கார்த்திகை27

இது ஒவ்வொரு ஈழத்தமிழன் நெஞ்யிலேயும் குறித்துவைத்திருக்கும் நாள்.
இந்நாளிலே தான் எம்மின விடுதலைக்காய் உயிர் நீத்த மறவர்களை நாம் நினைவு கூறுகிறோம். எம் முதல் மறவனின் உயிர் தமிழ்நாட்டிலேயே பிரிந்தது என்பது உங்களில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம். நாம் எங்கிருந்தாலும் எம்மவர்களை நினைத்து ஒரு தீபம் ஏற்றி அவர்களின் கனவு நனவாக பிரார்த்திக்கும் நாள்.. அன்றுதான் எமது மண்ணிலே தீபாவளி.... அனைவரது வீட்டிலேயும் தீபம் ஏற்றி நினைவுகூறுவோம்... தொழில் நுட்பம் வளர்ந்து வரும் இக்கால கட்டத்தில் எம்மவர் ஒருவர் இதனை வலைப்பின்னல் ஊடகத்திற்கு கொண்டுவந்துள்ளார். எனவே எமது விடிவுக்காய் தம் உயிர்களை நீத்த மறவருக்காக ஒரு தீபத்தை நீங்களும் உங்கள் பெயரில் ஏற்றி விடுங்களேன்....

பின்வரும் வலைக்கு சென்று www.karthikai27.com உங்கள் பெயரை பதிந்து light it என்ற ஆழியை அழுத்துங்கள்.... உங்கள் பெயரில் எம் உறவுகளின் முகத்தை பாருங்கள்

நிலத்துக்குள் எங்கள் நிலவுகளை பாருங்கள் சொந்தமென, நாங்கள் சுடர் ஏற்றி அஞ்சலி செய்வோம் வாருங்கள்

மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்
தாய் மானம் வாழ என்றே தம்மையே தந்துள்ளோர்கள்

எனது தீப இல. 24,786 உங்கள் தீப இல. என்ன ???

நாங்கள் தீபாவளி கொண்டாடி பதினெட்டு வ்ருடங்கள் ஆகிவிட்டன.எங்கள் மக்களுக்காக மரணித்த மாவீரர்களை நினைந்து கார்த்திகைமாதம் 27 ம் நாள் விளக்கேற்றி வைத்து அடுத்த வருடம் எப்பிடியும் எமது மண்ணில் இருப்போம் இனியும் மாவீரர்களது எண்ணிக்கை கூடக்கூடாது கடவுளெ என்றுதான் நினைப்பேன்.துயிலுமில்லப் பாடலைக் கேட்டால் அழுகை வராதவர்களும் உண்டா?

ஈழவன் அண்ணா எங்கு போய் தந்திஅனுப்பலாம் எண்டிறதையும் எல்லாருக்கும் சொல்லுங்கோ. நான் ஏற்கனவே தீபம் ஏற்றீட்டன். ஆனா இலக்கத்தை கவனிக்கவில்லை.நிறைய பேருக்கு சொல்லியும் இருக்கிறேன்.நீங்கள் சொல்லியதுபோல் மாவீரர் தினத்தை அன்றைய நாளை என்னால் சொல்ல முடியவில்லை.சொல்வதற்குமுன் சிந்திக்க வேண்டுமல்லவா.அந்த நினைவே என்னைக்கொன்று விடுகிறது.மன்னிக்கவும்.இந்த தலைப்பிற்கு நான் மீண்டும் வருகிறேன் .நன்றி.

என்ன தந்தி அனுப்பிறது? என்னக்கு விளங்கேல ??? என்ன தோழியர் சங்கத்திலே நிறைய பேர் தலைய காட்டின்னம். இங்கே ரண்டு பேர் தான் வந்திருக்கினம்..... என்ன தான் பிரச்சினை எண்டாலும் செத்தவீடுக்கு சொல்லாம(அழைக்காமல் ) வரோணும் என்ன ??

"ஒரு தலைவன் இருக்கிறான் கலங்காதே"

ஈழவன் அண்ணா இந்திய பிரதமருக்கு நாங்கள் நாங்கள் நெட்டில் மேசேச் அனுப்ப முடியுமா முடியாதா?

கோவிக்க வேண்டாம் அவர்களுக்கு இங்கே இப்படி ஒரு தலைப்பு இருப்பது தெரியவில்லை போலும்.நேரமின்மையால் சமீபத்திய பதிவுகளூடாக மட்டும் செல்பவர்களுக்கு இது தெரியவாய்ப்பில்லை நான் சொல்லி விடுகிறேன்.

ஈழவன் அண்ணா, நான் இந்த பதிவை இப்போது தான் பார்த்தேன். நாங்கள் எப்போது இலங்கையை விட்டு வந்தோமோ அப்போதே எந்த பண்டிகையும் கொண்டாடுவதில்லை. கனடாவில் இருக்கும் போது மாவீர நாளுக்கு போவதுண்டு. ஆனால் இந்த நாட்டில் நாங்கள் இருக்கும் இடத்தில் தமிழ் ஆட்களே குறைவு. வீட்டில் தான் விளக்கேற்றி வணங்குவோம்.
வாணி

நான் இன்று தான் இந்த பதிவை பார்த்தேன். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றிய பதிவு என்பதால் வருவது குறைவு. இங்கு மாவீரர் தினத்தன்று நாம் போய் பூவும் வைச்சு, விளக்கும் ஏற்றுவோம். இந்த நாளை ஈழத்தமிழர் மறக்க முடியுமா? நான் ஒரு நாளும் websiteல் விளக்கு ஏற்றவில்லை. அப்பிடி இருப்பது தெரியாது.தெரியப்படுத்தியற்கு நன்றி, ஈழவன் அண்ணா.

மாவீரர்களே
உங்கள் உயிர்த்தியாகத்தினால்
உயிர் பிழைத்தவர்கள் நாங்கள்.

உங்களோடு
உங்களுக்கு உயிர் தந்த
பெற்றோர்களையும் போற்றுகிறோம்.

எங்களுக்காய் நீங்கள்
இரத்தம் சிந்தி மடிந்ததை
தீராத வலிகளுடன் நினைவு கூருகின்றோம்.

நிரல் நிரலாய் கல்லறைகள் கண்டு
கதறியழும் உங்கள் தாயின் குரல் கேட்டு
கரையாத கல்நெஞ்சும் உண்டோ

ஈழத்தமிழர்கள் நாம் தெய்வமாகப்போற்றும்
தியாகச் செம்மல்கள் உங்களை
என்றும் மறவோம்

சுரேஜினி

எங்கள் உயிரினும் மேலான கர்த்திகைப்பூக்களே இத்தனை உலகத்தமிழர்களும் போற்றும் உங்களை தீவிரவாதிகள் என்று கூசாமல் கூறுகையில் ஈழத்தமிழ்ர்கள் நாங்கள் வயிறு நொந்து அழுகிறோம்.இனிவரும் மாவீரர் தினங்களில் இந்த பெயர் மறைந்து அனைத்து நாடுகளும் உண்மை உணர வேண்டுமென்று வேண்டி விளக்கேற்றுகிறோம்.

இத்தோடு என் மண்பற்றால் உயிர் கொடுத்த நாட்டுப்பற்றாளராகிய என் தந்தையையும் அவரது கடைசி நிமிடங்களையும் கண்ணீரோடு நினைவு கூருகின்றேன்.

என் தாய்மண்ணே உன்னில் கால்பதிக்க துடிக்கும் எங்களுக்கு விரைவில் வழிகாட்டு.
சுரேஜினி

எம் உறவுகளின் விடிவுக்காய் தம் உயிர்களை துறந்தவர்கள்

நீர் எறிந்த உயிர் விதை பயிரானது.

இந்த நாளில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள்

தாயக மற்றும் தமிழக நேரம் பிற்பகல் 5:40 நிமிடத்துக்கும்

அவுஸ்திரேலிய சிட்னி, மெல்பேர்ண் நேரம் இரவு 11:10 நிமிடத்துக்கும்

நியூசிலாந்து நேரம் அதிகாலை 2:10 நிமிடத்துக்கும்

கனடாவின் ரொறன்ரோ நேரம் காலை 7:10 நிமிடத்துக்கும்

ஐரோப்பிய நேரம் பிற்பகல் 1:10 நிமிடத்துக்கும்

பிரித்தானிய நேரம் பிற்பகல் 12:10 நிமிடத்துக்கும்

சிங்கப்பூர், மலேசிய நேரம் இரவு 8:10 நிமிடத்துக்கும்

மாவீரர் நாள் உரையை நிகழ்த்தவுள்ளார்.

தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரையைத் தொடர்ந்து மாவீரர் நினைவொலி 6:05 நிமிடத்துக்கு எழுப்பப்படும்.

தொடர்ந்து 6:06 நிமிடத்துக்கு அகவணக்கம் இடம்பெறும்.

6:07 நிமிடத்துக்கு முதன்மைச்சுடரை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் ஏற்ற, சமநேரத்தில் மாவீரர் துயிலும் இல்லங்களின் முதன்மைச் சுடர்களை தளபதிகள் ஏற்ற, மாதிரி மாவீரர் துயிலும் இல்லங்கள்-நினைவு இல்லங்கள்-ஒழுங்கமைக்கப்பட்ட இடங்களில் சுடர்கள் ஏற்றப்பட்டு வணக்கம் செலுத்தப்படவுள்ளது.

இதில் உலகத் தமிழினம் முழுமையாக கலந்து கொள்ளவுள்ளது.

வீடுகளில் ஓர் தீபம்..... இணையத்தில் ஓர் தீபம் உயிர் உறவுகளுக்காய் ஏற்றிடுங்கள்

http://november27.net

தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரையினை தாயகத்தில் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் புலிகளின் குரல் வானொலியின் ஊடாக உலகம் வாழ் தமிழர்கள் நேரடியாக கேட்டுக் கொள்ளலாம்.

வானொலியின் இணையத்தளம் வருமாறு:

புலிகளின் குரல் வானொலி - www.pulikalinkural.com

(சுறேஜினி என் உயிர் நண்பர்கள் உறவினர்களுடன் உங்கள் தந்தையும் நினைவுகூறுகிறேன் இன்றும்... என்றும்....)

"ஒரு தலைவன் இருக்கிறான் கலங்காதே"

மேலும் சில பதிவுகள்