தாய்ப்பால் - நிறுத்த முடியவில்லை! என்ன செய்ய?

தாய்ப்பால் நிறுத்துவது பற்றி ஏற்க்கனவே நிறைய தோழிகள் ஆலோசனைகளை கேட்டும், சொல்லியும் இருக்கிறார்கள். ஆனால், எனது கேள்விக்கு அங்கே பதில் கிடைக்கததால், இங்கே பதிவு செய்கிறேன்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

நான் எனது குழந்தைக்கு புட்டிபால் கொடுப்பதில்லை...மூன்று முறை ஆவின் பால் குடுத்து பார்த்தேன். ஒத்து கொள்ளவில்லை. ( லூஸ் மோஷன் ஆகிவிட்டது). டாக்டர்-ம ஆவின் பால் கொடுக்க கூடாது, உங்கள் மகனுக்கு ஒத்து கொள்ளவில்லை என்கிறார். அதனால், தாய்ப்பாலுக்கு பதிலாக, ஆவின் பால் குடுத்து பழக்கப்படுத்த முடியவில்லை.

இப்போது எனது மகனுக்கு மாதம் முடிந்து விட்டது. தாய்ப்பால் பற்றிய விவரம் நன்கு தெரிகிறது. இரவில் மட்டுமல்ல... பகலிலும் கண்டிப்பாக தாய்ப்பால் வேண்டும்... தாய்ப்பால் கொடுத்தால்தான் தூங்குகிறான். தூங்கும்போது மட்டுமில்லை... சாதாரணமாக சாப்பாட்டு ஊட்டினாலும்..... கொஞ்சம் சாப்பிட்டா பிறகு, வாயை திறக்க மாட்டான். (இன்னும் தான்!) அப்புறம் சிறுது நேரம் கழித்து தாய்ப்பால் நாடி வருவான்.... என்ன செய்வது என்றே புரியவில்லை.. எப்படி நிறுத்துவது? முழுமையாக நிறத்தவும் விருப்பம் இல்லை... ரெண்டு வயது வரை ஒரு நாளைக்கு ஒரு நேரமாவது கொடுக்க வேண்டும் என்று விரும்பிகிறேன். ஆனால், இப்பவே அவன் விவரம் தெரிந்து தாய்ப்பால் நாடி வருகிறான்.. இன்னும் தொடர்ந்தால், நிறுத்துவது மிகவும் சிரமம் என்பதும் தெரிகிறது,.... நான் என்ன செய்ய? மிகுந்த குழப்பத்துடன் இதை பதிவு செய்கிறேன். அவன் சரியாக மற்ற உணவுகளை சாப்பிடுவதும் இல்லை.. அதனால், தாய்ப்பாலை நிறுத்த, மனதளவில், ரொம்பவும் வருத்தமாக இருக்கிறது. (அவன் ஒழுங்கா குடிக்கறதே தாய்ப்பால் மட்டும் தான்... அதையும் நிறுத்திட்ட...?? )

முந்திய ஆலோசனைகளில்... இரவில், புட்டிபால் கொடுக்க சொல்லி இருக்கிறார்கள். ஆனால், நான் மொத்தத்திலே புட்டிபால் கொடுப்பதில்லை... வேறு ஏதாவது மற்று வழி இருக்கிறதா??? முதலில்... பகலில் நிறுத்த ஏதாவது வழி சொல்லுங்கள்...

குழப்பத்துடன்,
சிஜா.

இரண்டு நாள் குழந்தையை அம்மா வீட்ல விடுங்க.
சாப்பிடும்போது அவனுக்கு பிடிச்ச விஷயத்தை பேசிக்கிட்டே உங்க அம்மாவ அவனுக்கு ஊட்டச்சொல்லுங்க

வணக்கம்.
குழந்தைக்கு இப்பொழுது என்ன வயது ஆகிரது?மாதம் முடிந்து விட்டது என்றால்,ஒரு வருடம் ஆகிரதா?நீங்கள் மாட்டுப்பால் கொடுப்பதற்கு பதிலாக,பவுடர் பால் ட்ரை பண்ணலாம்.முதலில் பகலில் நிறுத்துவதுதான் சுலபம்.நீங்கள் சொன்னது போல், 2 வருடம் பால் கொடுத்தல், இந்த காலத்து குழந்தைகள் விவரம் அதிகம், அதனால், பால் நிறுத்துவது கஷ்டம்.பசி எடுக்கும்போது,முதலில் 30மி.லி,அளவு பால் கொடுங்கள்.நீங்கள் பால் நிறுத்த நிறுத்த தான் குழந்தை பாட்டிலில் பால் குடிக்கும்..அல்லது, நீங்கள் சிப்பி கப் ட்ரை பண்ணலாம்..குழந்தை விளையாடும் பொழுது, கொடுங்கள்,விளையாடிக்கொண்டே,
குடித்து பழகலாம்.நீங்கள் குழந்தை அழுகிறதே என்று கொடுத்தால், பழகாது, அழும் போது, ஒரு முறை பாட்டிலில் ட்ரை பண்ணுங்கள், பிறகு, நீங்கள் கொடுங்கள்.திட உணவு அதிகப்படுத்துங்கள்..பிடித்த மாதிரி, பிடித்த உணவை கொடுங்கள்.நீங்கள் திட உணவு என்ன என்ன கொடுக்கிறீர்கள் என்று சொன்னால், வேறு என்ன என்ன கொடுக்கலாம் என்று எனக்கு தெரிந்ததை, நான் சொல்லலாம்.நீங்கள் குழந்தையை எப்படி தூங்க வைக்கிறீர்கள். அதைப் பொறுத்தும் இருக்கிறது.

ஹாய் பரிமளா!

அம்மா வீட்டுல விட முடியாது.. ஏன்னா, அம்மாவிற்கு இவனை பார்த்துக்கொள்ளும் அளவிற்கு உடல்நிலை இல்லை. நான் சென்னை ல இருக்கேன். சொந்த ஊரு திருநெல்வேலி ல இருக்கு.... நானே, ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவ... போயி ரெண்டு வாரம் இருந்து பார்த்துவிட்டு வருகிற மாதிரியான சூழ்நிலை... அதனால், அவர்களால் உதவ முடியாது.
மேலும், ரெண்டு நாள் (ஆனாலும்) என் மகன் இல்லாமல் இருக்க முடியாது. (எல்லா அம்மாவும் சொல்றது தான்! நானும் விதிவிலக்கு இல்லை.அவன் பிறந்ததில் இருந்து,ஒரு நாளும் இருந்ததில்லை அவன் இல்லாம!).

ஹாய் karkav!
குழந்தைக்கு 16 மாசம் ஆகுது..
சிப்பி கப் ஏற்கனவே நான் பயன்படுத்துகிறேன்... சில நேரம், தண்ணீர், ஜூஸ் எல்லாம் அதில்தான் குடிப்பான். அதில் பிரச்சனை இல்லை. பால் பவுடர் அனைத்து குழந்தைகளுக்கும் ஒத்து கொள்ளுமா? என்ன பிராண்ட் வாங்குவது? டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டுமா?

நீங்கள் சொன்னதுபோல், விளையாடும்போது... கொடுக்க முயற்சிக்கிறேன். திட உணவை பொறுத்தவரை, இட்லி, சாதம், சத்து மாவு கஞ்சி, உப்புமா, பழங்கள், காய்கறிகள், கொடுக்கிறேன். காய்கறிகளை, சாதத்தோடு சேர்த்து கொடுக்கிறேன். பருப்பும் கூட அப்படியே! பழங்களில், ஆப்பிள்-எ அவித்து கொடுக்கிறேன். ஆரஞ்சு ஜூஸ் குடிக்கறான். (இப்போ கொஞ்ச நாளாக தான்... முன்னாடி குடிக்கவே மாட்டான்). முன்னாடி வாழப்பழம் விரும்பி சாப்பிட்டான். இப்போது சாப்பிடுவதே இல்லை. சில நேரம், சப்போட்டா! எப்பவாவது பேரீச்சை!

காய்கறிகள் பொதுவாக வீட்டில் சமைப்பது எல்லாமே கொடுக்கிறேன். பெரும்பாலும், பருப்பு போட்டு கூட்டு மாதிரி பண்ணி, அதோட சாதம் சேர்த்து பிசைந்து ஊட்டுவேன். அப்புறம், தயிர் சாதம்! எந்தெந்த உணவுவகைகளில், நெய் சேர்க்க முடியுமோ, அதில் சேர்த்து கொள்வேன். கடந்த வாரத்திலிருந்து, ஓட்ஸ் சாப்பிட ஆரம்பித்துள்ளான். (முன்னாடி சாப்பிடவே மாட்டான்!) கீரை ஒன்று அல்லது ரெண்டு முறை கொடுக்கிறேன்(ஒரு வாரத்தில் ). முட்டை முன்னாடி விரும்பி சாப்பிட்டான். இப்போது, சாப்பிடுவதில்லை...

முதலில், மனதளவில் நான் தயார் ஆக வேண்டும். வேறு என்ன மாதிரி அவன் கவனத்தை மாற்றலாம்? மாலையில் சிறிது நேரம் பக்கத்தில் உள்ள குழந்தையோடு விளையாட செல்வோம்... மற்ற படி, வீட்டுள்ளே தான் வாழ்க்கை! எப்போதும் என்னுடன் தான் இருந்தாக வேண்டும். நாள் முழுவதும், நானும் என் குழந்தையும் மட்டுமே! வேறு வழி இல்லை. என் கணவர் காலையில் போனால், திரும்பி வர இரவு ஆகிவிடும்.So, அவரால், ஏதும் உதவ முடியாத நிலை.

அப்புறம், தூங்கும் போது, பால் குடித்து கொண்டே தான் தூங்குகிறான். ( பற்கள் பாதிக்க படுமே என்ற பயம் வேறு இருக்கிறது!). இரவிலும், 2-3 தடவ விழிப்பான்.... பால் குடித்துக்கொண்டே தூங்குவான்!. பகலிலும் அப்படியே! ஆனால், பகலில், முழிக்கும் போது தூக்கினால், அழுகை தாங்காது! தூக்கமும் தாய்ப்பாலும் இணைபிரியா விஷயங்கள் என்று அவன் மனதில் பதிந்து விட்டது போலும்!
எங்களுடைய உணவு மற்றும் தூக்க முறைகள் இதுதான்! உங்களது ஆலோசனைகளுக்காக காத்திருக்கிறேன்.
நன்றிகளுடன்,
சிஜா
life is not wat u think! It is more than that!!!

குழந்தைக்கு பாலை கொஞ்ச கொஞ்சமா தான் மறக்கடிக்கனும்.முதலில் 5 வேளை கொடுத்தீங்கன்னா,இப்ப 3 வேளை கொடுக்க ஆரம்பிக்கனும்.அப்புறம் 2 வேளையா மாத்தனும்.அவங்க தூக்கத்தில் இருக்கும் போது,பழக்க படுத்திட்டீங்கன்னா அவங்களுக்கு ரொம்ப ஈஸி.கொஞ்சம் தண்ணியா பாலை கொடுங்க,நான் சர்க்கரை போடுவதில்லை,நீங்க வேணும்னா 1/4 டீஸ்பூன் போட்டு பழக்கபடுத்துங்க!நான் நிடொ(nido) பால் பவுடர் தான்பா கொடுத்து பழக்கினேன்.அதில் வயசுக்கெற்ப பால் பவுடரில் வித்தியாசம் உள்ளது.

முதல் 1 வயது வரை,1-3 வயது வரை,3-5 வயது என அந்த ப்ராண்டில் குறிப்பிட்டு விற்கப்படும்.நான் ஆரம்பத்திலிருந்து இப்ப வரை அதான் கொடுத்து வருகிறேன்.முதலில் குடிக்க மறுக்கும்.நாம் தான் பொறுமையா 1 சிப் குடிச்சாலும் பரவாயில்லைனு மறுபடியும் ட்ரை பண்ணனும்.எப்பவும் பகலில் ட்ரை பண்ணுங்க.ஏதாவது ஒன்னுன்னா உடனே கண்டுபிடிக்கலாம்.ஒத்துக்குச்சுன்னா நைட் ட்ரை பண்ணலாம்.

இல்ல உங்களுக்கு இதை கொடுக்க பயமா இருந்தா,டாக்டரை ஆலோசித்து என்ன பால் பவுடர் கொடுக்கலாம்னு கேட்டு பாருங்க!

வணக்கம்

சுகன்யா சொன்னது போல் கொஞ்சம் கொஞ்சமாக தான் மாற்ற முடியும்.நீங்கள் சொல்வதை பார்த்தால், அவன் நன்கு திட உணவு சாப்பிடுகிறான் என்று நினைக்கிறேன்.அதனால் பால் குறைவாக குடித்தாலே போதும்.சும்ம 2 சிப் பால் குடித்தாலே போதும்.அப்ப அப்ப கொஞ்சம் பால் கலந்து கொடுங்கள்(கஷ்டப்படாமல்).
முதலில் பகலில் பால் குடிப்பதை நிறுத்துங்கள், பிறகு...இரவு மற்றும் பால் குடித்துக்கொண்டெ தூங்குவதை நிறுத்தலாம்.
பசும்பால் குடித்தால் வயிறு சரியில்லை என்று சொன்னீர்கள்.அதனால், எருமை பால் அல்லது பாக்கெட் பால் கூட ட்ரை பண்ணலாம்.முதலில், 20மி.லி பகலில்(மாலை கூட வேண்டாம்)கொடுங்கள்.ஒத்துக்கொண்டால்,அதை ட்ரை பண்ணுங்க..நான் லாக்டோஜன் பயன் படுத்தினேன்.நீங்கள் கூட ட்ரை பண்ணுங்க..பால் குடிக்க மறுத்தால், சுகன்யா சொன்னது போல், சர்க்கரை சிரிது கலந்து கொடுங்கள்..பால் ஒத்துக்கொண்டால், கொஞ்சம் boost, viva மாதிரி கூட கலந்து கொடுங்கள்..அந்த டேஷ்ட் குழந்தைக்கு பிடிக்கும்..

அப்புறம், தூங்க வைக்கும் போது, குழந்தையை மடியில் போட்டு, ஆட்டிக்கொண்டே .....அவனுக்கு பிடித்த பாடலோ அல்லது கதையோ சொல்லி தூங்க வைக்க ட்ரை பண்ணுங்க.முதலில் 5 நிமிடம் ஆட்டுங்கள்(அழுதாலும், கதை சொல்லி) , பிறகு பால் கொடுத்து தூங்க வையுங்கள்.தினமும் நேரத்தை அதிகப்படுத்துங்கள்.கொஞ்ச நாளில் பழகிவிடும்.

மேலும் சில பதிவுகள்