கணக்கு,விடுகதை,புதிர் கேட்கலாம் வாங்க பாகம்-7

தோழிகளே,அந்த த்ரெட் வழிஞ்சு பதிவா ஓடுது,அதான் புதுசு.வாங்கப்பா விடுகதை கேளுங்க,புதிரை சொல்லுங்க,எல்லாரும் வாங்க,இருக்கிற அறிவை இன்னும் அதிகமா வளர்த்துக்கவும்,நிறைய தெரிந்து கொள்ளவும்,முக்கியமா மூளைக்கு வேலை கொடுக்கவும் இந்த த்ரெட்டுக்கு வாங்க,கேளுங்க,தெரிஞ்சா பதிலும் சொல்லுங்க!!!

நூல் இல்லை, ஊசி உண்டு வாயில்லை,பாட்டுப்பாடும்
அது என்ன?

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

இசைத் தட்டு

அன்புடன்

சீதாலஷ்மி

தூரத்திலிருந்து பார்த்தால் கருப்பு;பக்கத்தில் போய் பார்த்தால் பழுப்பு;கையில் எடுத்து பார்த்தால் சிகப்பு,வாயில் போட்டால் இனிப்பு,அது என்ன?

Eat healthy

சதாலட்சுமி
மாதுலைபழம்

சதாலட்சுமி

மாதுளை இல்லை..........உங்களுக்கு மாதுளையை தூரத்திலிருந்து பார்த்தால் கருப்பாகவா தெரியும்?

Eat healthy

சீதாலக்சுமி உங்கள் விடை தவறு, ஆனால் கிட்ட நெருங்கிவிட்டீர்கள்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

தூரத்தில் பார்த்தால் கறுப்பு, பக்கத்தில் போய் பார்த்தால் பழுப்பு, கையில் எடுத்து பார்த்தால் சிகப்பு,வாயில் போட்டால் இனிப்பு பேரீச்சம்பழம்.விடை சரியா?

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

விடை தவறு,பேரீச்சைபழத்தை கையில் எடுத்து பார்த்தாலும் கருப்பாகத்தான் தெரியும்!சரியான விடை சொல்லுங்கள்.

Eat healthy

பனங்காய் என்பது சரியாப்பா

நீங்கள் பனம்பழம் என்று சொல்லியிருந்தால் கூட தவறுப்பா!

Eat healthy

மேலும் சில பதிவுகள்