பத்திய சாப்பாடு

பத்திய சாப்பாடு - kuzhandai pirandha mudhal oru varam varai enna saapida vendum? pinbu ethanai natkaal enna pathiya saapadu saapida vendum? Puli eppozhudhu serkkalam?
dhayavu seydhu udane badhil koorungal thozhigale. kuzhandhai pirandhu 5 naatkal dhan aagiradhu. Paal innum saria vara villai.

வாழ்த்துக்கள்.மதியம் - குழைந்த சாதம், எலும்பு சூப் ,முட்டை ஆம்லெட் சாப்பிடலாம்.காலை ,இரவு இட்லி,இடியாப்பம்,ஆப்பம் ,ப்ரெட் சாண்ட்விச் சாப்பிடலாம்.பால்,காபி,டீ வித் பிஸ்கட் சாப்பிடவும்,நல்ல சாப்பிட்டால் தான் பால் இருக்கும்.இன்னும் நம் தோழிகள் சொல்வார்கள்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நான் சைவம். புளி சேர்க்கலாமா?

முதலில் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். பால் நன்கு வர எனக்கு செல்வி அக்கா சொன்ன குறிப்புகளை உங்களுக்கு தருகிறென்.
1.தினமுமே ஒரு கைப்பிடி பூண்டை பொடியாக நறுக்கி, ஒரு ஸ்பூன் நெய்யில் வதக்கி, உப்பு சேர்த்து சாதத்தில் முதலில் நாலு
கவளம் பிசைந்து சாப்பிடவும். பிறகு வழமை போல் சாப்பிடவும். குழம்பில் போட்டு சாப்பிடுவது பலன் அளிக்காது.
2. வாரம் இருமுறை கடுகை வெறும் வாணலியில் போட்டு வறுத்து, பொடியாக்கி நெய் சேர்த்து சாதத்தில் கலந்து சாப்பிடவும்.
3. முருங்கைக்கீரை வர்ரம் இருமுறை சேர்த்துக் கொள்ளலாம்
4. காய்கறிகள் பாதி, சாப்பாடு பாதி என சாப்பிட வேண்டும்.
5. சுண்டைக்காய் வத்தல், மணத்தக்காளி வத்தல் இவற்றையும் நெய்யில் வறுத்து, பொடித்து சாதத்தில் கலந்து சாப்பிடலாம்

வாரம் ஒருமுறை.
6. காய்ந்த வேப்பம்பூவை நெய்யில் வறுத்து, பொடி செய்து சாதத்தில் கலந்து சாப்பிடலாம்.
7. தனியாவை (காய்ந்த கொத்தமல்லி) வெறுமனே வறுத்து, பொடி செய்து அது ஒரு நாள் சாப்பாட்டில் கலந்து சாப்பிடலாம்.
8. முட்டை, ஈரல், பால்சுறா சேர்த்துக் கொள்.
9. தினமும் ஒரு கீரை (நான்வெஜ் சாப்பிடும் அன்று வேண்டாம்).
10. பால் கொடுக்கும் முன்பு அரை தம்ளர் வெந்நீர் குடித்து விட்டு பால் கொடுக்க பழகிக் கொள்ளவும். இரவில் முடியாவிட்டாலும் பகலிலாவது இந்த முறையை பின்பற்றவும் (பிளாஸ்கில் வெந்நீர் வைத்துக்கூட குடிக்கலாம்).

இவ்வளவும் செல்வி அக்கா சொன்னது.

என் மாமியார் எனக்கு தந்த பத்தியம்.:
1. சாதம்.
2. வெள்ளைக்கறி :-எல்லா மரக்கறியையும் (காரட், பீன்ஸ், ப்ரோக்லி, காலிஃபிளவர், க்ரீன் பீஸ், லைமா பீன்ஸ் (lima beans), உருளை கிழங்கு etc) தண்ணீர் விட்டு அவித்து சிறிது பசுப்பால், வெந்தயம், உப்பு சேர்த்து கொதி வந்ததும் இறக்கவும்.
3. சுட்ட/பொரித்த அப்பளம்.
4. சிறிய துண்டு ஊறுகாய்.

முதல் ஒரு வாரம் இதுதான். சாதம் அரைவாசி இந்த வெள்ளை கறி அரைவாசி சாப்பிடேன். பின்னர் அந்த வெள்ளை கறிக்குள் சிறிது மல்லித்தூள்(தனியா), சீரகத்தூள் & மிளகுதூள் சேர்த்து ஒரு மாதம் சாப்பிட்டேன்.

மற்றது செல்வி அக்கா சொன்ன மாதிரி பூண்டு, கடுகு பொடி எல்லாம் சாப்பிட்டேன்/ சாப்பிடுகிறேன்.
நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.
-நர்மதா :)

My gyne asked me to go on a regular diet imme after delivery & I followed her advice...I used to take idli sambar for BF & dinner and a full meal(incl sambar,rasam,vatha kulambu,kootu, veg, appalam,curd,etc),horlicks twice a day from the hospital canteen until I left the hospital... After that I used to take lil garlic fried in ghee with lunch & murungaikeerai whenever possible... Avoid brinjal for a month coz it's said to delay the healing of wounds...

Reg milk secretion: U'll start producing enough milk for the baby within a week...just let the baby suck well(even if there is no milk) as the sucking will stimulate milk production...

மேலும் சில பதிவுகள்