ரெயின்போ ஸ்வீட்

தேதி: November 11, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 3 (1 vote)

 

மைதா - 300 கிராம் + 2 தேக்கரண்டி
சீனி - ஒரு கப்
ஏலக்காய் - 3
நெய் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க
ஃபுட் கலர் - 3 கலர்கள்(பச்சை,ரோஸ்,ஆரஞ்சு)


 

மைதாவை சலித்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மைதா மாவை மூன்று பாகங்களாக பிரித்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பிரித்து வைத்திருக்கும் மைதா மாவின் ஒரு பகுதியை எடுத்துக் கொள்ளவும். ஏதேனும் ஒரு கலரில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து அதை மாவில் சிறிது சிறிதாக ஊற்றி சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்துக் கொள்ளவும்.
இதைப் போல் பிரித்து வைத்திருக்கும் மாவில் மற்ற இருக் கலர்களையும் கலந்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி மைதாவை போட்டு நெய் ஊற்றி பேஸ்ட் போல் செய்துக் கொள்ளவும்.
மூன்று வெவ்வேறு நிறத்தில் செய்து வைத்திருக்கும் உருண்டைகளை எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்த்து எடுத்துக் கொள்ளவும்.
ஏதேனும் ஒரு நிறத்தில் உள்ள தேய்த்து வைத்திருக்கும் சப்பாத்தியை அடியில் வைத்து அதன் மேல் மைதா பேஸ்டை தடவவும் அதன் மேல் இன்னொரு நிறத்தில் உள்ள சப்பாத்தியை வைக்கவும். அதன் மேல் மீண்டும் மைதா பேஸ்டை தடவி மற்றொரு நிறத்தில் உள்ள சப்பாத்தியை வைக்கவும்.
மூன்று சப்பாத்தியையும் ஒன்றன் மேல் ஒன்று வைத்த பின்னர் அதை அப்படியே இறுக்கமாக இருக்கும்படி சுற்றவும்.
ரோல் போல சுற்றிய பின்னர் அதை சற்று தடிமனான துண்டுகளாக நறுக்கவும். அந்த துண்டுகளை சப்பாத்தி கட்டையில் வைத்து ஒரு முறை தேய்த்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயை காய வைத்து தேய்த்து எடுத்த துண்டுகளை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சீனியை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும். அதில் ஏலக்காயை சேர்த்து கலந்துக் கொள்ளவும் பின்னர் அதில் பொரித்த துண்டுகளை போட்டு எடுக்கவும்.
சுவையான கலர்புல்லான ரெயின்போ ஸ்வீட் தயார். கூட்டாஞ்சோறு பகுதியில் குறிப்புகள் கொடுத்துக் கொண்டிருக்கும் <b> திருமதி. ரஸியா நிஸ்ரினா</b> அவர்களின் குறிப்பு இது. நீங்களும் செய்து பார்த்து கருத்தினை தெரிவிக்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஆஹா, அருமையான, அழகான குறிப்பு. செய்து பார்த்து விட வேண்டியதுதான்.

ரொம்ப வித்தியாசமான, ரசனையான தயாரிப்பு.

ஆஹா எஃப் எம் பொழுதுபோக்கின் உச்சகட்டம் மாதிரி, அருசுவை.காம் சமயல் குறிப்புகளின் (உச்சகட்டம்) களஞ்சியம்.

இப்படிக்கு
இந்திரா

indira

ஆஹா ரஸியா நிஸ்ரின் என்ன உங்கள் ரசனை
சூப்பர் ஐடியா

ஜலீலா

Jaleelakamal

வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிதில் செய்யக்கூடியது.குலோப்ஜாமுன் செய்து போரடித்து விட்டது,ஹஜ் பெருநாளுக்கு நிச்சயம் இது உண்டு.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

சுலபமான அழகான இனிப்பு. எல்லோரையும் கவரும் என்பது நிச்சயம்.
இமா

‍- இமா க்றிஸ்

அழகாக உள்ளது. சுவையாகவும் இருக்கும்.

உங்கள் கருத்துக்கு நன்றி!

Eat healthy

உங்கள் பாராட்டுக்கு நன்றிமா!இது என் முதல் குறிப்பு (யாரும் சமைக்கலாம் பகுதிக்கு),முதல் குறிப்பிலே நிறைய பாராட்டு பெற்று கொடுத்ததற்க்கு அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துகிறேன்!

Eat healthy

செய்து பார்த்து எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்,சீனி பாகு கொஞ்சம் தண்ணியாக இருக்கட்டும்,பாகில் ஸ்வீட்டை கொஞ்ச நேரம் ஊற விடுங்கள்.

Eat healthy

இமா மேடம்,என் குறிப்பு உங்களை கவர்ந்ததில் எனக்கு மகிழ்ச்சி!

Eat healthy

please try it & say how is it?

Eat healthy

ரஸியா இந்த ஸ்வீட்க்கு பாகுபதம் வேண்டாமா.

பாகு காய்ச்ச வேண்டும் வினோஜா,ரொம்ப திக்காக வேண்டாம்,மீடியமாக இருக்கட்டும்,சுட்டதை பாகில் போட்டு சிறிது நேரம் ஊற விடுங்கள்.

Eat healthy

பூட் கலரின் ப்ராண்டை சொன்னால் கடையில் கேட்பதற்கு வசதியாக இருக்கும்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

பூட் கலரின் ப்ராண்டை சொன்னால் கடையில் கேட்பதற்கு வசதியாக இருக்கும்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

தாமதமான பதிலுக்காக மன்னிக்கவும்,எனக்கு என் அம்மா தான் ஊரிலிருந்து வாங்கி அனுப்புவார்கள்,சின்ன சின்ன பாக்கெட்டுகளில் பெயர் இல்லாமல் தான் வரும்,நீங்களும் கடைகளில் குறிப்பாக தரமான சர்பத் செய்யும் கடைகளில் கேட்டுப் பாருங்கள்,நன்றி!

Eat healthy

தோழிகள் யாருகாவது தெரிந்தால் சொலுங்கப்பா

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..