கத்தரிக்காய் கார குழம்பு

தேதி: November 10, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

1. கத்திரிக்காய் - 4 (நறுக்கியது)
2. கடுகு - 1/4 தேக்கரண்டி
3. சீரகம் - 1/4 தேக்கரண்டி
4. உளுந்து - 1/4 தேக்கரண்டி
5. கடலை பருப்பு - 1/4 தேக்கரண்டி
6. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
7. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
8. மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
9. உப்பு - தேவைக்கு
10. வெங்காயம் - 1/2 (a) சின்ன வெங்காயம் - 15 (நறுக்கியது)
11. தக்காளி - 1 (நறுக்கியது)
12. கருவேப்பிலை
13. கொத்தமல்லி
14. எண்ணெய் - 1 குழிக்கரண்டி
15. புளி கரைசல் - 1/2 கப்


 

எண்ணெய் காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு போட்டு தாளிக்கவும்.
இதில் நறுக்கிய வெங்காயம், கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும்.
சிவந்ததும் தக்காளி சேர்த்து குழய வதக்கவும்.
இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து பிரட்டி தண்ணீர் சிரிது ஊற்றி கொதிக்க விடவும்.
தூள் வாசம் போக கொதித்து, கத்திரிக்காய் வெந்ததும், புளி கரைசல் சேர்த்து கிளரி, எண்ணெய் திரண்டு வரும்வரை கொதிக்கவிட்டு இறக்கி விடவும்.


இதில் தூள் வகைகள் சேர்க்கும் போது கொஞ்சம் தயிர் (2 தேக்கரண்டி) சேர்த்தால் வித்தியாசமான டேஸ்ட் கிடைக்கும். பெரிய வெங்காயத்திர்க்கு பதிலாக சின்ன சாம்பார் வெங்காயம் பயன்படுத்தினால் ருசி கூடும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

வனிதா இந்தக் காரக் குழம்பு செய்துவிட்டேன், நல்ல சுவையாக இருக்கிறது, இன்னும் சாப்பிடவில்லை. தக்காளி சேர்க்கவில்லை. தூள் வகைக்குப் பதிலாக என் கறித்தூள் சேர்த்தேன். நல்ல குறிப்பு.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மிக்க நன்றி அதிரா... :) தக்காளி சேர்க்காம எப்படி குழம்பு வருது?! எப்படியோ பிடிச்சா சரி. ;) ஹிஹீ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா,
இன்று இந்த குழம்பு தான் செய்தேன்... ரொம்ப நன்றாக இருந்தது...
நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

வருசையா கத்திரிக்காய் குழம்பா?? ;) என்னை போல் உங்களுக்கும் இது தான் சுலபமா கிடைக்குமோ??? ஹிஹிஹீ. மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

:) கத்தரிக்காய் புலாவ் செய்யலாம் என்று தான் கத்தரிக்காய் வாங்கினேன்... என் வீட்டில் இருக்கும் ரெண்டு குடிமக்களும், புலாவ், பிரைட் ரைஸ் எல்லாம் வேண்டாம்... குழம்பு வகை தான் வேண்டும் என்று ஸ்ட்ரைக் செய்ததால் கத்தரிக்காய் குழம்பாக செய்து பழி வாங்கி கொண்டிருக்கிறேன் :P

இந்த குழம்பு சூப்பரோ சூப்பர் இன்று காலை தோசைக்கும் இதை தான் யூஸ் செய்தேன் ரொம்ப நல்லா இருந்தது :)

நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

மிக்க நன்றி. இது எங்க அம்மா செய்யும் முறை. கிராமத்து ஸ்டைல். இந்த ஒரு குழம்பு தான் கல்யாணத்துக்கு முன்னாடி செய்ய கத்துகிட்டது ;) ஹிஹிஹீ. இதுவும் உருளை வறுவலும் தான் என் சமையலா இருக்கும் அப்போ. மற்ற எல்லாமே அப்பறம் கத்துகிட்டது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்களை பார்த்து inspire ஆகி நிறைய பேர் சமையல் கற்றுக் கொண்டிருப்பார்கள் / கொள்வார்கள் என நினைக்கிறேன் :)

ஆர்வம் இருந்தால் எதையும் கற்றுக் கொள்ளலாம் தான் :) ஆனால் உங்கள் அளவிற்கு இவ்வளவு சீக்கிரம் எக்ஸ்பெர்ட் எல்லாம் ஆக முடியுமா என்று தான் தெரியவில்லை :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)