கேரட் பொரியல்

தேவையான பொருட்கள்

கேரட் - 1/4 கிலோ
பச்சை மிளகாய் - 1
பெரிய வெங்காயம் - 1
தேங்காய் துருவல் - தேவையான அளவு
கடுகு - சிறிதளவு
உளுத்தம்பருப்பு - சிறிதளவு
கடலைப்பருப்பு - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
சர்க்கரை - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. கேரட்டை தோல் நீக்கி சுத்தம் செய்து துருவிக் கொள்ளவும். தேங்காயை தனியே துருவிக் கொள்ளவும்.

2. பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்துக் கொள்ளவும்.

4. பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

5. அடுத்து துருவிய கேரட்டை சேர்த்து லேசாக வதக்கவும்.

6. அதில் உப்பு, சர்க்கரை சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து முடிவைத்து மிதமான தீயில் வேகவிடவும்.

7. கேரட் வெந்ததும், தேங்காய் துருவல், கொத்தமல்லித்தழை சேர்த்து லேசாக கிளறி விட்டு இறக்கி வைக்கவும்.

மேலும் சில பதிவுகள்