரு மேட்டரே இல்லை. இதனால் எந்த பாதிப்பும் இல்லை. நான் வாங்குவதிலும் அப்படித்தான் இருக்கும். அதை கத்தியால் நீக்கி விட்டு நன்கு கழுவி விடுவேன்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

நான் 2 நாள் முன்பே உங்களது பதிவை பார்த்தேன்.ஆனால் அது மாதிரி உள்ளது நல்லதா என்று கேட்டிருந்தீர்கள்.இது சம்பந்தமாக நெட்டில் கூட தேடி பார்த்தேன்,சரி வர தகவல் கிடைக்கலை.என்னோட மனசில் பட்டது என்னன்னா,இருக்கிற இடத்தில் என்ன கிடைக்குதோ,அதை தானே நம் குழந்தைகளுக்கு நாம் கொடுத்தாக வேண்டும்.

வேறு வழியில்லை.இன்னும் கேட்டால் ஐஸ் மீனை சாப்பிட்டால் கேடு என்கிறார்கள்.ஆனால் காய்கறி,ஆட்டுகறி,கோழிகறி,மீன் முதல் கொண்டு எல்லாமே இந்த ஊரில் ஃப்ரிட்ஜில் வைத்து தான் சாப்பிட வேண்டும் என்பது நம் தலையெழுத்தாகி விட்டது.இந்தியாவில் என்றால் என் அம்மா அன்றாடம் ஃப்ரெஷ்ஷாக வாங்கி சமைப்பாங்க,இங்கு அப்படி முடியாதே.

அது போன்ற உருளைகிழங்கை எவ்வளவு சீக்கீரம் முடியுமோ அவ்வளவு சீக்கீரம் சமைத்து விடுங்கள்.

ஹாய் தனீஷா,உங்க குழந்தை சுகமா?14 புறப்படுறீங்க தானே?பத்திரமா போய்ட்டு சீக்கிரமா(2 மாதங்கள்)வரவும்.தாங்ஸ்பா. என் சந்தேகத்திற்கு பதில் அளித்தமைக்கு.
WE CANNOT DIRECT THE WIND.....BUT WE CAN ADJUST THE SAILS.

ஹாய் சுகன்யா,ரொம்ப நன்றிபா!!!!!!!! நானும் கிழங்கு பற்றிய தகவல்களை இணையதளத்தில் தேடினேன்.ஆனால் நான் எதிர்பார்த்த தகவல்களை தெரிஞ்சிக்க முடியலப்பா!!!!அதனால்தான் இந்த கேள்வியை எழுப்பினேன்.
என் ரெண்டாவது வாலுக்கு ஃபிரென்ஞ்ச் ஃபிரைஸ் (அதுமட்டும்தான்)பிடிக்குதுபா.ஃபிரோஸன் அவ்வளவா நல்லா இல்லைப்பா.அதனாலதான் மோஸ்ட்லி வீட்டிலேயே செய்து கொடுத்துடுறது.
உங்க பொண்ணு தேஜல் எப்படியிருக்காங்க?ஆக்டிவ்வா இருக்காங்கல்ல!!அகெய்யின் தாங்ஸ் யூ ஃபிரெண்ட்.
WE CANNOT DIRECT THE WIND......BUT WE CAN ADJUST THE SAILS.

இப்பலாம் மாலை நேரம் வருவதில்லை போலிருக்கு.இன்னும் தூங்காம அறுசுவை பார்வையிட வந்துட்டீங்களா!நான் தூங்க போறதுக்கு முன்னாடி ஒரு முறை பர்வையிட வந்தேன்.
ஏன்னா நீங்க இதே கேள்விய திரும்ப என்னை கேட்டா அதான் அட்வான்ஸா பதிலை முதலிலேயே பதிவு செஞ்சுட்டேன்.

ஆமாம்பா குழந்தைகளுக்கு நாம வீட்டில் செஞ்சு கொடுத்தா ஆசையா சாப்பிடுவாங்க!அதிலும் அவங்க அதை ரசிச்சு,ருசிச்சு!!அம்மா செஞ்சு கொடுத்தாங்களே!என்று சொல்லி கொண்டே சாப்பிடுவதை ரசிக்க ரொம்ப நல்லா இருக்கும்.தேஜல் நல்லா இருக்காப்பா.இதுக்கு போய் தேங்க்ஸா!!

ஹாய் சுகன்யா,தூங்கலையா?எனக்கு சந்தோஷமா இருக்குப்பா?நீங்களும் என்னை மாதிரி முழிச்சிட்டிருக்கீங்கனு நெனைச்சு.ஆத்துக்காரர் அப்ஸ்காண்டட்(பிளாண்ட் போயிருக்காங்க).
WE CANNOT DIRECT THE WIND.....BUT WE CAN ADJUST THE SAILS.

அவங்க ப்ளாண்டுக்கு போனதால் தானா,இந்த நேரத்தில் உங்கள் வருகை.நான் சும்மா வந்தேன்.இதுல ஒரு சந்தோஷமா!!!என்ன கொடுமை பாருங்க!!

ஓகே பா,அப்புறமா வரேன்.பை பை...

ஈவினிங் டைம் மோஸ்ட்லி டூ மச் கனெக்ஷன்னே டிஸ்ப்ளே ஆகுதுப்பா!பெரியவருக்கு எக்ஸாம் ஆரம்பிக்க போகுது.நான் ரொம்ப பிஸி(ஹார்லிக்ஸ் ஆட் மாதிரி சொல்லிக்க வேண்டியதுதான்).ஓகேபா! யூ மைட் பீ ஸ்லீப்பி பை தென்,ஸ்வீட் ட்ரீம்ஸ்.
WE CANNOT DIRECT THE WIND......BUT WE CAN ADJUST THE SAILS.

அருண்பாலா ,
உருளைக்கிழங்குத் தாவரத்தின் பச்சை நிறப் பகுதிகள் நச்சுத்தன்மை வாய்ந்தவை. முளையை அகற்றிவிட்டுப் பயன்படுத்துவது நல்லது.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்