கப் கேக்

தேதி: November 13, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

கனடாவில் வசித்து வரும் இலங்கை தமிழரான <b> செல்வி. விசா </b> தற்போது முதுகலை அறிவியல் பயின்று வருகின்றார், கூடவே சமையலும். சமைக்க ஆரம்பித்தது மூன்று வருடங்களுக்கு முன்புதான் என்றாலும், அதீத ஈடுபாட்டின் காரணமாக இன்று பல்வேறு உணவுகளை சுவைபட தயாரிப்பதில் திறன்பெற்றவராய் இருக்கின்றார். கேக், குக்கீஸ் செய்வதை தனது தனித்திறமையாக குறிப்பிடும் இவர், வரைதல், கைவினைப்பொருட்கள் செய்தல் போன்றவற்றை கொண்டு ஓய்வுப் பொழுதினை செலவு செய்கின்றார்.

 

மாவு(all purpose flour) – 500 கிராம்
மாஜரின் – 500 கிராம்
முட்டை – 10
சீனி – 500 கிராம்
வெனிலா எசன்ஸ் - 2 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர்- 3 தேக்கரண்டி


 

மாவுடன் பேக்கிங் பவுடரை போட்டு கலந்து சலித்து வைத்துக் கொள்ளவும். அவனை 300 F -ல் முற்சூடு செய்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சீனி மற்றும் மாஜரினை சேர்த்து போட்டு நன்றாக நுரைத்து ப்ளஃபியாக ஆகும் வரை அடிக்கவும்.
அதன் பிறகு முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு எல்லாம் ஒன்றாக சேரும்படி அடித்துக் கொள்ளவும். முட்டைகள் எல்லாவற்றையும் சேர்த்து ஊற்றாமல் ஒன்றிரண்டாக உடைத்து ஊற்றவும். அதிக நேரம் அடிக்க வேண்டாம்.
எல்லா முட்டைகளும் ஒன்றாக கலந்த பிறகு வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக சேரும்படி அடிக்கவும்.
பின்னர் இந்த கலவையுடன் சலித்து வைத்திருக்கும் மாவை சேர்த்து அடிக்கவும். இந்த கலவையை கப் கேக் அச்சில் முக்கால் பாகம் அளவு நிரப்பி பேக் செய்து நார்மல் கப் கேக் போல் சாப்பிடலாம்.
வித்தியாசமாக செய்ய வேண்டுமென்றால் கலந்த மாவுடன் சாக்லேட் சிப்ஸ் சேர்த்து பேக் செய்யலாம். சாக்லேட் சிப்ஸ் சேர்த்த பின்னர் கலவையை அடிக்க தேவையில்லை.
மற்றொரு முறையிலும் செய்யலாம், சாக்லேட் சிப்ஸ் மற்றும் கோக்கோ பவுடர் சேர்த்து கலந்து கப்புகளில் ஊற்றி பேக் செய்து எடுக்கலாம். கோக்கோ பவுடர் சேர்க்கும் போது ஒரு கப் கலவைக்கு 2 தேக்கரண்டி சேர்க்கவும். விரும்பினால் சாதாரணமாக செய்து வைத்திருக்கும் கலவையில் சிறிதும் கோக்கோ சேர்த்த கலவையில் சிறிதும் வைத்து பேக் செய்யலாம் பார்க்க வித்தியாசமாக இருக்கும்.
கலவையுடன் மிக்ஸ்டு க்ளேஸ் ப்ரூட்டும் சேர்த்து கொள்ளலாம்.
சாதாரணமாக செய்து வைத்திருக்கும் கப் கேக் கலவையுடன் விரும்பிய கலரை கலந்தும் பேக் செய்யலாம். முன்பு கூறியது போல், இரு வேறு நிற கலவையை சேர்த்தும் கப் கேக் செய்யலாம்.
கலவையுடன் சிறிது பேரீச்சை பழம், முந்திரி பருப்பு அல்லது பாதாம் பருப்பு சேர்த்து அடித்து கப் கேக் செய்யும் அச்சியில் ஊற்றி பேக் செய்தும் எடுக்கலாம்.
சுவையான கலர் கலரான கப் கேக்கள் தயார். விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி கப் கேக்கள் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

தங்களின் கப் கேக் பார்க்க மிக அழகா இருக்கு.தங்களின் இக்குறிப்புக்கு நன்றிபா.
மாஜரின்க்கு பதிலா என்ன யூஸ் பண்ணலாம்.ஏதாவது வழியிருக்கா?இல்லை இதை மட்டும் தான் உபயோகிக்கனுமா?
நான் வைத்திருப்பது daewoo microwave oven.இதில் power high 90 டிகிரி தான்.இதில் இந்த கேக்கை எவ்வளவு நேரம் பேக் செய்யனும்.

சதாலட்சுமி
உங்கள் கேக் மிகவும் நன்றாக உள்ளது. மாஜரின் என்றால் என்ன? அதற்க்கு பதில் வேறு என்ன யூஸ் பண்ணலாம். மைக்ரோ ஓவனில் செய்யமுடியுமா?எவ்வளவு நேரம் வைக்கவேண்டும், தெரியப்படுத்தினால் உதவியாக இருக்கும்.

சதாலட்சுமி

பாராட்டுகளுக்கு நன்றி :-)
மாஜரினுக்குப் பதிலாக பட்டர் உபயோகிக்கலாம். வேறு ஏதாவது உபயோகிக்கலாமா என்று எனக்குத்தெரியவில்லை. உங்கள் Microwave oven பற்றியும் எனக்குத்தெரியவில்லை. நான் ஒருபோது செய்ததில்லை. அதனால் என்னால் பதிலளிக்கமுடியவில்லை.மன்னித்துக்கொள்ளுங்கள்.
வேறு யாராவது இதை பற்றித் தெரிந்தால் சொல்லுங்களேன் ப்ளீஸ் .
விசா

இந்த கேள்விக்கு பதில் மேயோ கிளினிக் தளத்தில் இருந்து...

http://www.mayoclinic.com/health/butter-vs-margarine/AN00835

Another one which got my attention:
http://www.healthcastle.com/butter-or-margarine.shtml

"Success is to be measured not so much by the position that one has reached in life as by the obstacles which he has overcome."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நன்றிகள் இலா மேடம் :-)
விசா

விசா கலர் கலரா பார்பதற்கே சூப்பரா இருக்கு,இந்த கப் கேக் என் வீட்டுக்காரருக்கு ரொம்ப பிடிக்கும்,ஆனால் எங்க வீட்டில் அவன் இல்லையே,இருந்தாலும் ஜனவரிக்கு மேல் வாங்கிவிடுவோம் அப்பொழுது செய்து பின்னூடம் அளிக்கிறேன்.

Can U Know, how to cultivate orkid and althuriam flower plants for business purpose? Is any training program is available is Coimbatore?

சூப்பர்.எல்லா கேக்கும் நல்ல வந்திருக்கு.ஒரு சின்ன டிப்ஸ்,ஃப்ரூட் மிக்ஸ் பண்ணும் போது மாவில் சிறிது கோட் பண்ணி போட்டால் ,ஃப்ரூட் கேக் அடியில் தங்காது.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

கவி,
நன்றி. செய்து பார்த்து சொல்லுங்கள். நான் பல வண்ணங்களில் செய்வேன். சில வேளைகளில் ஒவ்வொரு கலர்களிலும் சிறிது சிறிதாக எடுத்து ஃபோர்க்கால் ஒருதடவை மிக்ஸ் பண்ணிவிட்டால் அழகாக இருக்கும். எல்லாவற்றையும் குறிப்பில் போடமுடியவில்லை :-)

விசா

ஆசியா உமர்,
நன்றி :-) இனிமேல் செய்யும்போது உங்களின் டிப்ஸின் படி செய்கிறேன். கேக்குகளுக்குப் சேர்க்கும் போது இன்னும் உதவியாக இருக்கும். (கப் கேக்குகள் சின்னதென்பதால் அடியில் தங்கும் பிரச்சனைகள் இருந்ததில்லை. இதுவரைக்கும் :-) )

விசா

ஆஆஆ சையாக இருக்கு என்னிடம் 10 முட்டைகள் இல்லை சண்டே வாங்கி செய்துவிட்டு சொல்கிறேன்

ஹாய் விசா,
கப் கேக்ஸ் ரொம்ப ரொம்ப அழகா, கலர்புல்லா இருக்கு... சுவையும் நன்றாகவே இருக்கும். இப்படி ஒரு அசத்தலான படத்துடன் ரெஸிப்பி ஷேர் பண்ணிக்கொண்டதற்கு வாழ்த்துக்களும், நன்றியும்! ! தொடர்ந்து கலக்குங்க... :-)

அன்புடன்,
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

கலக்குறீங்க விசா.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

வாழ்த்துக்கள், விசா. கப் கேக் நன்ராக இருக்கிரது. நான் செய்து பார்த்து அனுப்புகிரேன்.

alhamdhulillah

வெஜிடேரியன்களுக்கு முட்டைக்கு பதில் வேரு என்ன உபயோகிக்கலாம் என பரிந்துறைக்க முடியுமா????

pkswamy

pkswamy

ஆப்பிள் சாஸ் போடலாம் என் பிரெண்டு உபயோக படுத்தி இருக்காங்க.. நான் செய்ததில்லை
Apple sauce is available in all major American super markets. I dont know about india. The bran i remember is Moto

"Success is to be measured not so much by the position that one has reached in life as by the obstacles which he has overcome."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

விசா கேக் ரெம்ப அழகா இருக்குப்பா.கப் கேக் டிரேயில் கப் கேக் பேப்பர் வைத்து தான் கேக் செய்யனுமா?
அந்த பேப்பர் எங்க கிடைக்கும்.என்ன சொல்லி கேக்கனும்.சாக்லேட் சிப்ஸ் எல்லாம் எங்க கிடைக்குது,நான் செய்து பார்த்துட்டு கட்டாயம் ரிப்லே பன்றேன்.எவ்வளவு நேரம் பேக் செய்யனும்.நான் இது வரை செய்ததே இல்லை.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

எல்லோரும் தாமதமான பதிலுக்கு மன்னித்துக்கொள்ளுங்கள். இங்கே இப்போதுதான் காலை 11 மணி. இப்போதுதான் உங்கள் பதிவுகள் பார்க்க முடிந்தது.

ஹாய் சுரேஜினி,HAJAJASMINE நன்றிகள் :-) செய்து பார்த்து சொல்லுங்கள், எப்படி இருந்ததென்று.

ஹாய் ஸ்ரீ மற்றும் இமா , நன்றிகள் :-)

ஹாய் pksrath, முட்டைக்குப்பதில் பால் விட்டு செய்திருக்கிறேன், ஆனால் இது மாதிரி ஃசொப்ட்டாக வரவில்லை. பரவயில்லை என்றால், முட்டைக்குப்பதில் பால் சேர்த்து அடித்து விட்டு, மாவு சேர்த்ததும் இறுக்கமாக இருந்தால், மீண்டும் சிறிது பால் சேர்த்து செய்து பாருங்கள். Condensed மில்க் சேர்த்தும் செய்யலாம் ஆனால் சுகரை குறைக்க வேண்டி வரும். எந்த அளவுகள் என்பது எனக்கு தெரியவில்லை. நான் ஒரு போதும் செய்ததில்லை

ஹாய் ரேணுகா, நன்றிகள் :-) நொன் - ஸ்டிக் ட்ரேயாயிருந்தால் பேப்பர் கப் தேவையில்லை. இல்லையென்றால், ட்ரேயில் ஒட்டிக்கொள்ள வாய்ப்புண்டு. வேணுமென்றால், சிறிது மாஜரின்/ பட்டர் தடவிவிட்டு செய்துபாருங்கள். இங்கு கடைகளில் பேக்கிங் கப்ஸ் / மஃபின் கப்ஸ் என்று கிடைக்கிறது. வழமையாக கேக்குகளுக்கு தேவையான பொருட்கள் வாங்கும் கடைகளில் கேட்டுப்பாருங்கள் (இங்கு சாதாரண மாவு வாங்கும் கடைகளிலேயே கிடைக்கிறது). சாக்கலேட் சிப்ஸும் அப்படித்தான். க்ரோசரி ஸ்டோர்ஸில் கிடைக்கும்.
செய்து பார்த்து சொல்லுங்கள் :-)

விசா

ஹாய் ரேணுகா, முதலில் சொல்ல மறந்துவிட்டேன். பேக் செய்யும் நேரம் உங்கள் பேக் ட்ரேயின் அளவை பொறுத்தது. என்னுடையது சாதாரண சைஸ் என்பதால் 20 - 25 நிமிடங்கள் எடுத்தது. நீங்கள் செய்யும் போது, ~8 - 10 நிமிடங்கள் கழித்து இடையிடையே திறந்து பார்த்து சரியானவுடன் எடுங்கள். ஒரு குச்சி கொண்டு குத்திப்பார்த்தால் தெரியும்.
விசா

படத்தை பார்ததும் இந்த ரெசிபி மிக நன்றாஹ இருக்கும் போல் தோன்றியது! பால் பெஸ்ட்டாக இருக்கும் என தோன்றுகிறது. செய்து பார்துவிட்டு சொல்கிறேன்!! நன்றி!!

pkswamy

pkswamy

நன்றி விசா.மிக மிக மிக நன்றாக வந்தது.பக்கத்துவீட்டு பி்ள்ளைகளுக்குதான் செய்தேன்.2 கையிலும் 2 எடுத்து விரும்பிச்சாப்பிட்டார்கள்.ஏனென்றால் வேறு வேறு கலர்களில் செய்தேன்.அழகாகவும் சுவையாகவும் நல்ல மணமாகவும் வந்தது.நன்றி.

சுரேஜினி

ஹாய் விசா எனக்கு ரொம்ப நாளா கேக் செய்து பார்க்க ஆசையா இருந்தது உங்க கப் கேக்கை பாத்ததும் செய்து பார்க்கும் ஆவல் அதிகமாகி இப்ப தான் செய்தேன்.ரொம்ப நல்லா வந்தது.நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.இன்னும் இது போல் நிறைய குறிப்புகள் கொடுங்க.இந்த லிங்கில் நான் செய்த கேக்கின் படம் இணைத்துள்ளேன் பாருங்க.என்ன ஒரு கேக் குறையுதேனு பாக்கறீங்கலா செய்ததும் நான் தான் ஆவலில் சாப்பிட்டுவிட்டேன்.அப்பறம் தான் ஞாபகம் வந்து படம் எடுத்தேன்
அன்புடன் பிரதீபா
http://community.webshots.com/album/568754994VmdAed

சுரேஜினி, ரொம்ப சந்தோசமாக இருக்கிறது :-) செய்து பார்த்து பின்னூட்டம் அளித்தமைக்கு நன்றி.

பிரதீபா, உங்கள் படம் பார்த்தேன். நன்றாக இருக்கின்றது. நல்ல சொஃப்டாக இருக்கும் போலிருக்கின்றது :-) செய்துபார்த்து படமும் காட்டியதற்கு மிக்க நன்றிபா.. (உங்கள் படத்தை பார்த்ததும் கப் கேக் சாப்பிட ஆசை வந்து விட்டது...லன்ச் டைம் வேற.. :-))
விசா

ஹாய் விசா இப்பவே வாங்க சேர்ந்தே சாப்பிடலாம்.ஆமாப்பா நல்லா சாப்டாக இருந்தது
அன்புடன் பிரதீபா