Trying to conceive

வணக்கம்,
என் பெயர் ஜெயா.எங்களுக்கு திருமணமாகி(june,2005) 3 வருடம் முடிந்து விட்டது, இன்னும் குழந்தை இல்லை. 2006,septemberல் missed abortion ஆகி விட்டது.அதன் பின் இன்னும் குழந்தை இல்லை.பைத்தியம் பிடித்தவள் போல் ஆகி விட்டேன்.எனக்கு வழி சொல்லுங்கள் please.

நீங்கள் தனியாக வருந்தவில்லை..இன்னும் எத்தனையோ பேர் குழந்தைக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் காலகட்டம் தான் இது..இதற்கு அருமருந்து சந்தோஷமும் நம்பிக்கையும் தான்.
உடல் சம்மந்தமான ப்ரச்சனை உண்டா என்று அறிந்து வாருங்கள்.இர்ன்றால் ஹோமொயோவுக்கு போய் ட்ரீட்மென்ட் எடுத்து கொள்ளுங்கள்.
கனவரைடம் இதுபற்றி அழ்து புலம்பாதீர்கள்...மனதிற்குள் ரொம்ப வருத்தம் இருக்கும் ஆனால் ஆண்க்ளிடம் வெளியே காண்பிக்காமல் இருப்பது நலம்..அவர்களுக்கு அது ஒரு வித அழுத்தத்தை ஏறடுத்தும் பிறகு தாம்பத்தியம் என்பது பிள்ளை உண்டாக என்பது போன்ற ஒரு வகை மனநிலைக்கு வந்துவிடுவார்கள்..பிறகு அதனை குணப்படுத்த நடக்க வேண்டி வரும்..இது நான் உங்களிடம் சொன்னதல்ல பொதுவாக சொன்னேன்..சமீபகாலமாக கேட்டு வரும் ப்ரச்சனை.
ஒன்னும் வருத்தப்படாதீர்கள் ஜெயா இதையே யோசிக்காமல் எங்காவது சென்று வாருங்கள்..எப்படியெல்லாம் சந்தோஷமாக இருக்க முடியுமோ அப்படி இருங்க.
20 வருஷம் கழித்து இரட்டை குழந்தைகள் பிறந்த ஒரு தம்பதிகளை போன வாரம் தான் சந்தித்தேன்..எத்தனையோ பேர் 5 வருடம் 10 வருடத்திற்க் பிறகு கூட குழந்தையுண்டாகியிருக்கிறார்கள்..உங்களுக்கு 3 வருடம் தானே எல்லாம் நல்லபடி நடக்கும்

அன்புள்ள ஜெயா எப்படி இருகிஙாக? நீங்க மிகவும் மன்ம் நொந்து உள்ளீர்கல் என்று தெரிகிரது முதலில் நீங்க உஙலின் மனதை தெலிவொடு வைத்துக் கொல்லுஙள் ப்ளிஸ்.உஙலுக்கு கடவுள் ந்ம்பிக்கை இருகுமெயானால் கடவுளை நினையுங்க்ள்.வணங்குங்கள்

கன்டிப்பாக் நல்லதே ந்டக்கும். நீஙகள் மைன்டை ரிலக்சாக வைதுக்கல்ளுஙள். உஙலுக்ககவும் நான் ப்ரத்திக்கிறேன்,

விருப்பம் இருந்தால் உஙள் ஐடி கொடுஙகள் நீஙக்ள் சென்னையில் உள்ளிர்களா?

அன்புதோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

வருத்தப்பட வேண்டாம் தளிகா சொல்வது ரொம்ப சரி. மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்க. எனக்கும் 2005-ல் தான் திருமணம் நடந்தது. உங்களைப் போன்று மனநிலையில்தான் இருந்தேன். ஆனால் 1 வருடத்திற்கு உள்ளேயே ட்ரீட்மெண்ட் தொடங்கி விட்டேன். பாலி சிஸ்டிக் ஓவரி என்று 1 வருடத்தில் கன்சீவ் ஆனேன். இப்போ 1 வயதில் மகள். நாம் மனதை தேற்றினாலும் சுற்றி இருப்பவர்கள் வார்த்தை நம்மை நம்பிக்கையை தூளாக்கும் மனம் தளர வேண்டாம். என் அக்காவிற்கு 12 கழித்துதான் பெண்குழந்தை பிறந்தது. தளிகா சொல்வது கணவரிடம் இதை பற்றி எப்போதும் பேசி கொண்டிருந்தால் அவங்களுக்கு தாம்பத்தியம் என்பது பிள்ளை உண்டாக என்பது போன்ற ஒரு வகை மனநிலைக்கு வந்துவிடுவார்கள். விரைவில் நல்ல செய்தியை எங்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள். be happy

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஹாய் ஜெயசங்கரி,வணக்கம்.திருமணமாகி 3 வருஷங்கள் தானேபா!ஒரு சிலருக்கு நிறைய(10 ,12) வருஷங்கள் கழித்தும் குழந்தை பிறந்திருக்குபா!உங்க மன நிலை புரியுதுப்பா!ஃபர்ஸ்ட் உங்க மனசை டைவர்ட் பண்ணிக்கோங்க(உங்களுக்கு பிடித்த விஷயங்களில்)உறவினர்கள்தான் உங்களை ரொம்ப காயப்படுத்துவாங்க,அதை கண்டுக்ககவே கண்டுக்காதீங்க.பின்னர் தளிகா சிஸ் சொன்னது போல் உங்க குழப்பமான மன நிலையை உங்களின் கணவரிடம் முடிந்தவரை வெளிப்படுத்தாமல் இருந்தால் நல்லதுபா.எப்பயும் சந்தோஷமாக இருங்க.
பாருங்க!!!! உங்கள் பதிவை பார்த்ததும் உங்கள் மனநிலையை மாற்றும் வண்ணம் கடகடனு (நாங்க உங்களோட அறிமுகமே இல்லாத தோழிகள் )வந்துட்டோம் பார்த்திங்களா!!
தனீஷா சொன்னது போல் தேர்ச்சி பெற்ற மருத்துவரை போய் பாருங்க. என் தம்பி வைஃப்புக்கும் 4 வருஷங்கள் கழித்து இப்பதான் குழந்தை பிறக்கபோகுதுபா(டிசம்பர் 15 டியூ டேட்பா).
பாருங்க! பாருங்க! அடுத்த வருஷம் உங்க வீட்டில குட்டி பாப்பா வந்திருவாங்க பாருங்க.!!!அதுக்கு எங்க அனைவரின் பிரார்த்தனையும்,கடவுளின் அனுக்கிரகமும் உங்களுக்கு கண்டிப்பா இருக்கும்பா!!
A positive attitude is like a magnet for positive results.

இத்தனை பேர் ஆறுதல் சொன்னதுக்கு ரொம்ப நன்றி. மன மாற்றத்திற்க்கு ஆலோசனைகள் please.any mind relaxing songs.

thanks in advance

சுவாமி ஸ்லோகங்கள் எந்த வெப் சைட்டில் கிடைக்கும்.

thanks in advance

சுவாமி ஸ்லோகங்கள்Prapatti.com[slokas}stotras என்ட்ர வெப்சைட்டில் போய் பார்க்கவும்.மெலும் பாதுகா சஹஸ்ரத்தில் உள்ள் முக்தா பத்ததியை நம்பிக்கையுடன் படித்துவரவும். கை மேல் பலன் நிச்ச்.யம்

ஜெயா உங்கள் டாக்டரிடம் இடம் போலிக் அசிட் வீதத்தை கூட்டித்தரும்படி கேட்டுப்பாருங்கள்.10மில்லிகிராம்[5mgகாலை 5mgமாலை] போலிக் அசிட் சிலவேளை உங்களுக்கு கைகொடுக்கலாம் அதன் பெயர் preg - vit folic5 வேறு என்ன மாத்திரை எடுத்துக்கொண்டிருந்த்தாலும் 4 மணி இடைவெளி விட்டு அதனுடன் இந்த மாத்திரையும் எடுக்கலாம். 1மி.கி என்றால் நீங்களாகவே வாங்கிக்கொள்ளலாம்.இது டாக்டர் எழுதித்தர வேண்டும்.உங்களுக்கு ஒழுங்கான பீரியட்டா? முதலில் கவலைப்படுவதை நிறுத்துங்கள்.அதுவே இந்த் விடயத்தில் பாதி பரிகாரம் செய்துவிடும்.மனதுக்கு அமைதி தரும் பொழுது போக்குகளை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.நானும் உங்களுக்காக பிரார்த்திக்கிறேன்.

வணக்கம் ஜெயா நான் இப்போது தான் பார்தேன் .தோழிகள் சொன்னமாதிரி எப்பவும் சந்தோஷமா இருங்க.நான் 2002 திருமணம் செய்தேன் இப்போது தான் 2 மாதம் கர்பமா இருக்ரேன்.இது தான் எனக்கு முதல் குழந்தை.ரொம்ப கஷ்ரப்பட்டு தான் கிடசிருக்கு.பேபி கையில வந்தால் தான் நிம்மதியா இருக்கும்.நான் டொக்ரர் கமலா செல்வராஜ் இடம் தான் போனேன். எதற்கும் நம்பிகை வேணும் தோழி.மனச தளர விடவேண்டாம்.உங்களா விட நிரய பேர் 15,20 வருசதிட்கு அப்புரம் குழந்தை கிடச்சிருக்கு.கடவுள் துணை இருப்பார்

மேலும் சில பதிவுகள்