இந்தியா (தமிழ்நாடு) செல்ல

அன்பின் தோழிகளே, நாங்கள் அடுத்த வருட ஆரம்பத்தில் இந்தியா (தமிழ்நாடு) செல்ல இருக்கிறோம். அங்கு எங்களுக்கு உறவுகள் இலை. ஒரு இரண்டு மாதம் தங்கலாம் என்று நினைக்கிறோம். அதனால்,
1. அங்கு 2 மாதங்களுக்கு வாடகைக்கு fully furnished வீடு எடுக்கலாமா? அப்படியாயின் கிட்டத்தட்ட எவ்வளவு மாத வாடகை வரும்? கடற்கரை இல்லாட்டாலும் வேறு நல்ல இடம் எது?
2. சென்னையில் கடற்கறை ஓரமாக சுத்தமான பாதுகாப்பான இடம் என்றால் எங்கே பார்க்கலாம்?
3. ஊட்டியில் / கொடைக்கானலில் வீடு பார்ப்பதென்றால் எங்கு பார்க்கலாம்?
4. இவ்வாறு வீடு வாடகைக்கு எடுப்பதற்கு யாராவது ஏஜென்ஸி உங்களுக்கு தெரியுமா?
5. 2 மாதங்களுக்கு டிரைவரோடு வான்/கார் ஒழுங்கு பண்ன முடியுமா? நம்பகமான ஏஜென்ஸி யராவது உங்களுக்கு தெரியுமா?
6. சென்னையில்/ ஊட்டியில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள், ஷாப்பிங் சென்டர்கள் எவை?

இன்னும் நிறைய கேள்விகள் உள்ளன...இப்போதைக்கு இவற்றிற்கு பதில் தாருங்கள்.
நன்றி,
-நர்மதா :)

நர்மதா

நலமா?...குழந்தை நலமா?

உங்கள் இந்தியா பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள், எனக்கு சென்னையில் வீடு எடுப்பது பற்றி தெரியாது, ஆனால் ஊட்டி பற்றி கொஞ்சம் தெரியும், என் அம்மா , அப்பா அங்கு தான் இருக்கீறார்கள் நீங்கள் ஜனவரியில் செல்வதால் ஊட்டியில் கொஞ்சம் குளிர் இருக்கும்,உங்களுக்கு ஊட்டி அருகில் இருக்கும் பகுதியை சுற்றி பார்க்க ஒரு வாரம் அல்லது 10 நாள் இருந்தால் போதும்,அதற்க்கு வீடு எடுக்க தேவையில்லை நல்ல தங்கும் விடுதிகள் இருக்கிறது, ஜனவரி என்பதால் உங்கலுக்கு எளிதாக கிடைக்கும்,பார்க்க வேண்டிய இடம் படகு இல்லம்,பூங்கா,சிறுவர் பூங்கா, அப்புறம், 6th mail, 7th mail,பைய்காரா,பைய்காரா படகு இல்லம் மேலும் ஊட்டி பற்றி என்ன வேண்டுமானாலும் கேளுங்கள், எனக்கு தெரிந்ததை சொல்லுகிரேன்

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

சென்னையில் சர்விஸ் அபார்ட்மெண்ட்ஸ் கிடைப்பதாக கேள்விப் பட்டேன். விசாரியுங்கள்.

அன்புடன்

சீதாலஷ்மி

சென்னையில் ஃபுல்லி பர்னிஷ் வீடு கிடைக்கிறது. மாத வாடகை 20 ஆயிரம் என்று நினைக்கிறேன். போன் கனைக்ஷன் கூட இருக்கும். சென்னையில் பார்க்க வேண்டிய இடம் நிறைய இருக்கு நர்மதா

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

வெல்கம் டு இந்தியா. சென்னைடாட்காமில் போய் பாருங்க நிறய்ய இன்பர்மேஷன் கிடைக்கும், சென்னைபெஸ்ட் அதிலும் போய் பாருங்க.சுலேக.காமிலும் இருக்கு, இந்தியாவில் ஊட்டியில் நிறய்ய ரிசாட்ஸ் இருக்கு வாடகைக்கு கிடைக்கும், சென்னையிலும் திருவான்மியுரில் எல்லாம் நிறய்ய ரிசாட்ஸ்கள் கிடைக்கிறது நான் உங்களுக்கு திங்களன்று டிடெய்ல்ஸ் குடுக்கிறேன்.
நம்ம அட்மினி கூட ஊட்டியில் இருப்பதாம் இன்று அருசுவையில் பார்த்தேன் நம்ம அட்மினும் நிறய்ய விபரங்கள் தருவார்கள், சீதாலஷ்மி மேடம், ஜெயந்தி மேடம், மர்ழியா, சாதிகா அக்கா இவங்க எல்லாம் வந்து மேலும் சொல்வார்கள்.

அன்பின் ஹாஷினி, தகவலுக்கு மிகவும் நன்றி. 2 மாதங்களுக்கு அங்கு தன்குவதுதான் நோக்கம். எனது பெற்றோர்களும் வருவார்கள். அவர்களுடன் இருப்பதற்காகதான் போகிறேன். சுற்றிப் பார்ப்பது, ஷாப்பிங் இரண்டாம் பட்சம்தான். :) இன்னும் எங்கே என்று முடிவெடுக்கவில்லை. ஸ்பிரிங்கில்தான் செல்ல நினைக்கிறோம்.

அன்பின் சீதா மேடம், தனிஷா தகவலுக்கு மிகவும் நன்றி.

அன்பின் விஜி, தகவலுக்கு நன்றி. சென்னை டொட் கொம் இணைபிலில்லை. தள வேல நடக்குது போல. சென்னை பெஸ்ட் பார்கிறேன். திங்கள் உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன். செல்வி அக்காவும் சொல்வதாக சொன்னா. பார்க்கலாம்.

நேற்றே எல்லாருடைய பதிலும் பார்த்தேன். பதில் போட முடியவில்லை. (ஒரு கை டைப்பிங் இன்னும் பழகவில்லை) மன்னிக்கவும்.
நன்றி.
-நர்மதா :)

சந்தோஷமா இருக்கு.இந்தியா போய் வாங்க பத்திரமா.சென்னையை பற்றி எனக்கு தெரியவில்லை...ஊட்டியிலும் கூட போகிறீர்கலென்றால் அங்கு அருகிலுள்ள கோத்தகிரி பகுதிகளில் உள்ப்ரதேசங்கள் மிகவும் அழகாக இருக்கும்.ஆனால் நல்ல இடம் தெரிந்த ட்ரைவெராக இருக்க வேண்டும்.
ஊட்டி செல்லும் வழியில் மேட்டுப்பாளயம் ப்லேக் தன்டெர் தீம் பார்கில் சென்று ஒரு ஆட்டம் போட்டுவிட்டு ஊட்டி செல்லலாம்...
என்னைக் கேட்டால் ஊட்டி என்று மட்டும் 2 மாதம் தங்காதீர்கள்...ஊட்டியில் பார்க்க ஒரு 10 நாளே அதிகம் தான்..அந்த குளிர்ப்ப்ரதேசம் தான் உங்க விருப்பம் என்றால் சரி.ஆனால் விடுமுறை முடியும் 3 நாளுக்கு முன்பே பாக் பன்னி விடுங்கள் மலைப்ப்ரதேசம் என்பதால் அவ்வப்பொழுது சாலைபோக்குவரத்து தடசம் ஏற்படலாம்.
ஊட்டி செல்லும் வழியில் மேட்டுப்பாளயம்/கல்லார் உண்டு,,.பெரிசாக எதுவும் இல்லையென்றாலும் கொஞ்சம் நல்லாவே இருக்கும் கல்லார் தோட்டத்தை(ஒரு 15 வருடங்களுக்கு முன்னால் கல்லார் மிகவும் அருமையாக இருக்கும்.ஆற்றோரத்தில் சுவர் கட்டப்பட்டிருக்கும் அதில் உட்கார்ந்து கொண்டு கால் நனைய தட்டையான கல்லை கீழ் சாய்த்து எறிய தண்ணீரில் கல் புள்ளிமானைப் போல துள்ளி துள்ளி ஓடும் ஒரு நாள் முழுக்க ரசிக்கலாம் அவ்வளவு அருமை.இன்று தண்ணீரினுள் குடிப்பயல்கள் பாட்டில்களை அங்கங்கே உடைத்து போட்டு நாசமாக்கியாச்சு.)
சுற்றி வாருங்கள்...ஃப்ரெஷ் பழ எசென்ஸ்கள் கிடைக்கும்.
எங்கட ஊருக்கு சென்று வர முடிந்தால் போய் வாருங்கள்:-D..கேரளாவில் ஆலப்புழா போட் ஹவுஸ் மிக அருமையாக இருக்குமாம் இம்முறை கட்டாயம் போய் விட வேண்டும் என நினைத்து செல்ல முடியவில்லை.படகு தான் வீடு அதில் தினக் கூலி கொடுத்து உல்லாச யாத்திரை செல்லலாம்.
ஆனால் இங்கு வரும் மொத்த பதிவுகளையும் கன்ட பின் எங்கு என்பதை முதலிலேயெ ப்லான் போட்டு விடுங்கள்..சிறு பிள்ளை உண்டே கண்டபடி ஊர் சுற்ற முடியாதே நினைத்த இடத்துக்கு
நம்பகமான ஏஜென்சீஸ் நிறைய உண்டு தமிழ்நாட்டில்..எங்களது ட்ரைவரும் ஏஜென்சியை சேர்ந்தவர் தான் ஆனால் அவருடைய ஒழுங்கும் மரியாதையும் கண்டு ஒவ்வொரு முறையும் எங்கு செல்ல வேண்டுமெனெறாலும் அவரை தான் அழைப்போம்..முடிந்தால் ஏஜென்சி நம்பர் வாங்கி தருகிறேன்.
முதுமலை நல்லா இருக்குமாமே அதனைப் பற்றி யாராவது சொல்ல முடியுமா?
சந்தோஷமா ஊர் போய் வாருங்கள்..முடிந்தால் எனக்கொரு டிக்கெடும் கூட ஒரு அரை டிக்கெட்டும் போடுங்கள் நானும் வருகிறேன்

தனியாகவோ அல்லது துணைக்கு யாரேனும் பெண்களுடனோ சென்னை சென்றால் நல்ல ஹாஸ்டல் இருக்கிறது தங்க. கீழே உள்ள லிங்க்கைப் பார்க்கவும். பெண்கள் தங்க நல்ல வசதியான ஹாஸ்டல் இது. சாப்பாடும் நன்றாக இருக்கும். குடும்பமாகச் சென்றால் www.makemytrip.com என்ற வலைத்தளம் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் பட்ஜெட்டுக்குத் தகுந்த மாதிரி நீங்கள் திட்டம் போட்டுக்கொள்ளலாம். அவர்களே கார், டிரைவர் வசதிகளைச் செய்து தருகிறார்கள்.

http://andhramahilasabha.org.in/Working_Women.htm

அன்பின் தளிகா, நீண்ட தகவலுக்கு மிகவும் நன்றி.:) எனக்கு ஊர் சுற்றி பார்ப்பது இரண்டாம் படசம்தான். எனது பெற்றார்களும் வருவார்கள் அவர்களுடன் நேரம் செலவிடுவதுதான் முக்கியம். அப்பாவிற்கும் அதிகம் அலைய முடியாது எனவே மிக மிக முக்கியமான பார்க்க வேண்டிய இடங்களுக்குதான் செல்ல நினைக்கிறோம். அதுதான் ஊட்டியில் அல்லது கொடைக்கானலில் என்றாலும் தங்கலாம் என்று நினைத்தோம். பொல்யூஷனும் குறைவாக இருக்கும் என்று. கேரளாவும் எனக்கு பிடிக்கும் நிறைய போட்டோக்கள் பார்த்திருக்கிறேன். இலங்கையை போல இருக்கும் எண்டு கேள்விப்பட்டு இருக்கிறேன். நான் போன தடவை சென்னை சென்ற போது என்னுடைய தமிழை பார்த்து பலர் என்னை கேரளாவா என்று கேட்டார்கள். சிலர் சிலோனா என்று கேட்டார்கள். பார்க்கலாம். முடிந்தால் போகிறேன்.
நான் அந்த கடைசி இரண்டு வரியும் படிக்கவில்லை தளிகா. என்னுடைய அரைக்கால் டிக்கட் விடவில்லை :)
-நர்மதா :)
PS: முடிந்தால் அந்த டிரைவரின் ஏஜென்சி எண்ணை வாங்கி தாருங்கள். முயற்சிக்கிறோம். எனது கணவரின் நண்பர்களின் பெற்றோர்களும் அங்கு இருக்கின்றனர். அவர்களையும் கேட்டு பார்க்கிறோம்.

அன்பின் மனோ மேம், தகவலுக்கு மிகவும் நன்றி. நாங்கள் குடும்பமாகதான் செல்கிறோம். எனவே மகளிர் விடுதி சரிப்படாது. நீங்கள் தந்த இணைய தளத்தை பார்க்கிறேன். நன்றி.
-நர்மதா :)

நானும் அடுத்த வருசம் மார்ச்ல இந்தியா போறதுக்கு பிளான் பண்ணியிருக்கிறன்.எனக்கு அண்ணா தமிழ்நாட்டில் இருக்கிற படியால் அம்மா,அப்பா கொழும்பிலிருந்து வருவாங்க.நானும் மகளைக்கொண்டு போய் காட்டிட்டு இரண்டு மாதம் இருந்திட்டு வரப்போரன்.

மேலும் சில பதிவுகள்