அரட்டைய இங்கு ஆரம்பிங்கப்பா பாகம் 27

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..

பழைய பதிப்பு 100 ஐ தாண்டி விட்டது அதனால் பாகம் 27யில் அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்..சந்தோசமா பேசுங்க இதில்... இதில் மட்டும்தானே சின்ன பிள்ளையாட்டம் சண்டை போட விளையாட,ஜாலியா பேச முடியும் வாங்கப்பா வாங்க்கா எல்லோரும் வந்து மனம் விட்டு சிரித்து பேசிட்டு போங்க. மேனு உங்கள் ஆசை நிறைவேற உங்க பேரையே போட்டுட்டேன். அதனால் கோவிக்காம இதில் கண்டினியூ பண்ணுங்க சரியா. எனக்கு ஓபன் பண்ணுவதற்குள் ரொம்ப நேரம் ஆகுது. எனக்கு இன்னைக்கு நெட் ரொம்ப ஸ்லோவா இருக்கு

உங்கள் சினேகிதி,
மேனகா

என்ன இவ்ளோ சீக்கிரமா அரட்டய ஆரம்பிச்சாசா. சார் ஆபிஸ் கிளம்பியாச்சோ.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஆமாம்பா,இன்னிக்கு காலையில் 5 மணிக்கு முழிப்பு வந்துடுச்சு.சரி பிசியை ஆன் பண்ணி அறுசுவைக்குள் நுழைஞ்சா,நம்ம மீனா பதிவு போட்டிருந்தாங்க.அப்படியே அவங்களை கலாய்ச்சிட்டு சந்தோவை விசாரிச்சுட்டு இங்க வந்து பதிவு போட்டுகிட்டு இருக்கேன்.

பர்சேஸ்லாம் முடிஞ்சுடுச்சாபா.எந்த எர்லைன்ஸ் புக் பண்ணியிருக்கீங்கப்பா.விருப்பமிருந்தா சொல்லுங்க?

அதென்ன விருப்பம் இருந்தா கட்டாயம் சொல்றேன். எத்திஹாட் ஏர்லனைஸ்ப்பா. எல்லா பர்சேசும் முடிந்து விட்டது. இன்னும் 4 நாள்தான் இருக்கு. ஒருபக்கம் சந்தோஷம் இன்னோரு பக்கம் பயம் இப்படியே போயிட்டுருக்கு. என்ன சுகன் நேத்து மர்லி யாரெல்லாம் பாட்டினு கொடுத்திருந்தாங்களே அதெல்லாம் உண்மையா? :)

இன்னைக்கு என்ன ஸ்பெஷல். தேஜு தூங்கிட்டு இருக்கா. அப்ரா எந்திரிச்சுட்டா. மடியில் வச்சிட்டு டைப் பண்ணினேன்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

அந்த பாட்டி விஷயம் மர்ழியாவுக்கு மட்டுமே வெளிச்சம்பா.ஏன்னா அவங்க சில பல பேரை நேரில் பார்த்திருக்காங்க,பேசியிருக்காங்க(ஃபோனில்).என்னிடம் அறுசுவையில் மட்டுமே உரையாடியதால் நான் மட்டும் மறுத்து பதிவு போட்டிருந்தேன்.உண்மையில் சில பேர் அவங்க சொன்ன மதிரி இருந்திக்கலாம்,இல்லாமலும் இருக்கலாம்.இதை நீங்க அவங்ககிட்ட டீடெயிலா கேட்டு பாருங்க!பல உண்மைகள் வெளிவர சான்ஸ் இருக்கு.

28 தான் சென்னை வரீங்கன்னு சொன்னீங்க!4 நாளில் ஃபிளைட்டுன்னு இப்ப சொல்றீங்க.உங்க ஊருக்கு போயிட்டு சென்னை வரீங்களா?

தேஜல் தூங்கிட்டு தான் இருக்காள்.அப்ரா அம்மவை டைப் பண்ண விடு!டிஸ்டர்ப் பண்ணாதீங்க!ஓகேவா happy journey apra and thanisha(advance வாழ்த்துக்கள்0

எனக்கு திருநெல்வேலி. அதனால் நாங்கள் திருவனந்தபுரம் ஏர்போர்ட் போய் அங்கிருந்து ஊருக்கு போயிருவோம். சென்னையில் நாத்தனார் இருக்கா. அவள பார்க்க போவோம். அவள் ஊருக்கு வந்திருக்காலாம் :-( . இல்லைனா 22 சென்னை போயிருப்பேன். சென்னையில் அக்கா வீடு இருக்கு அங்கு போயிட்டு கெட் டூ கெதெரில் கலந்துக்கலாம்னு இருக்கேன். கெட் டூ கெதர் பற்றி ஒன்றும் தெரியல.

என்ன சுகன் ஹேமாபத்தி காணவில்லை அறிக்கையில் சொன்ன மாதிரி சொல்லிட்டு வந்துருக்கீங்க.

மேடம்ல்லாம் வேணாம்..உங்களை விட 4 வயது மூத்தவள் மர்ழியான்னே கூப்பிடுங்கோ க்வியை கொள்ளுபாட்டினும்,சுகன்யாவை பெரிமான்னும்ம்..மேனுவை மாமின்னும் கூப்பிடுங்க ஹா ஹா மர்ழி ஓடிக்கோ

சுகன் இதை இப்பவும் படிச்சு சிரிச்சிட்டு வரேன். இன்னும் கவி பார்க்கலைனு நினைக்கிறேன். கவி சீக்கிரம் வாங்கோ. சாம தூங்கவச்சிட்டு. உங்களை மரிலி பொண்ணு உங்களை கொள்ளு பாட்டினு ...ஹா ஹா சொல்லியிருக்காங்க

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

என்னப்பா உங்களை ரொம்ப நாளா காணோம். எப்பவாவது ஒரு விசிட். அதோட ஓடிபோயிடுறீங்க. சுகன் எங்கே போனீங்க

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ரெடி ஆகிட்டங்க போல தெரியுது. எதுக்கு பா பயம். சந்தோஷமா வாங்க அப்ரா எப்படி இருக்காங்க? happy journey thani.

அப்படி தான் நினைக்கிறேன்.சும்மாவே கவிக்கு(எஸ் சேர்க்கலைன்னா அதுக்கு வேற reminder பதிவு போடுவாங்க)கோபம் வரும்.இதுல பார்த்தீங்கன்னா உங்களுக்கு ஒன்னு புரியும்.மர்ழிய பதிவுக்கும்,கவி பதிவுக்கும் 2 நிமிஷம் தான் வித்தியாசம்.ஒருவேளை பார்க்காமலும் இருந்திருக்கலாம்.இல்ல பார்த்துட்டு இது சப்பை மேட்டர்னு,வாபஸ் வாங்கலைன்னா மரியம்க்கிட்டே கேக் மேட்டரை சொல்லிடுவேன்னு பிளாக்மெயில் பண்ணிருக்காங்களோ என்னவோ!!

இல்ல தனிஷா,ஹேமாவின் வருகை பற்றி டிப்ஸ் கொடுத்திருக்கேன்.அவங்க காணாம போனவர்கள் பற்றிய அறிவிப்பில் சொல்லனும்னா அதுக்கு வேற டிப்ஸ்பா!!இது அவங்க தானா என்பதற்க்கு நான் கொடுத்த சிறு ஐடியா!!

ஹை அப்போ மறக்காம திருநெல்வேலி இருட்டுகடை அல்வா,வரும் போது வாங்கிட்டு வாங்கோ,அப்படியே அறுசுவை தோழிகளுக்கு ஆளுக்கு ஒரு பார்சல்

என்னப்பா விடுகதைக்கு பதில் சொல்ற மாதிரி வந்துட்டு திடீர்னு absent ஆகிடுறீங்க.நலமா தோழி?

ஹாய் தனிஷா எங்கேயும் போகலைப்பா!இங்க தான் இருக்கேன்.போன பதிவை யோசிச்சு எழுதினேனா அதான் கொஞ்சம் லேட்டா பதிவாகிடுச்சு

நலமா? ஆப்செண்ட் எல்லாம் ஆகல பா. பிசி ப்ராப்ளம் அதான். சுகன் அதான் நினைச்சேன் நம்ம எல்லாருக்கும் திருநெல்வேலி அல்வா கிடைக்கும் நம்ம தனி நம்மளுக்காக வாங்கிட்டு வரமாட்டாங்களா என்ன? என்ன தனி?

மேலும் சில பதிவுகள்