தேதி: November 13, 2008
உடைகளில் போடும் இந்த எளிமையான எம்ராய்டரி முறையை திருமதி. நர்மதா அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள் என்று எது செய்தாலும் அதை நல்ல பாங்குடன் செய்வது இவரது தனிச்சிறப்பு. இவரின் பங்களிப்புகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவை. அனைவராலும் பாராட்டப்பட்டவை.
தைப்பதற்கு துணி
நிற மணிகள், கற்கள் (Beads & Stones)
பூப்போடும் நூல்
தையல் ஊசி
பிரேம் (Hoop)
கத்தரிக்கோல்
கோந்து (கற்கள் ஒட்டுவதற்கு) (Gum)
எந்த உடையில் இந்த எம்ராய்டரியை செய்ய போகிறோமோ அந்த உடை மற்றும் அதற்கு தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

உடையில் எங்கெங்கு எம்ராய்டரி போடவேண்டுமோ அங்கெல்லாம் பென்சில் வைத்து பூ, கொடி மற்றும் இலைகள் போல வரைந்துக் கொள்ளவும்.

பின்னர் துணியை ப்ரேமில் போட்டு பூக்களின் ஓரங்கள் மற்றும் கொடியை, சிறிய சங்கலித் தையலினால் படத்தில் காட்டியுள்ளது போல் தைக்கவும்.

அதன் பிறகு இலைகளை அடைப்பு அல்லது நிரப்பு தையலால் தைக்கவும்.

பூக்கள் மற்றும் இதழ்களின் நடுவிலும், கொடியின் முனையிலும் கற்களை வைத்து ஒட்டவும் அல்லது தைக்கவும். இரண்டு விதமான கற்களும் கிடைக்கின்றன.

பின்னர் பூக்கள் மற்றும் இதழ்களில் வைத்துள்ள கற்களைச் சுற்றி சிறிய மணிகளால் தைக்கவும். அழகான, எளிதில் செய்யக்கூடிய பூக்கள் தயார்.

இந்த எளிய முறையில் போடும் இரு வேறு தையல் முறையைக் கொண்டு செய்யும் எம்ப்ராய்டரியை சல்வார், ப்ளவுஸ், குழந்தைகளின் சோளி, பட்டு பாவடைகள் ஆகியவற்றிலும் போடலாம்.

Comments
super
Very nice. Can u show me how to stitch this dress?
I really want to learn to stich these kinds of beautiful dresses.
geetha
geetha
எம்ராய்டரி
நர்மதா உங்க எம்ராய்டரி ரொம்ப அருமை எளிமையாகவும், அழகாகவும் உள்ளது , உங்க சமையல், கைவினை பொருட்கள், தையல் எல்லாமே ரொம்பவும் அழகு, எனக்கும் எம்ராய்டரி ரொம்ப பிடிக்கும் என் மகள் வந்த பின்பு அவள் கைக்கு எட்டாமல் எதுவும் வைக்க முடியவில்லை, திரும்பவும் இப்ப தான் ஆரம்பித்து இருக்கிறேன்
அன்புடன்
ஹாஷினி
அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).
ஹாய் நர்மதா
ஹாய் நர்மதா, எளிமையாக ஆனால் மிகவும் அழகாக இருக்கிறது. உங்கள் திறமையைப் பாராட்ட வார்த்தைகள் போதாது.
அன்புடன் இமா
- இமா க்றிஸ்
ஹாய் நர்மதா
நர்மதா நீங்கள் நலமா? உங்கள் செல்லமகள் எப்படி இருக்கிறா? உங்கள் எம்ராய்டரி நல்ல அழகாக உள்ளது. அத்துடன் எளிமையாகவும் உள்ளது.நீங்கள் செய்யும் சமையலும் சரி, கைவினைப் பொருட்களும் சரி பிரமாதம்.வாழ்துக்களும்,பாராட்டுக்களும்.
நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"
எம்பிரொய்டரி
அன்பின் கீதா, ஹாஷினி, இமா, வத்சலா பாராட்டுக்கு நன்றி.
கீதா இது நான் எப்பவோ அனுப்பிய குறீப்பு. முடிந்தால் மீண்டும் தைக்கும் போது படம் எடுத்து அனுப்புகிறேன்.
வத்சலா மகள் நல்லா இருக்கிறா. கேட்டதுக்கு நன்றி.
-நர்மதா :)
நர்மதா அருமையாக
நர்மதா அருமையாக இருக்கு எம்ட்ராயட்ரி.
இந்த வேலைகள் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் ஒரு லேடிஸ் டெய்லரும் கூட ஆனால் இப்ப டைம் இல்லை.
எவ்வலவு மெல்லிய துணியா இருந்தாலும் பர்பெக்டாக தைப்பேன்.
லைனிங் சூப்பரா வரும்.
ஒரு நாள் தைத்து கொண்டு இருக்கும் போது பையன் கையை வீடு விட்டான் தையல் ஊசி அப்படியே ஆள் காட்டி விரல் உள் போய் விட்டது. ரொம்ப வே பயந்துதுடித்து விட்டேன்.
//ஆகையால் குழந்தைகள் வைத்திருப்பவர்கள் ரொம்ப ஜாக்கிரதையாக தைக்கவும்.
இன்னும் பசங்களுக்கு கோபம் வந்தால் ப்ளவுஸில் ஒரு கை காணாமல் போய் விடும்,//
திடீருன்னு நாமளும் துணிய வெட்டலாம் என்று கத்திரி எடுத்து வெட்டி பார்பார்கள்.
யாரும் இல்லாத போது தைப்பது நல்லது.
ஜலீலா
Jaleelakamal
pls teach me how to stitch short tops
ஹ்லோ ஜலீலா அக்கா
உங்களுக்கு தையல் தெரியும் என்று சொல்லி உள்ளீர்கள்,
தயவுசெய்து எங்களுக்கும் short tops தைய்பது எப்படி என்று
சொல்லித் தாருங்களேன். நம்மிடம் உள்ள அளவு சட்டை வைத்து தைப்பது என்றும் சொல்லி தாருங்கள் அக்கா, நான் US ல் இருக்கிறேன், இங்கு யாரும் தைத்து கொடுக்க இல்லை, ஆதலால் நீங்கள் சொல்லி கொடுத்தால் நன்றாக இருக்கும்
kaivali
sevarali flower is a super
ஹலோ செல்லம் Hello Dear
ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta
Very super..nan ipoluthu than
Very super..nan ipoluthu than embroiderey and tailoring class poi mudithen..aanal dress la embroiderey pana theriyathu..inimry kandipa panuven..ithey mari dress stitching um post pana helpful ah iruku my humble request. .:-)
Searching for Stitching Classes in Chrompet Chennai
Hi Team,
Hope this mail finds you in good health and sound mind..I am currently searching for stictching classes to learn stitching in and around chrompet chennai..Can anyone guide me on it..