அகத்திக்கீரை சால்னா

தேதி: November 17, 2008

பரிமாறும் அளவு: நான்கு நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அகத்திக்கீரை - சிறிய கட்டு(கொழுந்தாக)
தாளிக்க தேவையான பொருட்கள்;
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
சிறிய வெங்காயம் - 100 கிராம் (நறுக்கிக் கொள்ளவும்)
பூண்டு - 4 பல் ( தட்டிக்கொள்ளவும்)
மிளகாய் வற்றல் - 2
சீரகம் - கால் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
அரைக்க தேவையானவை;
தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்.
வறுத்த அரிசி - 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு - 5.
உப்பு - தேவைக்கு


 

அகத்திக்கீரை ஆய்ந்து அரிசிக்கழனியில் கழுவி வைத்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு சீரகம், உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், வெங்காயம், பூண்டு போட்டு வதக்கி, பின்பு கீரை உப்பு சேர்த்து வதக்கவும்.
பின்பு அரைத்த தேங்காய் கலவையை போட்டு 4 கப் தண்ணீர் சேர்க்கவும்.
குக்கரை மூடி ஒரு விசில் வைத்து இறக்கவும்.
அகத்திக்கீரை சால்னா ரெடி.


இதனை ப்ளைன் ரைஸ் உடன் பரிமாறலாம். சைட் டிஸ் மட்டன் அல்லது பீஃப் அல்லது சிக்கன் ஃப்ரை உடன் பரிமாறலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஆசியாக்கா இந்த சால்னா ரொம்ப நல்லாயிருந்தது.நான் வறுத்த் அரிசி சேர்க்கவில்லை.அது இல்லாமலே நன்றாக இருந்தது.

மகிழ்ச்சி,தனி மாதிரி நானும் உன்னை மேனு என்று அழைக்கிறேன்.எந்த கீரையிலும் செய்யலாம்,முருங்கை,பாலக்,இலட்சகொட்டை என்று.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.